இடுகைகள்

ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிஷர்ட் ஜீன்ஸ் அணிந்து பணி செய்வது பணித்திறனை பாதிக்குமா?

படம்
  cc         ஷாம்பெய்ன் பாட்டிலைத் திறந்து அதில் ஸ்பூன் ஒன்றை போட்டால் அது புதிய பானம் போலவே இருக்குமா? அறிவியல் பூர்வமாக இதற்கு எந்த ஆதாரங்களும் கிடையாது. பொதுவாக குடித்துவிட்டு மீந்த பானங்களில் வெள்ளி ஸ்பூன்களை போட்டுவைத்தால் அதிலுள்ள கேஸ் போகாமல் அப்படியே இருக்கும் என நம்புகிறார்கள். ஆனால் இது உண்மையல்ல. 1994ஆம் ஆண்டு பேராசிரியர் ரிச்சர்ட் ஜரே என்பவர், இதுபற்றி ஆராய்ந்தார். இவர் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். 26 மதுபான சுவையை அறியும் வல்லுநர்களைக் கொண்டு சோதித்தார். இச்சோதனையில் ஸ்பூன் பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் எந்தத வகையில் சுவையை ஊக்குவிக்கவில்லை என்பது உறுதியானது. மதுபானம் சுவையாக கார்பன்டை ஆக்சைடு் வாயுவுடன் இருக்கவேண்டுமா? அதனை குளிர்சாதனப்பெட்டியில் வையுங்கள். போதும். டிஷர்ட் ஜீன்ஸ் அணிந்து பணி செய்வது பணித்திறனை பாதிக்குமா? பாதிக்க வாய்ப்புண்டு. இதெல்லாம் உளவியல் சார்ந்த தன்மை. பல் மருத்துவர் அணியும் வெண்ணிற கோட், சமையல்கலைஞர் அணியும் உடை ஆகியவை அவர் செய்யும் வேலை நமக்கு மட்டுமல்ல அவருக்கும் உணர்த்தும். இதனை என்குளோத்டு காக்னிஷன் என்று கூறலாம

செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் மூளைத்திறனை தொட வாய்ப்புள்ளதா?

படம்
    cc     மிஸ்டர் ரோனி செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் மூளைத்திறனை தொட வாய்ப்புள்ளதா? 1950ஆம் ஆண்டு கணினி கண்டுபிடிக்கப்பட்ட காலம்தொட்டே செயற்கை நுண்ணறிவு சமாச்சாரங்கள் பேசப்பட்டு வருகின்றன. அவற்றை கணினியின் மூளை என்று முதலில் அழைத்தனர். செஸ் விளையாடுவத, மொழிகளை மொழிபெயர்ப்பு செய்வது ஆகியவற்றை முதலில் ஏ.ஐ செயதுவந்தது. மனித மூளையின் செயல்திறனுக்கு ஏற்ற வகையில் செயல்படும் என்று ஏ.ஐ முதலில் கருதப்பட்டது. கணினியின் செயல்திறனும், இணையமும் வேகமாக கூடியபோது, ஏ.ஐ அல்காரித ஆராய்ச்சியும் வேகம் பிடித்தது.கடந்த பத்தாண்டுகளில் நாம் தீர்க்க நினைத்த பல்வேறு பிரச்னைகளை ஏ.ஐ தீர்த்துவைத்துள்ளது. இன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் திட்டங்கள், வணிகம் ஆகியவற்றின் அடிப்படையாக ஏ.ஐ உள்ளது. செயற்கை நுண்ணறிவில் என்னென்ன வகைகள் உண்டு? இன்று ஆழக்கற்றல் என்ற வகையில் சிறப்பானது என்று கூறும்படியான ஏ.ஐ கணினிகள் உருவாகி வருகின்றன. இவை மனிதர்களைப் போன்றவை. எப்படி வீட்டிலுள்ள குழந்தை தன் பெற்றோரைப் பார்த்து தாய்மொழியைப் பேசக் கற்கிறதோ அதைப்போல, ஆழக்கற்றல் ஏ.ஐ கணினி, பல்வேறு பேச்சுகளை அடையாளம் கண்டுபிடித்து சேகரித்த