இடுகைகள்

ஸ்மார்ட் ஸ்ப்ரேயர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்மார்ட் ஸ்ப்ரேயர்- செலவை மிச்சப்படுத்தும் சிறந்த கண்டுபிடிப்பு!

படம்
  ஆந்திர விவசாயி கண்டுபிடித்த ஸ்மார்ட் ஸ்ப்ரேயர்! விவசாயமுறைகளை தொழில்நுட்பங்கள் காலம்தோறும் மேம்படுத்தி  வருகின்றன.  தொழில்நுட்பங்களை ஏற்பதன் மூலம், விவசாயிகளின்  உற்பத்தி கூடுவதோடு, இதற்கான செலவுகளும் குறைகின்றன. அந்தவகையில் ஆந்திரத்தின் அம்ருதலூரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, ஸ்மார்ட் ஸ்ப்ரேயரைக் கண்டுபிடித்துள்ளார்.  கண்டுபிடிப்பாளரான விவசாயி மல்லேபெடி ராமகிருஷ்ணாவுக்கு வயது 50.  இவர், தனது 100 ஏக்கர் நிலத்திற்குப் பயன்படுத்த டிராக்டரில் பொருத்தும்படியான ஸ்மார்ட் ஸ்ப்ரேயரை உருவாக்கியுள்ளார். ஸ்மார்ட் ஸ்ப்ரேயரில் 1,800 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் உள்ளது. இதனை  இயக்க  5 ஹெச்பி மோட்டாரும் உள்ளது. இதன் மூலம் அவரது மொத்த நிலங்களுக்கும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க, 3 லிட்டர் எரிபொருள் தான்  செலவாகியுள்ளது.  ஸ்ப்ரேயரை உருவாக்க பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று பாகங்களை வாங்கியுள்ளார்.   ராமகிருஷ்ணா தனது விவசாயப் பணிகள் போக, ஸ்மார்ட் ஸ்ப்ரேயரை அருகிலுள்ள விவசாயிகளுக்கு  வாடகைக்கும் தந்து வருகிறார். தனது நிலத்தைப் பார்வையிட வரும் பள்ளி மாணவர்களையும் உற்சாகத்துடன் வரவேற்று விளக்கம் தந்து