ஆரிய இந்துமதம் எப்படி போலியாக பௌத்த மத கருத்துகளை நூல்களை நகலெடுத்து உருவாக்கப்பட்டது என விளக்கும் நூல்!
ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம் அயோத்திதாசரின் சொல்லாடல் ப மருத நாயகம் 237 பக்கம் இந்த நூலில் அயோத்திதாசரின் எழுத்துகளின் வழியாக அவர் பார்ப்பன இந்து மதத்தை போலியானது என்று எப்படி ஆதாரத்தோடு கூறுகிறார் என்பதை அறிந்துகொள்ளலாம். அதற்கான ஆதாரங்களை தாசர் எப்படி கூறுகிறார் என்பதை நூலாசிரியர் மருதநாயகம் விளக்கியிருக்கிறார். இதற்காக அயோத்திதாசர் எழுதிய நூல்கள் பலவற்றையும் படித்து சான்றுகளை எடுத்து தொகுத்திருக்கிறார். இந்துமதம் என்பதே போலியானது, பௌத்த மத கருத்துகளை எடுத்து வடமொழியில் மொழிபெயர்த்து, இடைச்செருகல்களை செய்து, ஆபாச கதைகளை உள்ளே வைத்து உருவானது என அயோத்திதாசர் பல்வேறு பாடல்கள் வழியாக நிறுவுகிறார். அதோடு இடைச்செருகல் பற்றி தனியாக எட்டாவது அத்தியாயத்திலும் விளக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தை எதிர்கொள்ள முடியாமல் சைவ, வைணவ மதங்கள் போலியான கதைகளை உருவாக்கியது பற்றிய கருத்துகளும் எடுத்து வைக்கும் வாதங்களும் பொருத்தமானவையாக தோன்றுகின்றன. நூலில் மொத்தம் எட்டு அத்தியாயங்கள் உள்ளன. அதில் அத்தனையிலும் பௌத்த மதம், புத்தர் எப்படியானவர், அவரது பெயர்கள் என்னென்ன, அவரது கரு...