இடுகைகள்

நேர்காணல்: தமிழில் - லாய்ட்டர் லூன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தியோ ஏஞ்சலோ பவுலோஸ்: நாடிழந்தவர்களுக்கான இரங்கற்பா

படம்
எப்படி குறைந்த அளவிலான தொகையினைக் கொண்டு திரைப்படத்தினை உருவாக்குகிறீர்கள்?        நாங்கள் 9,000 மீட்டர் படம் எடுக்கத் தேவையான பொருட்களோடு உதவியாளர் இல்லாமல் சமாளித்துக்கொள்ளக்கூடிய ஒலிப்பதிவாளர் எங்களிடம் உள்ளார். அவர் ஒருமுறை தன்னுடைய அமைப்புகளை சரியாக ஒழுங்கமைத்துவிட்டால் மைக்ரோபோன், மற்றும் ஒலிப்பதிவுக் கருவிகளை யாரும் தனியாக மேற்பார்வை செய்யவேண்டிய அவசியம் இல்லை. தட்பவெப்பநிலை குறித்து கவலைப்படாமல் 25 நாட்களில் காட்சிகளை படமாக்குவோம் என்றாலும் மழை பெய்யும் காலத்தில் வேறு வழியே இல்லை. படப்பிடிப்பை தள்ளிவைத்துவிட்டு கிராமத்தார்களின் வீட்டில் தங்குவோம். அங்கு உணவு, விளக்குகள் என எவையும் இருக்காது என்பதால் எங்களுக்கு அச்சூழல் பெரும் போராட்டமாகவே இருக்கும். கையில் பிடித்துக்கொள்ளக்கூடிய விளக்கு, 500 கி.வாட் மின்மாற்றி சாதனம், இரண்டு மின்கலன்கள், சிறிய எடுத்துச் செல்லும் படியான மின்சக்தி அளிப்பான்  ஆகியவற்றை இது போன்ற இடங்களுக்கு செல்லும் போது வாடகைக்கு எடுத்துக்கொள்வோம். மேலும் இப்பொருட்களை படப்பிடிப்புத்தளத்திற்கு  கொண்டு செல்லவும், சில சமயங்களில் நாங்கள் உறங்கப்

தியோ ஏஞ்சலோ பவுலோஸ்(உலர்ந்த ஆப்பிள் நிறைவுப்பகுதி)

படம்
படத்தில் வரும் பெருமழைக்கான இடம் என்ன? பெருவெள்ளமாக வரும் படத்தில் மூழ்கடிப்பது போலான தன்மையை ஏற்படுத்துகிறது ? விழாவினைக் காப்பாற்றவே அம்மழை பெய்கிறது. மேலும் இதனை நீங்கள் உங்கள் விருப்பம் போல பலவகைகளிலும் புரிந்துகொள்ளமுடியும்: உவமை, உருவகம் கடலில் தனிமையில் இருக்கும் முதிய மனிதரைக் காட்டுகிற நாடகத்தனமான காட்சி என்றுகூட கொள்ளலாம். இதன் இயக்குநரான அலெக்ஸாண்டரை நாம் மறந்துவிடக்கூடாது. காட்சிகளை அமைப்பது, அரங்கமைப்பு உருவாக்குவது, சூழலை செம்மைப்படுத்துவது, எப்போது மழை, இரவுக்காட்சி தொடங்குவது குறித்து முடிவு செய்வது அவர்தான். இங்கே மற்றொரு காட்சியினை முன்னர் விவாதித்தோம். இயக்குநரும் அவரது காதலியும் சந்திக்கும் காட்சி குறித்து பேசுகிறேன்.        இங்கே நாம் முதல்நிலையான புனைவிற்குள் செல்கிறோம். படம் இயக்குநரின் ஒரு நாள் வாழ்க்கையைப் பற்றி சுருக்கமாக பேசுகிறது. இது சில குறிப்பிட்ட மணி நேரங்களைக் கொண்டது. இயக்குநர் தன் வீட்டிற்கும் படப்பிடிப்பு நடக்கும் அரங்கிற்கும் செல்கிறார். அவர் அவ்விடங்களுக்கு நடந்து செல்லும்போது அவரது மனநிலையின் இருப்பு இசை

தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
கதாபாத்திரங்களோடு பார்வையாளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வது என்று சுருக்கமாக கூறலாமா?        நான் என்னுடைய பதிவுகளைப் பார்க்கும்போது என் முந்தைய படங்களில் உண்மையின் மறுகட்டமைப்பு எந்த ஒரு அடையாளப்படுத்தல்களையும் ஆதரிக்கவில்லை என்பதற்கு சான்றாக உள்ளது. நீண்ட கடினமான காலகட்டத்திற்கு பிறகு உணர்வுகளுக்குத் திரும்பியிருக்கிறோம். சிதெராவிற்கு பயணம் படத்திற்கு கிடைத்த பலன்கள் அத்தனையையும் மற்ற படங்களிலிருந்தும் நான் பெற்றிருக்கிறேன். ஆனால் அவை தொடர்ந்து நீடிக்கவில்லை என்றாலும் இந்த உணர்வுகள் என்னைத் தொடர்ந்து செயலாற்றத்தூண்டுகின்றன. எனது ஓவியங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவு நுணுக்கமாக விஷயங்களை தீட்ட முயற்சி செய்கிறேன். ஆனால் இது பழைய ஏஞ்சலோ பவுலோஸோடு வேற்றுமைப்படுத்தவோ, வஞ்சப்புகழ்ச்சி போன்றவற்றை விலக்கிவிடவில்லை. உதா. ராணுவம் காணாமல் போன முதிய மனிதரை கண்டுபிடிப்பதற்காக கிராமத்தில் வந்து நிற்கும் நிலைகள்...        ஆமாம். பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளும் விதமாக வீட்டைவிட்டு வெளியே வர மறுக்கும் ஸ்பைரோஸ் முன்னமே வன்முறையில் பாதிக்கப்பட்டு இருக்கிறான் என

தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
மக்கள் பலரும் இப்படத்தினை சோகமான படம் என்று கூறுகிறார்கள். கெட்டதை முடிவாகக் கொண்டுள்ள படம் என்றும் கூட கூறுகிறார்களே?        சோகம் பரந்துபட்ட வருத்தம் என பரிகாரம் காணமுடியாத இழப்பினால் ஏற்படுபவையே அவை. ஆனால் இறுதியில் நேர்மறையாக அல்லது எதிர்மறையாக என்றில்லாது ஒரு தெளிவான முடிவிற்கு படம் கொண்டு செல்கிறது. முன்னே செல்ல இது ஒன்றுதான் வழி. சுற்றியிருக்கும் நவீன உலகம் அவரை அதிருப்திக்கு உள்ளாக்குகிறபோது அலெக்ஸாண்ட்ரோஸ் கற்பனைரீதியான பயணத்தை படத்தில் ஏற்படுத்திக்கொண்டு தன்னை இறந்த காலத்திலிருந்து மீட்டுக்கொள்கிறார். வேட்டைக்காரர்கள் படத்தினைப் பற்றிப் பேசும்போது வலதுசாரிகளின் உணர்வுகளைப் பேசுகிறது என்று கூறினீர்கள். இந்தப்படம் இடதுசாரிகளினைக் குறித்ததா? குறிப்பிட்ட வகையிலான இடதுசாரி எனலாம், ஆனால் அனைத்து இடதுசாரிகளையும் அலெக்ஸாண்டரோடு ஒப்புமை படுத்தமுடியாது. இந்தப்படம் வாழ்க்கைக்கான மற்றும் கோட்பாடுகளை மறுகட்டமைப்பு செய்யாமல் நவீன மனிதன் தன் மனநிலையை மாற்றிக்கொள்வது இயலாத ஒன்று என்பதைப் பேசுகிறது. ஒருவரின் நினைவை பிடித்து நிறுத்தாமல் அதனை வரிசைப்படுத்

நேர்காணல்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
முதல் விஷயமாக இதில் நாம் கவனிப்பது கப்பலிருந்து பிரிந்து வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் முதிய மனிதரைக் கூறலாம். காலத்தைப் பொறுத்தவரையில் நிழலை விட அவர் அதிக மதிப்பானவரில்லை. இயக்குநரின் தங்கையான ஊலா தான் வராததற்கான காரணத்தை விளக்குகிறார்: யாருக்கு கவலை? அப்பாவுக்காக இல்லை. இதற்கெல்லாம் என்ன அர்த்தம், ஏன் நாம் நிழலைத் துரத்துவதில் நம் நேரத்தை வீணடிக்கவேண்டும்? புனைவுக்குள் புனைவு என்பதாக அதன் தொடக்க நிலையிலிருந்து மெல்ல நமது கண்களில் முதிய மனிதனின் உருவம் வளரத்தொடங்குகிறது. இதற்காக அவரை ஒரு சித்திரமாக வரைவது போல காட்ட விரும்பி இதில் ஜூம் லென்ஸ்களை பயன்படுத்தினேன். படத்தின் முதிய மனிதர் கூறுகிறார்: ‘இகோ இமே’ என்று..? ஆமாம். இயக்குநர் இறுதியாக அவரது கதாபாத்திரத்தை கண்டுபிடித்துவிட்டார். வெள்ளைக் கப்பலிலிருந்து அவர் திரும்ப வருவது ஒடுக்கப்பட்ட தன்மையிலான கடந்த காலத்தை குறிக்கின்ற அடையாளமாக கூறலாமா? அப்படியும் கொள்ளலாம். கிரீசில் சமநிலையான அரசியல் நிலைமை இருக்கும்போது திடீரென அவலமான இறந்த காலத்தை அடையாளப்படுத்துவதாக அந்தக் காட்சியைக் கருதலாம். கிரீ