தியோ ஏஞ்சலோ பவுலோஸ்(உலர்ந்த ஆப்பிள் நிறைவுப்பகுதி)
படத்தில் வரும்
பெருமழைக்கான இடம் என்ன? பெருவெள்ளமாக வரும் படத்தில் மூழ்கடிப்பது போலான தன்மையை ஏற்படுத்துகிறது?
விழாவினைக் காப்பாற்றவே அம்மழை
பெய்கிறது. மேலும் இதனை நீங்கள் உங்கள் விருப்பம் போல பலவகைகளிலும் புரிந்துகொள்ளமுடியும்:
உவமை, உருவகம் கடலில் தனிமையில் இருக்கும் முதிய மனிதரைக் காட்டுகிற நாடகத்தனமான காட்சி
என்றுகூட கொள்ளலாம். இதன் இயக்குநரான அலெக்ஸாண்டரை நாம் மறந்துவிடக்கூடாது. காட்சிகளை
அமைப்பது, அரங்கமைப்பு உருவாக்குவது, சூழலை செம்மைப்படுத்துவது, எப்போது மழை, இரவுக்காட்சி
தொடங்குவது குறித்து முடிவு செய்வது அவர்தான்.
இங்கே மற்றொரு காட்சியினை
முன்னர் விவாதித்தோம். இயக்குநரும் அவரது காதலியும் சந்திக்கும் காட்சி குறித்து பேசுகிறேன்.
இங்கே நாம் முதல்நிலையான புனைவிற்குள் செல்கிறோம். படம் இயக்குநரின்
ஒரு நாள் வாழ்க்கையைப் பற்றி சுருக்கமாக பேசுகிறது. இது சில குறிப்பிட்ட மணி நேரங்களைக்
கொண்டது. இயக்குநர் தன் வீட்டிற்கும் படப்பிடிப்பு நடக்கும் அரங்கிற்கும் செல்கிறார்.
அவர் அவ்விடங்களுக்கு நடந்து செல்லும்போது அவரது மனநிலையின் இருப்பு இசைத்துணுக்கினால்
கோடிட்டு காட்டப்படுகிறது. அவர் தன் பயணத்தில் சந்திக்கும் அனைவரையும் வரவேற்கிறார்.
நாடக அரங்கில் அவரைக்கண்டு காதல் கொள்ளுபவள் உண்மையில் அவருடைய சகோதரியாக இருக்கிறாள்.
படத்திற்குள் வரும் படத்தில் அவர்களிருவருக்கும் நிகழும் பாலுறவு குறித்து அலங்காரமில்லாமல்
குறிப்பால் உணர்த்தப்படுகிறது. அவள் அவனிடம் ‘என்னைவிட்டுப் போகாதே’ என்று கெஞ்சுகிறாள்.
ஆனாலும் அவன் அங்கிருந்து கிளம்பிவிடுகிறான். தன்னைத் தேடி அறியும் பயணத்தை அவன் தொடங்குகிறான்.
படத்தில் மேடையில்
நிகழ்த்தப்படும் நாடகத்தின் பெயர் என்ன?
இப்சனின் ஹெட்டா கப்ளர் எனும் நாடகம்தான் அது. அதில் நாயகி இறுதிப்
பகுதியில் தற்கொலை செய்துகொள்வாள். நான் அதன் இறுதிப்பகுதியை வேறு விதமாக மாற்றியமைத்தேன்.
இப்சனுடைய நாடகத்தில் அவளது தற்கொலை நிகழ்வது ஒரு அறையில் மற்றும் மற்றவர்கள் அவளை
கண்டுபிடித்ததும் ‘இது முடியவில்லை’ என்று கூறுவார்கள். நான் சுற்றியுள்ள சூழலை சற்று
மாற்றினேன். அந்த நாடகம் மாயைகளை இழப்பது குறித்தது ஆகும். எனது கருத்துக்கு பொருத்தமான
விளக்கமாக அமைந்தது.
நாடகத்திற்குள்
நாடகம் என்று மறுபடியும் நீங்கள் ஒரு சார்புநிலையை மேற்கொண்டு இருக்கிறீர்களே?
ஒரு தந்திரமான முயற்சியாக படத்தின் இறுதியில் நான் ஒலிபெருக்கியில்
ஒரு குரலானது ஒன்று, இரண்டு.. ஒன்று இரண்டு… ஒன்று இரண்டு மூன்று நான்கு என்று பிஏ
அமைப்பை சோதனை செய்வது போல் வரும். அதில் ஒலிப்பது என்னுடைய குரலாகும். மேலும் இத்தாலிய
உச்சரிப்பு கொண்டு ஜியுலியோ ப்ராகி கிரீக்கில் சில வரிகள் பேசுவது போல குறும்பாக பயன்படுத்தி இருப்பேன். கிரீக் மக்களுக்கு
அவருடைய உச்சரிப்பு எளிதில் கவனிக்கக் கூடிய ஒன்று. உண்மைக்கும் புனைவுக்குமான மற்றுமொரு
விளையாட்டு என்று கூட இதனைக்கூறலாம்.
இரண்டு கதைகள்,
முதன்மையானது ஒன்று இரண்டாவதாக ஒன்று இரண்டாவது சில சமயங்களில் எதிரிடையாகவும் மாறுகிறது
என்பது முக்கியமான நுட்பமான நான் கருதுகிறேன்
உண்மைதான். இப்படத்தினை பல நிலைகளில் வாசிக்கும்போது உண்மையான யதார்த்த
கதை போலவும், ஆனால் அதே நிலையில் கனவு போன்றதாகவும் (எ.கா முதிய மனிதர் பனியில் விசிலடிக்கும்
காட்சி) அதே நேரத்தில் முழுக்க கனவு நாடகம்
போன்று இல்லாமலும் இருக்கும். உண்மை என்பது புனைவை விட வேறுபட்ட தன்மையைக் கொண்டது.
மானோஸ் கட்ரகிஸ் என்ற நடிகரை முதிய மனிதராக நடிக்கத் தேர்ந்தெடுத்ததின் காரணம் அவரது
உடல் மற்றும் அறம் குறித்தவை ஸ்பைரோஸூடன் மிகவும் பொருந்தி வந்ததே காரணமாகும். அவர்
படப்பிடிப்பு முடிந்தவுடன் இறந்துபோய்விட்டார். புரட்சிகர காலத்தில் உயிர்பிழைத்து
வாழ்ந்திருக்கிறார். தனது அரசியல் நிலைப்பாட்டிற்காக சிறை செல்கிறார். அவர் இறப்பதற்கு
சரியான இடத்தை தேடிக்கொண்டேயிருந்திருக்கிறார். அதனை இப்படம் அவருக்கு வழங்கியிருக்கிறது
என்றே நான் கருதுகிறேன். அவர் இறந்த தருணத்தில் அவர் நடித்த இணையற்ற கதாபாத்திரத்தின்
முடிவோடு படமும் நிறைவடைகிறது. இறந்த காலத்திற்கு இரு முகங்கள் இருந்தால் உண்மையில்
அவை திடீரென ஒரே சமயத்தில் மறைந்துவிடுகின்றன என்று கூறலாம்.
மூன்றாவது முறை
நாடு கடத்துதல் பற்றி ஏன் முதிய மனிதர் பேசுகிறார்?
முதலாவது சம்பவம் நிகழ்வது 1922 கபாஸ்ரோபே எனுமிடத்தில் முஸ்தபா கெமால்
என்பவரிடத்தில் கிரீக் தோற்றுப்போய் சரணடைகிறது(படத்தில் நோயுற்ற வயதான பெண் கூறுகிறாள்).
இரண்டாவது நாடு கடத்துதல் என்பது சிவில் போரின் பிறகு நிகழ்கிறது. மூன்றாவது, படத்தில்
கூறப்படுகிறது. மரணம் மெல்ல நெருங்கி வருகையில் அமைதியான அழைப்பு என அழைக்கப்படும்
இந்தப் பகுதியில் முக்கியமான மைய இசையின் நடுவில் அதைக் குறிக்கும் வண்ணம் ட்ரம்பெட்
இசைக்கப்படுகிறது.
சிதெராவிற்கு பயணம்
என்று ஏன் இந்தப்படத்திற்கு பெயர் வைத்தீர்கள்?
சிதெரா எனும் தீவை கவிஞர்கள் அன்பின்
தீவு, அப்ரோடைட் தேவதையின் தீவு என்று கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த தலைப்பு படத்தின்
உள்ளே இருக்கும் உற்சாகத்தை பிரதிபலிப்பது போல் உள்ளது. இதற்கு முன்னும் இந்த வகையில்
சிறப்பாக செயல்பட்டு இருக்கிறேன். 36 நாட்கள் படத்திற்கு 1909 ஆம் ஆண்டின் நாட்கள்
எழுதிய காவஃபை பெரும் தூண்டுதலாக இருந்தார். மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் படத்திற்கு பயணம்
செய்து பொருட்களை விற்பவர்களும், நிழல் நிகழ்ச்சிகளும் எனக்கு தூண்டுதலாக இருந்தன.
நீங்கள் ஒரு கவிதையைத்
தேர்ந்தெடுக்கவேண்டும். அது உங்கள் படத்தின் உள்ளே இருக்கும் விஷயங்களை கூறுவதாக இருக்கவேண்டும்
என்றால் எதனைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
‘நதியில்
முதியவன்’ எனும் செஃபேரிஸ் எழுதிய அனைத்தையும்
நேரடியாக பேச விரும்புகிறேன் / இந்தப்பரிசு என்மீது வைத்தும் கொடுக்கப்படலாம் என்னும்
கவிதையைத்தான் கூறுவேன்.
(இப்பகுதியோடு உலர்ந்த ஆப்பிள் அத்தியாயம் நிறைவுக்கு வருகிறது)