நேர்காணல்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்











முதல் விஷயமாக இதில் நாம் கவனிப்பது கப்பலிருந்து பிரிந்து வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் முதிய மனிதரைக் கூறலாம்.

காலத்தைப் பொறுத்தவரையில் நிழலை விட அவர் அதிக மதிப்பானவரில்லை. இயக்குநரின் தங்கையான ஊலா தான் வராததற்கான காரணத்தை விளக்குகிறார்: யாருக்கு கவலை? அப்பாவுக்காக இல்லை. இதற்கெல்லாம் என்ன அர்த்தம், ஏன் நாம் நிழலைத் துரத்துவதில் நம் நேரத்தை வீணடிக்கவேண்டும்? புனைவுக்குள் புனைவு என்பதாக அதன் தொடக்க நிலையிலிருந்து மெல்ல நமது கண்களில் முதிய மனிதனின் உருவம் வளரத்தொடங்குகிறது. இதற்காக அவரை ஒரு சித்திரமாக வரைவது போல காட்ட விரும்பி இதில் ஜூம் லென்ஸ்களை பயன்படுத்தினேன்.

படத்தின் முதிய மனிதர் கூறுகிறார்: ‘இகோ இமே’ என்று..?

ஆமாம். இயக்குநர் இறுதியாக அவரது கதாபாத்திரத்தை கண்டுபிடித்துவிட்டார்.

வெள்ளைக் கப்பலிலிருந்து அவர் திரும்ப வருவது ஒடுக்கப்பட்ட தன்மையிலான கடந்த காலத்தை குறிக்கின்ற அடையாளமாக கூறலாமா?

அப்படியும் கொள்ளலாம். கிரீசில் சமநிலையான அரசியல் நிலைமை இருக்கும்போது திடீரென அவலமான இறந்த காலத்தை அடையாளப்படுத்துவதாக அந்தக் காட்சியைக் கருதலாம். கிரீஸ் தேசம் சர்வாதிகாரத்தின் பிடியில் ஏழு ஆண்டுகள் இருந்ததனால் தற்போது வரை நீடிக்கும் பாதுகாப்பு மற்றும் சிவில் போர் குறித்த தாக்கங்களை விளைவுகளை திறப்பதாக உள்ளது. இறந்தகாலம் நினைவுகளில் திரும்புவது நிகழில் இறப்பது என்று கொள்ளலாம்.

அழகான வெள்ளை நிற கப்பல் துக்ககரமான இறந்த காலத்தை பரிகசிக்கிறது; அந்த வகையில் நினைவுகளுக்கு முதல்தரமான ஈமச்சடங்குகளும் கூட. முதல்முறையாக வயதான மனிதரைப் பார்க்கும்போது அவர் ஒரு தொந்தரவான பொருள் என்பதாகவே ஒரு கருத்து மனதில் எழுகிறதே?

பயமானது இருபுறங்களிலும் உள்ளது. அவரது மனைவி அவரைக் கண்டே பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதால் சாப்பிட்டீர்களா? என்று கேட்கக் கூட அச்சப்படுகிறாள். நாகரீகமான ஒரு தன்மை கண்ணியமான நாணம் அவளின் இளகிய முதிராத மனம் கேட்கும் மற்ற கேள்விகள் அவளது இதயத்திலிருந்து வாய் வழியாக வருவதையும் தடுத்துவிடுகிறது. இது ஏறத்தாழ அவரது வருகையை சந்திப்பதை தவிர்த்து கதவை மூடிவிடுவது போல என்று கூறலாம். அவள் ஏமாற்றப்பட்டிருப்பது போல அவள் உணர்ந்திருக்கலாம்.

ரஷ்யா குறித்து மழைக்காலத்தில் ஏகத்திற்கும் உறைபனி பொழிகிறது என்று அவர் கூறுகிறாரே?

அது இயல்பானது. கிரீஸ் நாட்டின் மீது இதயம் முழுக்க அன்பு நிறைந்த மனிதராக அவர் வேறு நாட்டிற்கு சென்றுள்ளார். அவர் வேறு ஒரு நாடு குறித்த சிந்தனைகளை வெளிப்படுத்த முடியாது. ‘இத்தனை ஆண்டு கால குளிரிலும் நான் ஆசைப்பட்டது அனைத்தும் வீடு திரும்புவது குறித்துத்தான்’ என்று கூறுகிறார். அவர் இறுதியில் தன் மூலமான ஆதாரங்களை அடைந்து திருமணம் செய்யவும் தற்காலிக வாழ்க்கையினை விரும்புகிற அவர் இடைவெளியை விரும்புவதில்லை மேலும் அவர் தப்பித்து ஓடவும் முடியாது.

தற்காலிகமான வாழ்வை வாழவும் ஒப்புக்கொள்ளாமல் முதிய மனிதர் மறுதலித்து கிளம்பி விடுகிறாரே?

அவர் தன்னை அந்த இடத்திற்கு முற்றிலும் அந்நியமாக உணர்வதால் அவர் அங்கு தங்கியிருக்க முடியவில்லை. அது முதியவளின் வீடு அவருடையது அல்ல. மீண்டும் அவர்கள் தம்மை வயதான தன்மையிலும் இணைத்துக்கொள்ள ஏதேன்ஸ் சென்ற பொழுதில் இரவு ரயில்நிலையம் அருகே தங்கிய விடுதி ஒன்றில் மகிழ்ச்சியாக இருந்ததைக் கூறலாம். முதியவள் தன் வீட்டை விட்டு விலகமாட்டாள். தன்னை சமையலறையிலேயே அடைத்துக்கொள்வாள்.

சிதெராவிற்கு பயணம் என்பதை காதலை மறு கண்டுபிடிப்பு குறித்த கனவு என்று ஒருவர் கூறலாமா?


நிச்சயமாக அப்படியும் கூறலாம். யுலிசஸ் மற்றும் பெனலோப் ஆகியோரின் கதையில் நான் வேற்றுமையில் உள்ள ஒத்த விஷயங்களை வற்புறுத்தி கூற விரும்பவில்லை.  

பிரபலமான இடுகைகள்