பயணிக்கும் வீரர்கள் அத்தியாயத்தின் நிறைவுப்பகுதி
தொடர்ச்சியான
காட்சிகள் மரபான தொகுக்கும் எளிய தன்மையை தருகிறதா?
இது என்னுடைய தனிப்பட்ட கருத்துதான்.
மிகவும் அந்தரங்கமானது என்றுகூட சொல்லலாம். தொடர்ச்சியான காட்சியினை படமாக்குவது
என்பது என்னைப் பொறுத்தவரை பெரும் சுதந்திரத்தைத் தருகிறது. ஆனால் பார்வையாளர்கள்
அதில் ஆழ்ந்து கவனம் கொண்டு இணைந்திருக்க வேண்டியது அவசியம் என்பது உண்மைதான்.
மரபான தொகுக்கும் முறையில் தொடர்ச்சியான காட்சிகளை தொகுப்பது சிரமம்தான். காலியாக
இருக்கும் திரையில் இயக்கம் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம்.
தொடர்ச்சியான காட்சி
என்பது மான்டேஜ் எனும் கருத்தினை உள்ளே கொண்டதாக உள்ளது. ஆனால் அதற்கு பதிலாக
மரபான தொகுக்கும் முறை என்பது பல்வேறு விஷயங்களை ஒரு காட்சியில் சொல்ல உதவுகிறது.
கேமராவின் இயக்கத்தினோடு பார்வையாளர்களிடம் வேறு இடத்தை காணக்கூறுவது போல. நடுவில்
உள்ள காட்சியினை வெட்ட மறுப்பது, அக்காட்சியினை பார்வையாளர்களை ஆழமாக கவனிக்க
வைத்து அவர்களது கண்ணில் படும் விஷயங்களை குறிப்பிடத் தகுந்ததாக மாற்றிவிட
முடியும்.
படத்தின் தயாரிப்பின்
போது எதிர்கொண்ட சிக்கல்கள் என்ன?
முதல் சிக்கலாக நான்
நினைப்பது பருவச்சூழ்நிலைதான். நான் பெரிதும் பாதிக்கப்பட்டது இதனால்தான். மேகங்கள்
சூழ்ந்த சூழலை விரும்பினேன் என்றாலும் உள்ள சூழல் சூரிய ஒளிமிக்க வானம்தான்.
கிரீஸில் கோடைக்காலம், பனிக்காலம் என இரு பருவ காலங்களில் அற்புதமான சூரிய ஒளி
கொண்ட சூழலை அனுபவிக்க முடியும். ஆனால் படமெடுக்கும் போது இவை பெரும் தொந்தரவு
கொண்டதாக மாறிவிட்டிருந்தன. முதல் பகுதி படப்பிடிப்பு ஏதேன்ஸிலும் இரண்டாவது பகுதி
படப்பிடிப்பு நடத்த குறிப்பிட்ட தொடர்ச்சியான சூழலின் ஒத்திசைவு தேவைப்பட்டது. குறிப்பிட்ட
சூழல் முடிந்துவிடுவதற்குள் வேகமாக படப்பிடிப்பு நடத்த வேண்டியதிருந்தது. இது மிக
அரிதானதாக படத்தில் தென்படும். மேலும் அதுபோன்ற உங்களுக்கு மட்டும் நன்கு பழக்கமான
பருவ சூழ்நிலைகளில் படமெடுப்பதில் உள்ள இன்னொரு பிரச்சனை படத்திற்கு திட்டமிட்ட
தொகை அதிகமாகிக் கொண்டே செல்வதுதான்.
ஆங்கிலமொழிபெயர்ப்பு - டான் பைனாரு