தியோ ஏஞ்சலோ பவுலோஸ்
முந்தைய தங்களது படங்களைப் போலில்லாது இதில் நீங்கள் ஏராளமான
புராணங்கள் தொடர்பான விஷயங்களை பயன்படுத்தியிருக்கிறீர்கள். இங்கே இதுபோன்ற ஒன்றை
கூறலாம் என்று நினைக்கிறேன் – புராணத்தின் சங்கேதக்குறிப்பு போல முதிய மனிதர்
கிராமத்தில் சந்திக்கும் தனது நாயை அர்கோஸ் என்று அழைப்பதைக் கூறலாம்.
யுலிசஸ்-
பெனலோப்- டெலிமாச்சஸ் எனும் இந்த முக்கோண அமைப்பானது பயணம் முடிவைதக் குறிக்கிறது.
ட்ராய் போரினை ஒத்தது போல கிரீஸில் கடந்த நாற்பது ஆண்டுகளாக சிக்கலில் இருப்பது,
யுலிசஸ் திரும்பி தன் நாடான அங்கு வருவது தெளிவான முடிவைக்காட்டுகிறது. எனது
முந்தைய படங்களான 36 நாட்கள், மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் ஆகிய படங்களில் போர் மட்டுமே
முக்கியமானதாக கவனப்படுத்தப்பட்டிருக்கும். அதன் தொடர்ச்சியாக பின் எதுவும் நீளாது
அப்படியே நிறைவுற்றிருக்கும். கதையின் பாத்திரங்கள் கொண்டுள்ள முந்தைய கருத்து
பேதங்கள் புரட்சி நாட்டில் ஏற்பட்டாலும் நாடு அதனை மறுக்கும்போது அவனுக்கு அதனால்
எந்தப் பலனும் இல்லை. முதிய யுலிசஸ் எந்த சமரசங்களையும் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்;
அதனால் அவர் எதற்கும் தகுதி பெறாமல் போகிறார்; அவருக்கான பாத்திரம் அங்கு எதுவுமேயில்லை.
பரிகசிக்கக்கூடிய நம்பிக்கையின் எந்த பலனுமற்ற கடலில் எறியப்பட்ட குடுவை போல
அவரைக் கொள்ளலாம்.
சிதெராவிற்கு
பயணம் என்பதை தொடர்ச்சியின் முடிவு என்று அர்த்தம் கொள்ளலாமா?
மிகச்சரியாக.
இது ஒரு முடிவுரைதான்.
புராணத்தில் டெலிமாசஸ் இருப்பது உங்களது படத்தில் அலெக்ஸாண்டர்
எனலாம். இதற்கான ஆதாரங்களாக மன்னர் அலெக்ஸாண்டரின் வாழ்க்கையில் இருந்து ஏதும்
எடுத்து கையாண்டீர்களா?
இல்லை.
மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் படத்தின் இறுதியில் சிறுபையனாக அலெக்ஸாண்டர் நகரை விட்டுச்
செல்வதை நாம் பார்க்கிறோம். அதுதான் ஆதாரம். புரட்சிகர மரபில், பண்பாட்டின்
வாரிசான ஒருவன் தன்னை இறந்தகால அந்த நாடகங்களிலிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு
நிகழ்காலத்தை எதிர்கொள்ளத் தயாராகிறான் எனும் கதாபாத்திரத்தின் முடிவு அதனை
உருவாக்கிய இயக்குநருக்கு முக்கியமான ஒன்றாகும்.
சிதெராவிற்குப் பயணம் படத்தில் நீங்கள் பயன்படுத்தியுள்ள கிராமம்
மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் படத்தில் பார்த்தது போலவே இருக்கிறதே?
உண்மைதான்.
இதுபோன்ற மலைகிராமம் ஒன்றில்தான் மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் படத்தினை
காட்சிப்படுத்தினோம். இந்த அனைத்து கிராமங்களும் போர் நடக்கும்போது
தங்குமிடங்களாகவும் அதில் இருந்த மக்கள் பிறரோடு தொடர்புகொள்ள சிதெராவிற்கு பயணம்
படத்தில் பார்த்தது போல விசிலடித்து கருத்துப் பரிமாற்றம் செய்தார்கள். விசில்மொழி
துருக்கியர்கள் இங்கு ஆக்கிரமிக்கும்போது பயன்படுத்தப்பட்டது. சட்டப்பாதுகாப்பு
இல்லாத அச்சூழல் தன்மை ஒவ்வொருவரையும் இது போன்று எச்சரித்து வாழும் நெருக்கடி நிலைக்குத்
தள்ளியது.
இந்த
தொலைதூர மலைகிராமங்கள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டு அவர்களுக்கு அடைக்கலம்
தந்துதவின் ஆனால் இன்று அவற்றினுள் வசித்தவர்கள் வாழ்வு சூழல் நன்றாக இருக்கும்
நகரங்களுக்கு, அயல்நாடுகளுக்கு வேறிடங்களுக்கு சென்றுவிட்டார்கள். இதனை ஈடு
செய்யும் விதமாக நாட்டின் நுகர்வு சமூகம் மலைப்பகுதிகளை தங்களது இரண்டாவது வீடாக,
மாற்றிக்கொண்டு கோடைகால முகாமாக பழைய கிராமங்களை பயன்படுத்துகிறார்கள்.
தொன்மையான மரபைக் காக்கின்ற ஒரு நடனக்காரராக முதிய மனிதர்
இருக்கிறார் என்று கருதுகிறேன். மரபான நடனம் ஒன்றினை முதியவர் ஆடுவதைக் குறிப்பிட
விரும்புகிறேன்
உவமையாக
அவர் ஒரு தலைமுறையையும் வாழ்வின் எண்ணங்கள் குறித்ததையும் வெளிப்படுத்துகின்ற ஒரு
பிம்பம். அவரும் வரலாற்றின் ஒரு பகுதி. புதிய நம்பிக்கையோடு நமது நாடு
பிறக்கும்போது பழைய ஒரு தலைமுறை அவரோடு சேர்ந்து மறைந்து போகிறது என்று கூறலாம்.