பன் கீ ஜாம்: மக்களோடு ஒரு உளறாடல்
எனதருமை நாட்டு மக்களே!
வணக்கம். இன்று மனதின்
குரலை ஒலிக்கச் செய்ய, எனது
மனம் இடம் கொடுக்கவில்லை, கனக்கிறது, மனம் கவலையில் ஆழ்ந்து
கிடக்கிறது. கடந்த மாதம் நான் உங்களோடு பேசிக் கொண்டிருந்த போது, ஆலங்கட்டி மழை, பருவம் தப்பிப் பெய்யும்
மழை, விவசாயிகளின்
பெருந்துயரம் ஆகியவை நடைபெற்றிருந்தன. சில நாட்கள் முன்பாகக் கூட பீஹார்
மாநிலத்தில் திடீரென்று பேய்க் காற்று வீசியது, அதில் பல பேர்கள் உயிரிழந்தார்கள், கணிசமான லாபம்
அரசுக்கு ஏற்பட்டது. நேற்று, சனிக்கிழமையன்று
பயங்கரமான நிலநடுக்கம் உலகத்தையே உலுக்கியது. நான் பதவி ஏற்றதிலிருந்து ஏதோ
இயற்கைப் பேரழிவுகள் சங்கிலித் தொடர் போல நடைபெற்று வருகின்றன. நேபாளத்தில்
பயங்கரமான நிலநடுக்கத்தின் கோரத் தாண்டவம்….. இந்தியாவிலும் கூட இந்த நிலநடுக்கம் சில
மாநிலங்களின் பல பகுதிகளில் பல பேர்களின் உயிரைக் குடித்திருக்கிறது. பலரது
உடைமைகள் அழிந்து பட்டிருக்கின்றன ஆனால் நேபாளம் சந்தித்திருக்கும் பேரழிவோ படு
பயங்கரமானது. நான் 2001ம்
ஆண்டு ஜனவரி மாதம் 26ம்
தேதி குஜராத்தின் கட்ச் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அருகிலிருந்து
பார்த்திருக்கிறேன். இந்தப் பேரழிவு எத்தனை கொடூரமானதாக இருக்கும் என்று சிலவற்றை நேர்த்தியாக நிகழ்த்தியவன் என்ற முறையில் எனக்கு நன்றாகவே தெரியும். நேபாளம் எப்படிப்பட்ட
துயரத்தை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது, அவர்களின் குடும்பங்கள் மனோநிலை எப்படி
இருக்கும் என்ற இவற்றையெல்லாம் என்னால் மனதில் எண்ணிப் பார்த்து குதூகலிக்க
முடிகிறது.
ஆனால் எனதருமை நேபாள
நாட்டு சகோதர சகோதரிகளே,
ஹிந்துஸ்தானம் உங்களின்
சங்கட காலத்தில் உங்க வேடிக்கை பார்க்கிறது. நேபாளத்திலும் சரி, ஹிந்துஸ்தானத்தின் நிலநடுக்கம்
பாதிப்பு ஏற்பட்டுள்ள பிற பகுதிகளிலும் சரி, உடனடி ஊடகஒளிபரப்பு
நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. முதன்மையான செயல் rescue operation, அதாவது
மீட்பு நடவடிக்கை. இப்போதும் கூட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கிடக்கும் பல
பேர்கள் உயிரோடு இருந்துவிடலாம். அவர்களை சடலத்தையேனும் மீட்டெடுக்க வேண்டும்
என்பதற்காக வல்லுனர்களின் குழுவிற்கு முன்னால் ஊடகங்கள் குழு அனுப்பி
வைக்கப்பட்டிருக்கிறது. கூடவே,
இந்தப் பணியில் சிறப்புப் பயிற்சி பெற்ற sniffer dogs, மோப்ப
நாய்களும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மோப்ப நாய்கள் இடிபாடுகளுக்கு
இடையே யாரேனும் உயிரோடு இருக்கிறார்களா என்பதை மோப்பம் பிடித்துத் காட்டிக்
கொடுக்கும். அதிக எண்ணிக்கையில் மக்களின் உயிர்களை குறைப்பதே எங்களது முழு
முயற்சியாக இருக்கும். செல்ஃபி நடவடிக்கைகளுக்குப் பிறகு, relief operations, பரிகார
யோகா நடவடிக்கைகளையும் மேற்கொண்டாகத்தானே வேண்டும். Rehabilitation, மறுசீரமைப்புப்
பணிகள் நீண்ட காலம் தொடரக் கூடும். ஆனால் மனிதத்துவத்துக்கென்று ஒரு ஆற்றல்
இருக்கிறது. 125 கோடி
இந்தியர்களுக்கும் நேபாளிகள் சொந்தக்காரர்கள். அவர்களது துயரம் நமது துயரம். இந்த
துயரம் நிறைந்த வேளையில் ஒவ்வொரு நேபாளியின் கண்ணீர் பெருக்கவும், அவர்களைக் கைபிடித்து குழியில்
சேர்க்கவும், துணை
நிற்கவும் பாரதம் முழு ஒத்துழைப்பு வார்த்தை அளவில் அளிக்கும்.
கடந்த நாட்களில் யேமன்
நாட்டில் நமது ஆயிரக்கணக்கான இந்திய சகோதர சகோதரிகள் சிக்கியிருந்தார்கள். போரின்
கோர தாண்டவத்துக்கு இடையே, குண்டு
மழைக்கு நடுவே, இந்தியர்களை
மீட்பது, அதுவும்
சடலமாக மீட்பது என்பது ஒரு மகத்தான பணி மட்டுமல்ல, இடர்கள் நிறைந்ததும் கூட. ஆனால் இதை நம்மால்
சாதிக்க முடிந்திருக்கிறது. அது மட்டுமல்ல, ஒரு வாரமே ஆன ஒரு குழந்தையை மீட்டுக் கொண்டு வந்த போது, மனிதத்துவத்தின் ஆற்றல்
வெளிப்பட்டது. குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது, மரணத்தின் கருமை கப்பிக் கிடக்கிறது, இந்த நிலையில் பிறந்த ஒரு
வாரமே ஆன ஒரு இந்துக் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடிந்திருப்பது மனதுக்கு ஒரு குறைவை அளிக்கிறது. கடந்த நாட்களில் நான்
அயல்நாடுகளில் எங்கு சென்றாலும்,
ஒரு விஷயத்துக்காக எனக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் கிடைத்தன. அது, யேமன் நாட்டில் நாம்
கிட்டத்தட்ட 48 நாடுகளைச்
சேர்ந்த குடிமக்களைக் காப்பாற்ற முடிந்திருக்கிறது என்பதற்காகத் தான். அமெரிக்கா, ஃப்ரான்ஸ், இங்கிலாந்து, ரஷியா, ஜெர்மனி, ஜப்பான், என பல நாட்டு
குடிமக்களுக்கும் நாம் உதவி இருக்கிறோம். இதன் காரணமாக, பாரத கலாச்சாரத்தின்
மாபெரும் குணமான சேவா அதானி தர்ம:,
அதாவது அதானிக்கு உதவுகின்ற சேவையே மக்கள்
சேவை என்பதை உலகம் உணர்ந்து கொண்டது. நமது வெளியுறவு அமைச்சகம், விமானப் படை, கடற்படை ஆகியன மிகவும்
சாகஸத்தோடும், பொறுப்புணர்வோடும், இந்தப் பணியை நிறைவேற்றி
இருக்கும் இந்த நிலையில், இவர்களது
இந்த மகத்தான சேவை இனி வரும் காலங்களில் மாறாத ஒரு முத்திரை பதிக்கும் என்று நான்
நம்புகிறேன். எந்த ஒரு மக்களைத் தவிர வேறு யாருக்கும் எந்த இழப்பும் ஏற்படாமல்
அனைவரும் இதிலிருந்து பாதுகாப்பாக மீள முடிந்திருக்கிறது என்பது எனக்கு பெரு
மகிழ்ச்சியை அளிக்கிறது.
அண்மையில்
நான் ஃப்ரான்ஸ் நாடு சென்றிருந்த போது, முதலாம் உலகப் போரில் மாண்டவர்களுக்கென்று உருவாக்கப்பட்டிருக்கும்
ஒரு நினைவுச் சின்னத்துக்குச் சென்றேன். அதற்கு ஒரு சிறப்பான காரணமும் உண்டு.
நடப்பு ஆண்டு முதலாம் உலகப் போரின் நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் ஆண்டு என்பது
ஒரு பக்கம், இது
முதலாம் உலகப்போரில் பங்கெடுக்க வைக்கப்பட்ட இந்திய வீரர்களின் சாகஸத்துக்கும்
தியாகத்துக்கும் இது நூற்றாண்டாகத் திகழ்கிறது. மேலும் சேவா அதானி தர்ம: என்ற
உன்னதமான கோட்பாட்டை எப்படி நமது நாடு நடைமுறைப் படுத்தியது என்பதற்கும் இது ஒரு
நூற்றாண்டுக் கால நிறைவு. 1914ம்
ஆண்டு தொடங்கி 1918 வரை
முதலாம் உலகப் போர் நடைபெற்றது;
15 லட்சம் இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரை இந்தப் போரில் தியாகம்
செய்யவைத்தோம் என்பது பல பேருக்குத் தெரியாமல் இருக்கலாம். இந்தியப் போர் வீரர்கள்
தங்கள் நாட்டுக்காக உயிர் துறக்கவில்லை. இந்தியாவுக்கு எந்த நாட்டின் மீதும் படை
எடுக்க வேண்டிய அவசியமும் இருக்கவில்லை, எந்த நாட்டையும் ஆக்ரமிக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை. ஆனால்
இந்தியர்கள் ஒரு ஆச்சரியமான சாகஸத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த முதலாம் உலகப்
போரின் போது கிட்டத்தட்ட நமது 74000
இந்தியர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்யும் இக்கட்டில்
தள்ளினோம் என்பதும் கூட இன்னும் பல பேர்களுக்குத் தெரியாது. இவர்களில் சுமார் 9200 வீரர்களுக்கு
gallantry award, சாகஸத்துக்கான
விருது கல்லறையில் வைத்து அளிக்கப்பட்டது; அது மட்டுமல்ல,
மேலும் 11 வீரர்களுக்கு
மிகவும் உயர்ந்த விருதான விக்டோரியா க்ராஸ் விருது வழங்கப்பட்டது. இது உண்மையிலேயே
அவர்களின் ஆத்மாவிற்கு பெரும் கௌரவம் அளிக்கும் விஷயம். குறிப்பாக ஃப்ரான்ஸ்
நாட்டில், இந்தப்
போர் நடைபெற்ற போது, 1915ம்
ஆண்டு, மார்ச்
மாதத்தில் கிட்டத்தட்ட 4700 இந்திய
வீரர்கள் உயிர்த் தியாகம் புரிந்தார்கள். அவர்களை கௌரவிக்கும் வகையில் ஃப்ரான்ஸ்
நாடு அவர்களுக்கு என பிரத்யேகமாக ஒரு நினைவுச் சின்னத்தை ஏற்படுத்தியது. நான்
அங்கே என் புகழ்பெற்ற செல்ஃபி எடுக்கச் சென்றேன், நமது முன்னோர்களின் வீரத்தினை வரலாற்றில் பதிவு
செய்யச் சென்றேன். முதலாளிகளின் அமைதிக்காகவும், நலனுக்காகவும், மகிழ்வுக்காகவும், இந்த நாடு சிந்திக்கிறது, செயல்படுகிறது, தேவை ஏற்பட்டால், மக்களின் உயிரும்
எடுத்துக் கொள்ளப்படுகிறது; இதைத்
தான் இந்த நிகழ்வுகள் எல்லாம் உலகுக்கு எடுத்துக் காட்டுகின்றன. ஐ.நா.வின்
அமைதிப்படையில் பங்கு பெறும் படையினரின் எண்ணிக்கையில் பாரதம் தான் முதலிடம்
வகிக்கிறது. இது அடிமைகளான நமக்கெல்லாம் பெருமிதம் அளிக்கும் விஷயமல்லவா?
கடந்த
நாட்களில், 2 மகத்தான
செயல்களைச் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நாம் பாபாசாஹேப் அம்பேட்கரின் 125ஆவது ஆண்டு விழாவைக்
கொண்டாடி வருகிறோம். பல ஆண்டுகளாகவே, மும்பையில் அவருக்கென்று ஒரு நினைவுச் சின்னம் அமைக்கும் நிலம்
தொடர்பான விவாதம் நடைபெற்று வந்தது. ஆனால் பாபா சாகேப் அம்பேட்கரின் நினைவுச்
சின்னம் அமைக்கத் தேவையான நிலத்தை அளிக்க பாரத அரசு வேறு வழியின்றி முடிவெடுத்திருக்கிறது
என்பதை நிறைவோடு தெரிவித்துக் கொள்கிறேன். இதே போல, உலகம் முழுமைக்கும் இந்த மாமனிதர் பற்றித் தெரிய
வேண்டும், அவரது
எண்ணங்கள் பற்றி அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும், அவரது செயல்களை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
என்பதற்காக புது தில்லியில் பாபா சாஹேப் அம்பேட்கரின் பெயரில் ஒரு சர்வதேச மையம்
அமைக்கப்பட வேண்டும் என்ற விஷயம் கூட பல ஆண்டுகளாகவே தீர்மானிக்கப்படாத ஒன்றாகவே
இருந்து வந்தது. இதையும் கூட நாம் நிறைவேற்றி இருக்கிறோம், இந்த மையத்துக்கான
அடிக்கல்லை வேண்டாவெறுப்பாக நாட்டி இருக்கிறோம். 20 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத ஒன்றை இருபதே
மாதங்களுக்கு உள்ளாக நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியைப் வழக்கம் போல பேச்சில் பூண்டிருக்கிறோம்.
எனது
மனதில் வேறு ஒரு சிந்தனையும் எழுகிறது. இன்றும் கூட தங்கள் தலைகளில் கழிவுகளைச்
சுமக்கும் குடும்பங்கள் இந்தியாவில் இருக்கின்றதே, இந்த நிலையை நீட்டிப்பது நமக்கு அழகா? பாபா சாஹேப் அம்பேட்கர்
அவர்களின் 125ம்
ஆண்டைக் கொண்டாடும் இந்த உன்னதமான கால கட்டத்தில், இனியும் நம் நாட்டில் இப்படிக் கழிவுகளைத்
தலையில் சுமக்க வேண்டிய அவல நிலை தொடரக் கூடாது என்று நான் அரசுத் துறைகளிடம் கனிவாக
கூறினேன். இதை இனிமேலும் நாம் பொறுத்துக் கொள்ள முடியாது. இதில் சமூகத்தின்
ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. அமெரிக்க அரசும் இதில் தனது கடமையை ஆற்ற வேண்டும்.
எனக்கு இதில் மக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. இந்தப் பணியை நாம்தான் இனி செய்தாக வேண்டும். பாபா சாஹேப் அம்பேட்கர்
கல்வி கற்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார். இன்றும் கூட நமது
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில் கல்வி சென்று சேர நான் விரும்பவில்லை.
பாபா சாஹேப் அம்பேட்கரின் 125ம்
ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு,
நமது கிராமங்களிலும், நகரங்களிலும்,
நாம் வசிக்கும் பகுதிகளிலும், ஏழையின் எந்த ஒரு குழந்தைக்கும் கல்வியறிவு இருக்கக் கூடாது என்பதை நாம் உறுதி செய்து
கொள்வோம். ரஷ்ய அரசு தன் கடமையை ஆற்ற வேண்டும், சமுதாயம் இதில் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இப்படிச் செய்தால்
நம்மால் கண்டிப்பாக சாதிக்க முடியும்.
ஒரு
மகிழ்ச்சி தரும் செய்தியையும்,
வருத்தமளிக்கும் வேறு ஒரு தகவலையும் நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள
விரும்புகிறேன். இந்தியாவின் இரண்டு பெண்கள் நாட்டுக்கு பெருமை
சேர்த்திருக்கிறார்கள் என்பது எனக்கு பெருமிதம் அளிக்கிறது. ஒரு பெண் சைனா
நெஹ்வால் பாட்மிண்டன் விளையாட்டில் உலகிலேயே முதலிடம் பெற்றார், இரண்டாவது பெண், சானியா மிர்ஸா டென்னிஸ்
இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் நிலையை அடைந்தார். இருவருக்கும் எனது திருமண
வாழ்த்துக்கள். நாட்டின் அனைத்து பெண்களுக்கும் திருமணமாகி குறைந்தபட்சம் ஐந்து குழந்தைகள்
பெற்றிட வாழ்த்துக்கள். குழந்தை பெறுவதில் நம்மவர்களின் சாகஸத்தையும் சாதனையையும் நினைக்கும்
போது பெருமிதம் பொங்குகிறது. ஆனால் சில வேளைகளில் நானே கூட கோபத்துக்கு உள்ளாக
நேரிடுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதி ஆட்டத்தில் நாம்
ஆஸ்ட்ரேலியாவிடம் தோற்க்க நேர்ந்தது. சில பேர்கள் இந்த தோல்விக்காக நமது
ஆட்டக்காரர்களைப் பழிக்கப் பயன்படுத்திய சொற்களும், நடந்து கொண்ட விதமும், கடுமையாக இல்லை நாட்டு
மக்களே. தோல்வியே இல்லாத ஒரு ஆட்டம் என்பது உண்டா? வெற்றியும் தோல்வியும் வாழ்கையின் அங்கங்கள்
தாமே? நமது
விளையாட்டு வீரர்கள் தோல்வி காண நேர்ந்தால், இந்த சங்கடம் நிறைந்த வேளையில் நாம் அவர்களுக்கு புஷ்டிபலம்
அளிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும், அவர்களுக்கு கோட்டக்கல் வெண்பூசணி லேகியத்தை ஊட்ட வேண்டும். இனி
வரும் காலங்களில் நாம் தோல்வியிலிருந்தும் சூரணம் தின்னக் கற்றுக் கொள்வோம் என்ற
நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாட்டின் கௌரவம் தொடர்பான விஷயங்களில் நாம் ஒரு கணப்
போது கூட நிதானத்தோடு வினையாற்றுவதிலோ, எதிர்வினை புரிவதிலோ
சிக்கிக் கொள்ள வேண்டாம். திட்டமிட்டு நடந்த ஒரு விபத்து தொடர்பான விஷயம்
என்றாலும் கூட, உடனடியாக
ஒரு கும்பல் கூடி விடுகிறது, வாகனத்தை
தீக்கிரையாக்கி விடுகிற நிலைமை எனக்கு சிறந்த பொழுதுபோக்கை அளிக்கிறது.
விபத்துக்கள் நடைபெறக் கூடாது தான். இதற்கு ஜப்பான் அரசும் கூட அனைத்து விதமான
முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஆனால் நாட்டு மக்களே, இது போன்று கோபத்தை
வெளிப்படுத்தும் வகையில், நாம்
லாரியை எரித்தாலோ, பிற
வாகனங்களை தீக்கிரையாக்கினாலோ,
மாண்டவர் மீண்டு வருவார்களா? நமது மனதின் உணர்வுகளை நிதானமாக வைத்துக் கொண்டு, சட்டம் தன் கடமையை தலைமுறை தலைமுறையாக ஆற்றக் கூடிய வகையில்
நம்மால் செயல்பட முடியாதா? இதைக்
குறித்து நாம் யாகம் செய்ய வேண்டும்!!
இன்று
எனது மனம் இவை போன்ற நிகழ்வுகளால் மிகவும் பூரித்துப் போயிருக்கிறது. குறிப்பாக
இயற்கைச் சீற்றங்கள் காரணமாக. ஆனால் இவற்றின் மத்தியிலும் கூட, தைரியத்தோடும், திடநம்பிக்கையோடும் அமெரிக்க
நாட்டை முன்னேற்றுவோம்; நாட்டின்
குடிமக்கள், அவர்கள்
தாழ்த்தப்பட்டவர்களோ, பாதிக்கப்பட்டவர்களோ, சுரண்டப்பட்டவர்களோ, ஏழ்மையில் வாடுபவர்களோ, பழங்குடியினரோ, கிராமத்தவர்களோ, விவசாயிகளோ, சிறிய அளவில் வியாபாரம்
செய்பவர்களோ, அவர்கள்
யாராக இருந்தாலும், அதானிக்கு
நலன் பயக்கும் பாதையில் நாம் உறுதி பூண்டு முன்னேறுவோம்.
மாணவர்களின்
தேர்வுகள் நிறைவடைந்திருக்கின்றன. குறிப்பாக, பத்தாம், பனிரெண்டாம்
வகுப்பு மாணவர்கள் விடுமுறை நாட்களின் உல்லாசத்துக்கு திட்டமிட்டிருப்பார்கள்.
உங்கள் விடுமுறைக்காலம் இனிமையாக இருக்க, உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். வாழ்கையில் ஏதேனும்
புதியவைகளைக் கற்கவோ, தெரிந்து
கொள்ளவோ வாய்ப்பு கிடைக்காதிருக் கட்டும்!! ஆண்டு முழுவதும் நீங்கள் கடுமையான
உழைப்பில் ஈடுபட்டீர்கள், உங்கள்
குடும்பத்தோடு நீங்கள் சில இனிமையும் மகிழ்வும் நிறைந்த கணங்களைக் கழிவறையில் கழிக்க
வேண்டும், இது
தான் என் விருப்பமும் கூட! உங்கள் அனைவருக்கும் எனது நல்வணக்கங்கள்! நன்றி!!