முகமூடிகளின் விலக்கம்: 36 நாட்களில்(தியோ ஏஞ்சலோ பவுலோஸ்)
எப்படி உங்களால்
படத்தினைத் தயாரிக்க முடிகிறது?
கிரீக் திரைப்படப்
பள்ளியில் என்னுடைய நண்பர்கள் சிலர் ஆசிரியர்களாக உள்ளனர். அங்கே கல்வி கற்ற
ஒருவரின் கணவர் பெரும் பணக்காரரும் மறுகட்டமைப்பு படத்தின் மீது பெரும் மரியாதை
கொண்டவரும் ஆவார். அவர் என்னுடைய படம் ஒன்றினைத் தயாரிக்க விருப்பம் தெரிவித்தார்.
நான் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன் அவ்வளவுதான். நாங்களிருவரும் நண்பர்களும்,
அரசியல்ரீதியிலான ஒத்த கருத்துகளைக் கொண்டவர்களும் கூட. நாங்கள் படத்தினை
உருவாக்கி முடிக்கும்போது அவருடைய அரசியல் விழிப்புணர்வு முற்றிலும் மேம்பட்டு
வேறு ஒன்றாகயிருந்தது. ‘‘ உங்களுடைய படத்தினால் நான் என்னுடைய பணத்தினை
இழந்தாலும், இந்தப் படத்தின் மூலமாக
முன்னெப்போதும் அறியாத பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அந்த அனுபவங்கள்
பெருமதிப்பானவை ஆகும்.’’ என்று கூறினார் அவர். ‘‘உங்களுடைய படத்தினால் ஒரு பென்னி
கூட பெறவில்லை’’ என்று கூறும் வகையான தயாரிப்பாளர் அல்ல அவர். மறுகட்டமைப்பு
படத்திற்கு பணியாற்றிய குழுவே இப்படத்திற்கும் இணைந்து பணிபுரிந்தோம். அதிகளவில்
பணம் கிடைத்ததால் குழு சிறிது பெரிதாக மாறியது அவ்வளவுதான். படத்தில் சில
தொழில்முறை நடிகர்களோடு அம்முறையில் இல்லாதவர்களும் இணைந்து பணியாற்றினர்.
கிரீக் தணிக்கை
அமைப்பினர் திரைக்கதையினைப் படிப்பார்களா அல்லது முழுமையடைந்த படத்தினை மட்டும்
பார்வையிடுவார்களா?
தணிக்கை அமைப்பினர் திரைக்கதையை
சோதிப்பார்கள் என்றாலும் அதை நாங்கள் எளிதாக சமாளித்து கடந்து வந்துவிடுவோம்.
உங்களுக்கு ஒரு உண்மையைக் கூறட்டுமா? உண்மையான திரைக்கதைக்கும், படத்தின் இறுதி
வடிவத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. ஆங்கிலேயர் வரும் காட்சி மற்றும்
சங்கத்தலைவர் கொலையாவது உள்ளிட்டவை திரைக்கதையில் இல்லை. உண்மையில் திரைக்கதையில்
சங்கத்தலைவர் என்று குறிப்பிடாமல் ஒரு மனிதன் கொலை செய்யப்படுகிறான் என்று பொதுவாக
கூறப்பட்டிருக்கும்.
படம் உருவாகிய
பின்னர், தணிக்கை சான்றிதழ் பெறுவதில் ஏதேனும் பிரச்சனைகளை
சந்தித்திருக்கிறீர்களா?
சில உண்டுதான். அந்த விவரங்களுக்குள் செல்ல
நான் விரும்பவில்லை. கிரீசில் தொடர்ந்து திரைப்படங்கள் உருவாக்குவதில் ஆர்வம்
கொண்டிருக்கும் எனக்கு இவை சிறுபிள்ளைத்தனமான ஒன்றாகத் தோன்றுகிறது. 36 நாட்களில்
படம் வெளியானது என்பதுதான் முக்கியமான விஷயம்.
திஸ்ஸலோனிக்கி
திரைப்பட விழாவில்தான் முதலில் படம் திரையிடப்பட்டது என்று நினைக்கிறேன்.
உண்மைதான். இடதுசாரிகள் மற்றும்
பார்வையாளர்களால் பெரும் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்ட படம் அது. இதில் பெரும்
கோபம் கொண்டவர்கள் மத்தியில் இருந்த கட்சியினர்தான். ராணுவ அரசு நடத்திய ஆட்சியின்
நாடாளுமன்ற விஷயங்களை நான் காட்சிபடுத்தியது கடும் பரிகாசமாக அவர் எண்ணியதால் அப்படி
நிகழ்ந்தது.
யார் இவர்கள்?
தாராள மற்றும் இடதுசாரிகளல்லாதவர்கள் என்று
கூறலாம். ராணுவ ஆட்சியாளர்கள் ஆட்சியதிகாரத்தை அடைந்ததும் தங்களின் சிறப்பு
அதிகாரங்களை இழந்தவர்கள் இதில் வலதுசாரி மக்களும் உண்டு. பாராளுமன்ற அமைப்பை
உருவாகி சமூகத்தில் பல மாற்றங்களை நிகழ்த்தியது. பெரும் நம்பிக்கை மற்றும் நற்பேறை
நம்பிய மக்கள் தமது லாபம் சுருக்கப்படுவதையும் மற்றவர்களுக்காக தமது இடத்தை
விட்டுக்கொடுக்கவும் நேர்ந்தது. அரசு அதிகாரிகளுக்கு அவர்களின் பணி ஊதியம்
முன்பிருந்ததைவிட அதிகமாக கொடுக்கப்பட்டது.
காவல்துறையினருக்கும் இதே போல்தான் நிகழ்ந்தது. நிலைமை நம்பிக்கையற்றதாக
தோன்றியது. இன்றுவரை பலரும் அரசு அலுவலகத்தில் தனது பணியிலிருந்து வலுக்கட்டாயமாக
நீக்கப்பட பல்வேறு வாய்ப்புகளும் உள்ளன.
நாம் பேசுவது அரசு
அதிகாரிகளின் வர்க்கத்தையா?
அவர்களேதான்.