இடுகைகள்

சுதந்திர பேச்சு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ட்விட்டரை கழற்றி மாட்டப்போகும் எலன் மஸ்க்! -அல்டிமேட் திட்டங்கள் என்ன?

படம்
  ட்விட்டரை கைப்பற்றும் எலன் மஸ்க்! கனடாவை பூர்வீகமாக கொண்ட எலன் மஸ்க், அமெரிக்காவில் நம்பிக்கை தரும் தொழிலதிபராக வளர்ந்து வருகிறார். தான் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டு பெருந்தொற்று காலத்தில் கூட தொழிற்சாலைகளை திறந்துவிட்டார். தொழிலாளர்களுக்கு தடுப்பூசி வேண்டுமா வேண்டாமென்று அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். நான் இதில் தலையிட முடியாது. என டைம் வார இதழில் துணிச்சல் பேட்டி கொடுத்தார்.  ட்விட்டர் பதிவுகள் மூலமே பங்குச்சந்தையை மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டவர், எலன் மஸ்க். அதேநேரம் ட்விட்டரில் இவர் பதிவிடும் பல்வேறு பதிவுகள் கடுமையாக சர்ச்சையாவது உண்டு. அதற்காகவே பதிவுகளை இடுகிறாரோ என்றும் கூட பத்திரிகையாளர்கள் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள். பெரும்பாலான தொழிலதிபர்களையும், அரசியல்வாதிகளையும் எரிச்சலூட்டுவதில் எக்ஸ்பர்ட். பத்தாண்டுகளுக்கு அப்பால் பார்த்து அதற்கேற்ப தொழில் நிறுவனங்களை உருவாக்குவது எலனின் ஸ்பெஷல்.  நிறைய புகழ் பாடிவிட்டோம். இப்போது ட்விட்டரில் அடுத்து நடைபெறும் மாற்றங்களை பேசுவோம்.  தொடக்கத்தில் ட்விட்டரின் இயக்குநர்கள் குழுவில் தான் இடம்பெறுவதாக கூறப்பட்ட எலன் மஸ

சமூக வலைத்தளத்தில் இயங்கும் மக்கள்தான் மாறவேண்டும்! - டிஎம் கிருஷ்ணா, கர்நாடக வாய்ப்பாட்டுக் கலைஞர்

படம்
  டிஎம் கிருஷ்ணா, கர்நாடக வாய்ப்பாட்டுக் கலைஞர் டிஎம் கிருஷ்ணா வாய்ப்பாட்டு கலைஞர் இன்றைய மாணவர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் மாணவனாக இருந்த காலத்தை விட இன்றைய மாணவர்கள் கவனத்துடன் சுயசிந்தனையுடன் இருக்கிறார்கள். நான் இந்தளவு கவனத்துடன் இருந்ததில்லை. என்னுடைய சக வயது உள்ளோர் பலரும் மாணவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள் என புகார் கூறுகிறார்கள். குறிப்பாக டிவிட்டர், இன்ஸ்டாகிராம். இந்த வகையில் அவர்கள் சமூக வலைத்தளங்களின் வழியாக வாழ்க்கை, அரசியல் பற்றிய உறுதியான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். நான் இந்தளவு கருத்துக்களோடு இல்லை என்பதே உண்மை. நான் மற்றவர்களிலிருந்து வேறுபட்டு இதனை வாய்ப்பாகவே பார்க்கிறேன். இந்த வகையில் நாம் கேட்க முடியாத பல்வேறு கேள்விகளை கேட்க முடியும். இந்த தளங்களை இந்த வகையில் சிறப்பாக பயன்படுத்தலாம். இதில் உள்ள சிக்கல், சிந்தனைகளில் உள்ள தடுமாற்றம்தான். நான் இருபது வயதில் இப்படித்தான் இருந்தேன்.  நீங்கள் உங்கள் கருத்துகளை வெளிப்படையாக பேசி வருபவர். கருத்துகளை வெளிப்படுத்தும் விதம் மாணவர்களிடம் எப்படி இருக்கிறது? அது வேறு வகையான இடம் என்று ந