இடுகைகள்

மின்னூல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அவதாரம் 2 - குற்றமூலம் மின்னூல் வெளியீடு

படம்
    உளவியல் சார்ந்த சிறு மின்னூல்தான். இந்த நூலில் உளவியலாளர்கள், அவர்களின் கோட்பாடுகள் பற்றி சுருக்கமாக எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. உளவியல் சார்ந்து அறிந்துகொள்ள முயல்பவர்களுக்கு நூல் ஆர்வமூட்டும்படியாக இருக்கும். நூலை அமேஸான் தளத்தில் வாசியுங்கள்.  நூலை வாங்க..... https://www.amazon.in/dp/B0CM33G8QT

டீ இஸம் - அகாகுரா காகுஸோ - மின்னூல் வெளியீடு - விரைவில்.....

படம்
  விரைவில்...

யாவரும் ஏமாளி - புதிய மின்னூல் வெளியீடு - அமேஸான் வலைத்தளம்

படம்
  ஒரு வாரத்தில் எத்தனை முறை உங்கள் பர்சைத் திறக்கிறீர்கள் என யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? எதனால் ஒரு பொருளை தேர்ந்தெடுக்கிறீர்கள், எதனால் ஒரு பொருளை வாங்கவேண்டுமென தோன்றுகிறது ஆகிய கேள்விகளுக்கு பின்னால் உள்ள உளவியல் விஷயங்களை நூல் பேசுகிறது. எப்படி பெருநிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள் மக்களின் உளவியலைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பொருட்களை தயாரித்து விளம்பரப்படுத்தி விற்கிறார்கள். மக்களை பெருமளவு செலவு செய்ய வைக்க என்னென்ன உத்திகளை கையாள்கிறார்கள் என்பதை யாவரும் ஏமாளி நூல் வெளிப்படுத்துகிறது.  நூலை கீழுள்ள முகவரியில் தரவிறக்கி வாசிக்கலாம். நன்றி! https://www.amazon.com/dp/B0C3CBVYNP

யாவரும் ஏமாளி புதிய மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு

படம்
  நூல் விரைவில் அமேஸானில் வெளியாகும்..... நன்றி!

அசுரகுலம் 6 - உயிர்வேட்டை மின்னூல் வெளியீடு

படம்
  அசுரகுலம் 6 - உயிர்வேட்டை அசுரகுலம் 6 - உயிர்வேட்டை நூலில் இதுவரை வாசிக்காத பல்வேறு தொடர் கொலைகாரர்கள் பற்றி விவரிக்கப்படுகிறது. முக்கியமாக அனைவருமே இளமைக்காலத்தில் கடுமையான வறுமை, பெற்றோரின் புறக்கணிப்பை, நோய்களை, குறைபாடுகளை அனுபவித்தவர்கள். உடல், மனம் ஆகியவை நோயுற அவர்களைச் சுற்றியுள்ள சூழலும் ஒரு காரணம்.  சமூகம், சட்டத்தின்படிதான் ஒழுங்கு நிலை குலையாமல் காப்பாற்றப்படுகிறது. மனிதர்களைக் கொல்வது சட்டத்தின்படி அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, தொடர் கொலைகாரர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் அல்லது மரணதண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் வலிக்கு பதிலடியாக வலி என அவர்கள் செல்லும் பாதை திரும்பி வரமுடியாத ஒன்று. உயிர்வேட்டை நூலில் தொடர்கொலைகாரர்களின் உளவியலை வாசகர்கள் புரிந்துகொள்ள முடியும் என நம்புகிறேன். நூலை வாங்க..... https://www.amazon.in/dp/B0C2CNFT8N அட்டைப்படம் - பின்டிரெஸ்ட் 

பேராசை பூதம் 2 - மின்னூல் அட்டைப்படம் வெளியீடு

படம்
  முதல் பகுதி பேராசை பூதம் 1 என வெளியாகிவிட்ட நிலையில், இந்த நூல் இரண்டாவது பகுதியாக வெளியாகவிருக்கிறது.  இந்த நூலில் பங்குசந்தை மோசடி, நிலக்கரி ஏற்றுமதி இறக்குமதியில் வரி ஏய்ப்பு, மக்களின் மின்கட்டணத்தை அரசு விதிகளைப் பயன்படுத்தியே நூதனமாக உயர்த்தியது, பத்திரிகையாளர்களை மிரட்டி அதட்டி வழக்கு போட்டு ஒடுக்குவது என நிறைய விஷயங்கள் பேசப்படுகின்றன.

விளம்பர இடைவேளை - ஃப்ரீதமிழ்இபுக்ஸ்- இன்டர்நெட் ஆர்ச்சீவிலுள்ள நூல்கள்

படம்
  மேற்கண்ட நூல்களின் பெயர்களை ஃப்ரீதமிழ்இபுக்ஸ் வலைத்தளத்தில் தட்டச்சு செய்து தேடினாலே நூல்களை எளிதாக பெறலாம். தரவிறக்கி வாசிக்கலாம். பிறருக்கும் எளிதாக பகிரலாம். தரவிறக்கும் பக்கத்தில் கீழே இன்டர்நெட் ஆர்ச்சீவ் இணைய முகவரி இருந்தால், நூலை தரவிறக்காமல் இணையத்தில் நேரடியாக நூலைப் போலவே பிரித்து வாசிக்கலாம்.  இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்திலும் ஆராபிரஸ் வெளியீடான இலவச நூல்களைத் தேடிப் பெறலாம். அங்கேயே நூலை பிரித்து வாசிக்கலாம். தேவையான  நூலின் பெயரை தட்டச்சு செய்யுங்கள்.   தம் வலைத்தளத்தில் புதிதாக தேடுதல் வசதியை சேர்த்த ஃப்ரீதமிழ்இபுக்ஸ் குழுவினருக்கும், வழிகாட்டுதலை அளித்த கணியம் சீனிவாசன் அவர்களுக்கும் நன்றிகள் கோடி.....

சூரியனைப் போற்றுவதென்பது.. புதிய மின்னூல் வெளியீடு - இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளம்

படம்
  குங்குமம் வார இதழில் பணியாற்றுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என முதலில் நினைக்கவில்லை. கோகுலவாச நவநீதன் தலைமை உதவி ஆசிரியராக இருந்த காலம் அது. திரு.முருகன் அப்போது குழும இதழ்களின் முதன்மை ஆசிரியர். அவர்தான் என்னை முத்தாரம் இதழுக்கான உதவி ஆசிரியராக தேர்ந்தெடுத்தார். குறைந்த சம்பளம், ஏராளமான வேலைகள் எனக்கு பரிசாக கிடைத்தன.  எனக்கு அன்றிருந்த பெரிய மகிழ்ச்சி, வெள்ளி மலரில் சினிமா கட்டுரைகள், தொடர் எழுதிக்கொண்டிருந்த எனது வழிகாட்டியாக நினைத்த திரு. கே.என்.சிவராமன் சாரை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பும், காலை வணக்கம் சொல்லும்போது அவரின் முகத்தை பார்க்க முடியும் என்ற மனநிறைவும்தான்.   மொழிபெயர்ப்பு என்பது நானாக முனைந்து கற்றுக்கொண்டதுதான். அதில் நிறைய பிழைகள் உண்டு. தவறுகள் உண்டு. முத்தாரத்தில் உதவி ஆசிரியராக இருந்தபோதும் கூட எனது பெயரில் கட்டுரை வருவது கடினமாக இருந்தது. அதற்கென வெளியில் இருந்து வரும் பல்வேறு தகவல்களை படித்து சரிபார்த்து போட்டால் போதும் என்பதும் முதன்மை ஆசிரியரின் உத்தரவு. குங்குமத்தில் பணியாற்றியவரான இன்னொரு நபர் உடல்நிலை குறைவால் விடுப்பு எடுக்கத் தொடங்க, குங்குமத்த

உதயமாகும் பேரரசன்- ஆனந்த் மகிந்திரா - புதிய மின்னூலின் அட்டைப்படம்

படம்
 

அசுரகுலம் 4 - மனமென்னும் இருட்குகை - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  அசுரகுலம் 4 - மனமென்னும் இருட்குகை அசுரகுலம் தொடர் வரிசை நூலில் இந்த நூல் மனம் பற்றி பேசும் நான்காவது நூல். ராபர்ட் ஹரே என்ற உளவியலாளரின் ஆய்வுகள் மற்றும் பல்வேறு கொலை வழக்குகளை உதாரணங்களாக மனமென்னும் இருட்குகை கொண்டுள்ளது. மனம் என்பது வெளியே தெரிவதில்லை என்பதால்தான் அதைப் பற்றி நம்மால் நிறைய ஆராய்ச்சிகள் செய்ய முடிகிறது. அப்படி செய்தாலும் கூட அதைப்பற்றி அறிந்திருப்பது மிகவும் குறைவுதான். உளவியல் ஆய்வுகளை ஒருவர் வாசித்தால் மட்டுமே குற்றங்களின் பின்னணி பற்றி எளிதாக அறிய முடியும். அதைக் குறைக்கவும், தடுக்கவும் முடியும். அசுரகுலம் தொடர்வரிசை நூல்கள் குற்ற இலக்கிய நூல் வகையில் வரும். எளிமையான வகையில் ஒருவரின் குற்ற உலகம், குற்றத்தின் காரணம், பாதிப்புகள், அதற்கான அவரின் எதிர்வினை ஆகியவற்றை நீங்கள் நூலில் வாசித்து அறியலாம். நூலை அமேஸானில் வாங்க....வாசிக்க.... https://www.amazon.in/dp/B0BRZH6PQ4 ஸ்கேன் செய்து வாங்க....

இரண்டு மின்னூல்களுக்கான புதிய அட்டைப்படங்கள்! -அசுரகுலம் 1, நட்பதிகாரம்

படம்
  அசுரகுலம்1 - கொலைகாரர்களின் கதை நட்பதிகாரம் மின்னூல்

விளம்பர இடைவேளை - ஆராபிரஸ் வெளியீடுகள்

படம்
 

அசுரகுலம் 3- ரத்தசாட்சி மின்னூல் வெளியீடு

படம்
  அசுரகுலம் 3 ரத்தசாட்சி மின்னூல் வெளியீடு   ரத்தசாட்சியை எழுதவேண்டும் என தீவிரமான எண்ணம் அண்மையில்தான் எழுந்தது. பொதுவாகவே மின்னூல்களை ஜெயமோகன் போல ஆயிரம் பல்லாயிரம் பக்கங்களில் எழுதுவது எனக்கு உடன்பாடில்லை. எனவே இதுவும் 75 பக்கங்களைக் கொண்ட நூல்தான். எனவே எளிதாக நீங்கள் கிண்டில் மூலம் வாசித்துவிட முடியும். ரத்தசாட்சி, அசுரகுலத்தின் வரிசையில் கொலைகாரர்களின் குற்றம் மற்றும் உளவியல் பற்றி பேசுகிறது. இதன் வரிசை உடலுறவு, கோபம், பணம் என எதை அடிப்படையாக கொண்டு கொலைகளை குற்றங்கள் நடத்தப்படுகிறது என்பதை ஆராய்கிறது. நூலில் நடைபெறும் குற்றங்கள் பெரும்பான்மையானவை மேற்குலகை அடிப்படையாக கொண்டவை. பொதுவாக மேற்குலகில் அறிவியல் வளர்ந்திருப்பதோடு குற்றங்களை ஆவணப்படுத்தி வைக்கும் பழக்கமும் உண்டு. இந்த வகையில் குற்றங்களின் தொடர்ச்சி, அதன் குறிப்பிட்ட அடையாளங்கள், தன்மை, குற்றவாளிகள் என எளிதாக அடையாளம் கண்டு குற்றவாளிகளை கைது செய்கிறார்கள். அடையாளங்களை வைத்து சீரியல் கொலைகாரர்களை காவல்துறையினர் கைது செய்கின்றனர். அதேசமயம் குற்றவாளிகளே காவல்துறையினருக்கு சிலி பிடிமானங்களைக் கொடுத்து முடிந்தால்

ரத்தசாட்சி - அசுரகுலம் 3 - தொடர் வரிசை நூல் அட்டைப்படம் வெளியீடு

படம்
  விரைவில் அமேசான் வலைத்தளத்தில்.... நன்றி  எஸ்ஆர் எலக்ட்ரிகல் சரவணன் 

அவதாரம் - ஆளுமை பிறழ்வு ஓர் அறிமுகம் - புதிய மின்னூல் வெளியீடு - கூகுள் பிளே புக்ஸ்

படம்
  இந்த நூலுக்கு முன்னதாக உடல் மனம் உள்ளே என்ற உளவியல் தொடர்பான நூலை ஆராபிரஸ் - கோமாளிமேடை வெளியிட்டுள்ளது. அந்த நூல் ஃப்ரீதமிழ் இபுக்ஸ் வலைத்தளத்தில் உள்ளது. அதில் உளவியல் குறைபாடு, அதன் அறிகுறி, அதற்கான சிகிச்சைகள் ஆகியவை குறிப்பிட்டப்பட்டுள்ளன. அந்த நூலை தரவிறக்கி படித்துவிட்டால் அவதாரம் என்ற சிறுநூலை படிக்க ஏதுவாக இருக்கும். இதில் ஆளுமை பிறழ்வுகள் அதை நோக்கி ஒருவரை செலுத்தும் காரணங்கள் ஆகியவை சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளன. உளவியல் தன்மையில் அளிக்கும் சிகிச்சைகள் இன்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அந்தளவு மனிதர்களுக்குள் கசப்பும், அழுத்தமும் பெருகியுள்ளன. அதனை எப்படி சீர் செய்வது அடையாளங்களை கண்டறிவது என்பதோடு இதுதொடர்பான ஆராய்ச்சிகளையும் நாம் அவதாரம் நூலில் வாசித்து அறியலாம்.  இந்த மின்னூலை இன்னும் சில நாட்களில் நீங்கள் கூகுள் பிளே புக்ஸில் வாசிக்கலாம்....

தேதியிடா குறிப்புகள் எக்ஸ்டென்சன் மின்னூல் வெளியீடு - கூகுள் பிளே புக்ஸ் வலைத்தளம்

படம்
  2018ஆம் ஆண்டில் எழுதப்பட்ட நாட்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்ட நூல். இதில், நாளிதழில் வேலை செய்யும் ஒருவனின் பல்வேறு அனுபவங்கள், அவனைச் சுற்றியுள்ளவர்கள், எழுத்து, வாசிப்பு அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒருவகையில் அந்த காலகட்ட பல்வேறு செய்திகள் கூறப்படுகின்றன. இதில் கூறப்படும் சில கடைகள்,மனிதர்கள் இன்று இருப்பது கடினம். காலசுழற்சியை நிலைப்படுத்தி வைக்கும் முயற்சிதான் இது.  தேதியிடா குறிப்புகள் மின்னூலை வாசிக்க..... https://play.google.com/store/books/details?id=WFiKEAAAQBAJ

சத்யமேவ ஜெயதே மின்னூல் இப்போது கூகுள் பிளே புக்ஸ் வலைத்தளத்தில்.... வாசியுங்கள்!

படம்
  காந்தியின் 150ஆவது பிறந்த ஆண்டைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறோம். இந்த காலத்தில் இந்தியா எப்படி இருக்கிறது, காந்தியின் காலத்திற்கும் இன்றைக்கும் என்ன வேறுபாடுகளை நாடு அடைந்திருக்கிறது, இன்றும் விவாதிக்கப்படும் காந்தியின் கருத்துகள், பரிசோதனைகள் என்ன என்பதைப் பற்றிய கட்டுரைகளைக் கொண்டுள்ள நூல் இது. பல்வேறு மதவாத சக்திகளும் காந்தியை தத்தெடுத்து தங்களின் கருத்துகளுக்கு ஏற்றபடி அவரை உருமாற்றம் செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் காந்தியவாதிகள் எப்படி செயல்படவேண்டும் என்பதையும் நூல் கூறுகிறது. உண்மையே கடவுள் என்பதை ஒருவர் தன் வாழ்வு வழியாக எப்படி தேடி கண்டறிகிறார் என்பதற்கு காந்தியின் வாழ்க்கையே முக்கியமான சான்று. நூலில் காந்தி நல்லவர் என்று வாதிடவில்லை. அவர் பல்வேறு குறைகளைக் கொண்ட மனிதர்தான். மகத்தான மனிதராக மாற இடையறாது பல்வேறு பரிசோதனைகளை செய்துகொண்டிருந்தார். உண்மையை காந்தி கடவுளென கண்டுகொண்ட தருணம் முக்கியமானது. பல்வேறு அக, புற அழுத்தங்களுக்கு இடையில் இந்தியாவை ஒரே நாடாக கலாசார வேற்றுமைகளோடு கட்டமைக்க முயன்ற ஆளுமை காந்தி. நாம் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமான பல்வேறு திறன்கள் உள்

நினைத்து வெகுகாலமாகிவிட்டது மின்னூல் வெளியீடு - கூகுள் புக்ஸ் பிளே சென்டர்

படம்
  இரா.முருகானந்தம், வினோத், கதிரவன் என மூன்று வெவ்வேறு நண்பர்களுக்கு கடந்த சில ஆண்டுகளில் எழுதிய கடிதங்களின் தொகுப்பே இந்த நூல். இதில் அக்காலகட்ட அரசியல், சமூகம், உடல், உள்ள பிரச்னைகள் பேசப்பட்டுள்ளன. மேறகூறிய மூவரும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள். முருகானந்தம், அரசியல், பேச்சு, நூல்களை வாசித்து அதை பகிர்வதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலையைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் இந்தியா முழுக்க அலைந்து திரிந்தவர். அப்படி சேர்த்த அனுபவங்களைக் கொண்டு பயண நூல் ஒன்றைக் கூட எழுதி வெளியிட்டிருக்கிறார். இடதுசாரி எழுத்தாளரான கதிரவன், சமூக நோக்கம் கொண்டவர். அவரது குடும்பமே இடதுசாரி சித்தாந்த அடிப்படையைக் கொண்டது. இவர் தமிழ் நாளிதழ் ஒன்றில் பணியாற்றிவருகிறார். இந்த மூன்று நண்பர்களிடமும் நான் இடையறாது கடிதம் எழுதி உரையாடியதுதான் இப்போது நூலாகி இருக்கிறது. இன்று தகவல்தொடர்புக்கான காசு மலிவாகி இருக்கிறது. ஆனால் இதயங்களால் நாம் வெகு தொலைவில் தள்ளி இருக்கிறோம். அந்த இடைவெளியை இக்கடித நூல் குறைக்கும். பிறரோடு தகவல் தொடர்பு கொள்வது, அறிவை, அனுபவத்தை பகிர்வது எந்தளவு முக்கியம் என்பதை நினைத்து வெகுகாலமாகிவிட்டது

கடித நூலை பதிவேற்ற செய்யமுடியாமல் தடுத்த அமேஸானின் அல்காரிதம்! - அமேஸான் அக்கப்போர் -1

படம்
  அமேஸானுடன் ஒரு அக்கப்போர்! அமேஸானில் இதுவரை பத்து மின்னூல்களை வெளியிட்டுள்ளேன். ஆனால் இதுவரை பெரிய பிரச்னை ஏதும் வந்தது கிடையாது. நூலில் பயன்படுத்துவது அனைத்தும் யுனிகோட் எழுத்துரு என்பதால் பிழைகளும் இருக்காது. அதாவது படிக்கும்போது பெட்டிபெட்டியாக வரும் பிரச்னையைச் சொல்லுகிறேன்.  இதுவரை அப்படி புகார் வந்ததில்லை. ஆனால் இப்போது அமேஸான் அப்படிப்பட்ட பிரச்னைகள் வருவதாக பயனர்கள் புகார் கொடுத்துள்ளனர். என பல பக்கங்களுக்கு ஒரு கோப்பைக் காட்டி அதிலுள்ள தவறுகளை திருத்துங்கள். பிறகு நூலை பதிவேற்றம் செய்யலாம் என நிபந்தனை விதிக்கிறது. இந்த சவாலைத் தாண்டுவதே கடினம். அப்படித் தாண்டினால் அடுத்துதான் அட்டைப்பட அக்கப்போர்கள் வரும். இதற்கு அடுத்ததாக உள்ளது, நூலின் அட்டைப்படம். பொதுவாக அட்டைப்படத்தை நான் ஜிம்பில் அல்லது போட்டோஷாப்பில் எல்லாம் செய்வது கிடையாது. அதற்கென கன்வா வலைத்தளம் உள்ளதே என ஒரு அசட்டு துணிச்சல். அதே துணிச்சல் தான் இதற்கு முன்னர் பயன்பட்டது. ஆனால் இந்த முறை டோல்கேட்டில் பணத்தை கேட்டு மிரட்டுவது போலாகி விட்டது நிலைமை. பத்தாயிரம் பிக்சல்களுக்குள் அட்டைப்படம் அடங்கவில்லை என அமேஸானின் அல

புதிய மின்னூல் வெளியீடு - மயிலாப்பூர் டைம்ஸ் - அமேஸானில் வாசியுங்கள்

படம்
  பிளாக்குகளில் அதாவது வலைப்பூவில் எழுதுவது என்பது டயரிக்குறிப்பு போலத்தான் அதற்கு மேல் அதில் ஏதுமில்லை என்று கணியம் சீனிவாசன் ஒருமுறை கூறினார். வலைப்பூவில் எழுதப்படும் கட்டுரைகளைப் பொறுத்து இப்படி கூறலாம். அவர் கூறுவதற்கு மயிலாப்பூர் டைம்ஸ் கட்டுரைகள் சற்று ஒத்துவரும். இந்த நூலில், எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி தற்போது வரையிலான  நிகழ்ச்சிகளை சுட்டப்பட்டுள்ளன.  மயிலாப்பூர் என்பது காஞ்சிபுரம் போலத்தான். இங்கும் தெருவுக்கு தெரு கோவில்கள் உண்டு. தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கும் பிராமணர்களின் குழுக்கள் உண்டு. கபாலீஸ்வரர் கோவில், அதைச்சுற்றியுள்ள முக்கியமான நூல், உணவு நிறுவனங்கள் என பேச ஏதாவது விஷயங்கள் உண்டு. ஆண்டுதோறும் அனைத்து மாதங்களிலும் இங்குள்ள கோவில்களில் ஏதேனும் ஒரு விசேஷம் நடந்தவாறே இருக்கும். இங்கு வாழும் ஒரு பத்திரிகையாளன் பார்க்கும், கேட்கும், அனுபவித்த விஷயங்களின் தொகுப்புதான் நூல்.  இந்த அனுபவங்களை வாசிக்கும் யாவரும் புன்னகையுடன் அதை வாசிக்க முடியும். நூலின் கட்டுரைகள் அனைத்துமே சுய எள்ளல் தன்மையுடன் தான் உள்ளன. எனவே, வெறும் டயரிக் குறிப்பாக மட்டும