இந்து மதத்தை முற்றாக அழித்தால்தான் தீண்டாமை ஒழியும்! தீண்டத்தகாதவர்களை ஆளும் வர்க்கம், அரசு, இடதுசாரிகள் தொடர்ச்சியாக கீழே இழுத்து தள்ளி வருகிறார்கள். இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டிருக்கலாம், ஆனால், சாதிமுறை அப்படியேதான் உள்ளது. சாதிமுறை தொடரும்போது அதைப் பின்பற்றி தீண்டாமையும் அப்படியே அழியாமல் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆளும் வர்க்கம், இதை அறிந்தும் அதை அழிக்காமல் அப்படியே வளரவிட்டுவருகிறது. சாதிமுறை அழிவது என்றால் இந்துமதம் அழிவது என்றே அர்த்தமாகிறது. ஒரு இந்து, இந்தியாவைக் காக்க இந்துமதத்தை அழிக்க முன்வருவாரா? தீண்டாமையை அப்படியே வளரவிடுவதால், ஆளும் வர்க்கத்திற்கு நிறைய சமூக பொருளாதார பயன்கள் கிடைக்கின்றன. எல்லாவற்றையும் விட முக்கியமாக தீண்டத்தகாத மக்களின் வாக்குகளைப் பெற முடிகிறது. வட்டியில்லாத கடன்களை வழங்குவதைப் போல வாக்கு வங்கியாக மக்கள் இருக்கிறார்கள். தீண்டத்தகாதவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் வறுமையில், பலவீனமானவர்களாக நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டவர்களாக, ஒருங்கிணைக்கப்படாதவர்களாக உள்ளனர். சாதி, துணைசாதி பிரிவுகள் என பலவும் அவர்களை ...