இடுகைகள்

ஆபரேஷன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸிஸோடைபல் டிஸார்டருக்கான மருந்துகள் - மருத்துவத்துறையில் ஏற்பட்ட புரட்சி

படம்
  இக்குறைபாடு கொண்ட மனிதர்கள் ஒருவர் பேசும்போது அவர்களைப் பார்க்க மாட்டார்கள். வேறு எங்காவது பார்த்துக்கொண்டிருப்பார்கள். அதிகம் பேர்கூடும் மது விருந்து, அலுவலக சந்திப்பு என்பதெல்லாம் இவர்களுக்கு ஒவ்வாமைதான். பெரும் பதற்றமாக, தவிப்புடன் அமர்ந்திருப்பார்கள். உடைகளையும் சரியானதாக போட மாட்டார்கள். கறைபடிந்தவற்றை அணிந்துகொண்டிருப்பார்கள். புதியவர்களுடன் பேசுவது, சந்திப்பது என்பதை அறவே தவிர்ப்பார்கள். இவர்களது பெயரை யாரேனும் சொன்னால் கூட பதற்றமாவார்கள். பிறர் தனது பெயரைச் சொல்லி சிரிக்கிறார்கள் என கற்பனை செய்துகொள்வார்கள். உலகளவில் இந்த குறைபாடு மூன்று சதவீத பேர்களைப் பாதிக்கிறது.  ஆன்டிசைகோட்டிக் மருந்துகளை ஸிஸோய்ட், ஸிஸோடைபல் குறைபாடுகளை சரிசெய்ய பயன்படுத்துகிறார்கள். ஹாலோபெரிடால், குளோஸாபைன், ரைஸ்பெரிடன் ஆகியவை முக்கியமான மருந்துகள். இம்மருந்துகள் பயன்படுத்தப்படுவதற்கான வரலாற்றைப் பார்த்துவிடுவோம்.  1950ஆம் ஆண்டு பிரான்ஸ் நாடு. இங்கு அறுவை சிகிச்சையாளர் ஹென்றி லாபோரைட் ஒரு பிரச்னையில் இருந்தார். அவர், நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது அவர்களை சற்று அமைதியாக வைத்திருக்க சரியான மருந்த

ஆட்டிச குறைபாடு கொண்ட மருத்துவர், அறுவைசிகிச்சை நிபுணராகும் கதை! - எ மிராக்கிள் - துருக்கி டிவி தொடர்

படம்
மிராக்கிள் டாக்டர் - துருக்கி தொடர் குட் டாக்டர் - கொரிய மூல தொடர் எ மிராக்கிள்  துருக்கி டிவி தொடர் மூலம் குட் டாக்டர் - தென்கொரிய டிவி தொடர் எம்எக்ஸ் பிளேயர் தென்கொரிய தொடரை ரீமேக் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். தமிழில் பார்க்க நன்றாக இருந்தாலும் எம்எக்ஸ் பிளேயரில் விளம்பரங்கள் இப்போது அதிகம் என்பதால் செலவிடும் நேரம் அதிகமாகலாம்.  அலி வெபா என்ற ஆட்டிச குறைபாடு கொண்டவர் எப்படி துருக்கியின் பெரும் மருத்துவமனையில் தனது கனவான அறுவை சிகிச்சை மருத்துவர் என்ற இடத்தை அடைந்தார் என்பதுதான் மையக்கதை.  இதைச்சுற்றி ஏராளமான கிளைக்கதைகள் உள்ளன. அவையும் தொடரை 197 எபிசோடுகள் வரை பார்க்க நமக்கு உதவுகின்றன. ஆட்டிச பாதிப்பு கொண்ட மருத்துவர் என்பதால் அவரே முழுக்க புனிதமாகவும் பிறரை குற்றவாளிகளாகவும் காட்டும்  முறையை இயக்குநர் பின்பற்றவில்லை. ஆட்டிச மருத்துவர் என்றாலும் அவரும் உணர்ச்சி வசப்பட்டு சிலதவறுகள் செய்பவர்களாகவும், அவரை மெல்ல ஏற்றுக்கொள்ளும் மருத்துவர்கள் குழுவினர் அவரை சிறந்தவர்களாக்க முயல்வதும் தொடரில் பார்க்க முடிகிறது.  யாரும் முழுக்க நல்லவர்களுமில்லை. முழுக்க கெட்டவர்களுமில்லை என்பதை அலி வெ