இடுகைகள்

சமூகம்- சம்பள தீண்டாமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சம்பள தீண்டாமை இல்லாத நாடு எது தெரியுமா?

படம்
பெல்ஜியத்தின் பெருமை ! ஐரோப்பிய நாடுகளிலேயே ஆண் , பெண் சம்பளவிகித வேறுபாடு குறைவாக உள்ள நாடு பெல்ஜியம்தான் . வித்தியாசம் 1.1% தான் . ப்ரூசெல்ஸை தலைநகரமாக கொண்ட பெல்ஜியம் நாட்டின் மக்கள்தொகை 11,429,336. ப்ரெஞ்சு , டச்சு மொழி பேசும் இங்கு தனிநபர் வருமானம் ( ஜிடிபி ) 46,301 டாலர்கள் .   இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் ஆண்களைவிட பெண்களுக்கு சம்பளம் குறைவு . ஸ்வீடனில் 10.5%, அமெரிக்காவில் 19.5% என்று அமைந்துள்ளது . இங்கு குறிப்பிட்ட சம்பள விகிதம் என்பது முழுநேர வேலைகளுக்கானது . பகுதிநேர வேலைகளுக்கான சம்பளவிகிதத்தில் பெல்ஜியம் இன்னும் இறங்கி வரவேண்டியிருக்கிறது . " இந்த மாற்றம் ஒரேநாளில் ஏற்படவில்லை . ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே வேலையைச் செய்தாலும் சமமான சம்பளம் தராதது தவறு என்று இன்றுதான் பலரும் உணரத்தொடங்கியுள்ளனர் " என்கிறார் பெல்ஜியத்தில் பெண்களுக்கு சம ஊதியம் கேட்டு போராடும் அமைப்பின் தலைவரான இன்கா வெர்ஹர்ட் .