இடுகைகள்

சடங்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெற்றோர் பார்த்து வைத்த அமெரிக்க மாப்பிள்ளையை கைவிட்டு ஓடும் இளம்பெண்ணின் பயணம்!

படம்
  சசிரே கா பரினாயம் இயக்கம் – கிருஷ்ண வம்சி இசை – மணிசர்மா – வித்யாசாகர்   தருண், ஜெனிலியா   ஹைதராபாத்தில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும் பெண்ணுக்கு   சொந்த ஊரில் திடீரென கல்யாணம் உறுதியாகிறது. புஜ்ஜம்மா எனும் சசிரேகாவுக்கு யார் மாப்பிள்ளை என்றே தெரியவில்லை. டௌரியாக 20 லட்சம் பேசி நடக்கும் பஞ்சாயத்தில் கலவரமாகிறது. இதனால பயந்துபோன சசி, கல்யாண வீட்டில் இருந்து தப்பியோடுகிறார். அவருக்கு இளைஞர் ஆனந்த் உதவுகிறார். இருவரது வாழ்க்கையும் என்னவானது, ஓடிப்போன பெண்ணை பெண்ணின் அப்பா பிடித்தாரா, டௌரி பஞ்சாயத்தில் அவமானப்பட்ட மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வன்மதை எப்படி வெளிப்படுத்தினார்கள் என்பதே கதை.   கிருஷ்ணவம்சி படம் தெலுங்கு பெருமை. விஜயவாடாவின் அருமை,பெருமை புகழ். தெலுங்கு கல்யாண சடங்குகள், அதன் மகத்துவம் என படம் கலாசார வழியில் பயணிக்கிறது. படத்தில் நம்மை நெகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக நிறைய காட்சிகள் உள்ளன. பெற்றோர் பிள்ளைகளோடு எந்தளவு மனம்விட்டு பேசவேண்டும், அதுவும் திருமணம் என்ற விஷயத்தில் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்பதை இரண்டரை மணி நேரத்தில் சொல்கிறார்கள். மணிசர்மா,

முன்முடிவுகளை களைந்தால்தான் புத்தாண்டு புதியதாக இருக்கும் - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி புதிதாக தொடங்கலாமா? புதிய ஆண்டிற்கான தொடக்கம் இது. புதிய ஆண்டு என்றால் அதற்கான அர்த்தம் என்னவென்றபுரிந்துகொள்கிறோம்? புதியது, முழுக்கவே புதியது, இதுவரை நடைபெறாத ஆண்டா? புதியது என பேசிக்கொள்கிறோம் என்றால் சூரியனுக்கு கீழ் உருவாகும் புதிய   ஒன்றா?   புத்தாண்டு, மகிழ்ச்சியான புத்தாண்டு என ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைக் கூறுகிறோம். உண்மையிலேயே புதிய ஆண்டு என்பது மகிழ்ச்சியானதாக நமக்கு அமையுமா?   புத்தாண்டு, புதியதாக அமையுமா அல்லது பழைய மாதிரியே வடிவத்தில் பழகியதாக ஆண்டுதோறும் நடக்கிறதா, இருக்குமா? அதே பழைய சடங்குகள், பழைய கலாசாரம், பழைய பழக்க வழக்கங்கள், இதுவரை என்ன செய்துகொண்டிருந்தோமோ அதை அப்படியே செய்துகொண்டிருப்போமா?   அதே பழைய விஷயங்களை புதிய ஆண்டிலும் செய்துகொண்டிருப்போமா? புதிதாக ஏதேனும் இருக்குமா? புதிதாக நாம் இதுவரை பார்க்காத ஒன்றாக இருக்குமா? நீங்கள் இதுபோன்ற கேள்வியைத்தான் பின்தொடர்ந்து செல்லவேண்டும். வாழ்க்கையின் அனைத்து நாட்களிலும் இதுவரை செய்யாத விஷயங்களை செய்யவேண்டும்.   புதிய செயல்களை செய்யும்போது மூளை அதன் முன்முடிவுகள், தீர்ப்புகள், கருத்துகள்,

சங்க காலம் முதல் இன்றுவரை உப்பின் சமூக, பொருளாதார முக்கியத்துவத்தைப் பேசும் நூல்- உப்பிட்டவரை

படம்
  உப்பிட்டவரை ஆ.சிவசுப்பிரமணியன் காலச்சுவடு பதிப்பகம் பக்கம் 164   உப்பு என்றால் உங்களுக்கு என்னென்ன விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன? பழமொழிகள், உப்பு குறைந்து சாப்பிடாமல் போல உணவு, ஊறுகாய், அப்பளம், நன்றி என ஏதேதோ நினைவுக்கு வரும். ஆனால் இந்த அனைத்திலும் உப்பு மையமாக உள்ளதுதானே? இந்த நூல் முழுக்க உப்பு அதன் வணிக, சமூக, பொருளாதார முக்கியத்துவம் பற்றி பேசப்பட்டுள்ளது. சங்க காலம் தொடங்கி இப்போது வரை உப்பின் முக்கியத்துவம் என்ன, அதனை உற்பத்தி செய்யும் உப்பள தொழிலாளர்கள் நிலை, அவர்கள் பயன்படுத்தும் தொழில்சார்ந்த வாழ்க்கை, உப்பளத்தை மையப்படுத்திய நாவல்கள் என நிறைய விஷயங்களை உப்பிட்டவரை நூலில் தோழர் ஆ சிவசுப்பிரமணியன் பேசியிருக்கிறார். இதுபோன்ற ஆய்வுகளை செய்து நூல்களை தேர்ந்து படித்து அதனை வாசகர்களுக்கு எழுதி தொகுத்து அளிப்பது சாதாரண காரியமில்லை. இதை நீங்கள் இந்த நூலில் குறிப்பிட்டுள்ள மேற்கோள் நூல்களின் வரிசைப்பட்டியலை பார்த்தாலே புரிந்துகொள்ளலாம். அந்தளவுக்கு நூலாசிரியர் உழைத்துள்ளார். சமூகம் சார்ந்த விஷயங்களில் முக்கியமானது திருநெல்வேலி பகுதியில் உள்ள திருடர்கள் பிறரது வீட்