முன்முடிவுகளை களைந்தால்தான் புத்தாண்டு புதியதாக இருக்கும் - ஜே கிருஷ்ணமூர்த்தி
ஜே கிருஷ்ணமூர்த்தி |
புதிதாக தொடங்கலாமா?
புதிய ஆண்டிற்கான
தொடக்கம் இது. புதிய ஆண்டு என்றால் அதற்கான அர்த்தம் என்னவென்றபுரிந்துகொள்கிறோம்?
புதியது, முழுக்கவே புதியது, இதுவரை நடைபெறாத ஆண்டா? புதியது என பேசிக்கொள்கிறோம் என்றால்
சூரியனுக்கு கீழ் உருவாகும் புதிய ஒன்றா? புத்தாண்டு, மகிழ்ச்சியான புத்தாண்டு என ஒருவருக்கொருவர்
வாழ்த்துகளைக் கூறுகிறோம். உண்மையிலேயே புதிய ஆண்டு என்பது மகிழ்ச்சியானதாக நமக்கு
அமையுமா?
புத்தாண்டு,
புதியதாக அமையுமா அல்லது பழைய மாதிரியே வடிவத்தில் பழகியதாக ஆண்டுதோறும் நடக்கிறதா,
இருக்குமா? அதே பழைய சடங்குகள், பழைய கலாசாரம், பழைய பழக்க வழக்கங்கள், இதுவரை என்ன
செய்துகொண்டிருந்தோமோ அதை அப்படியே செய்துகொண்டிருப்போமா? அதே பழைய விஷயங்களை புதிய ஆண்டிலும் செய்துகொண்டிருப்போமா?
புதிதாக ஏதேனும்
இருக்குமா? புதிதாக நாம் இதுவரை பார்க்காத ஒன்றாக இருக்குமா? நீங்கள் இதுபோன்ற கேள்வியைத்தான்
பின்தொடர்ந்து செல்லவேண்டும். வாழ்க்கையின் அனைத்து நாட்களிலும் இதுவரை செய்யாத விஷயங்களை
செய்யவேண்டும்.
புதிய செயல்களை
செய்யும்போது மூளை அதன் முன்முடிவுகள், தீர்ப்புகள், கருத்துகள், குற்றச்சாட்டுகள்
ஆகியவற்றிலிருந்து எளிதாக வெளியேறி சுதந்திரமாக இருக்கும். நாம் மனதிலுள்ள அனைத்து
பழைய விஷயங்களையும் எடுத்து தனியாக வைத்துவிட்டு புதிதாக ஆண்டைத் தொடங்குவோமா?
வாழ்க்கையை
நீங்கள் இந்த முறையில் புதிதாக தொடங்கினால், அது ஆச்சரியமான ஒன்றாக இருக்கும். அதற்கு
காரணம், நமது வாழ்க்கைக்கான பொருள் என்பது மிகச்சிறியதுதான். நாம் பிறக்கிறோம், பிடிக்கிறதோ
இல்லையோ கல்வி கற்கிறோம் என வாழ்க்கை நடைபெறுகிறது. நமது வாழ்க்கை நடைபெறும் செல்லும் திசையை மாற்ற
முடியுமா? சாத்தியம் ஆகுமா? அல்லது நமது அர்த்தமில்லாத வாழ்க்கையைப் பற்றி விமர்சனம்
செய்துகொண்டே வாழப்போகிறோமா?
நமது மூளையில்
வாழ்க்கை பற்றிய ஏராளமான கருத்துகளை திணித்து வைக்கிறோம். உலகிலுள்ள தேவாலயங்கள், கோவில்கள்
ஆகியவற்றில் பழமையான பூஜை, சந்தியாவந்தனம் ஆகியவற்றைப் பின்பற்றி வருகிறார்கள். நாம்
இவற்றை நிறுத்திவிட்டு இதயம், மனம் மூலம் புதிதாக வாழ்க்கையைப் பார்க்கத் தொடங்கவேண்டும்.
அப்போது நம் வாழ்க்கையில் என்ன வரும்?
Questions
and answers meeting madras, 1 january, 1985
In the
problem is the solution
p.130
கருத்துகள்
கருத்துரையிடுக