மாணவர்களை விஞ்ஞானிகளாக்க புதுமையான முறைகளைக் கையாளும் அறிவியல் ஆசிரியர் - மைதிலி

 











மாணவர்களை விஞ்ஞானிகளாக்க முயலும் ஆசிரியர் – மைதிலி

புதுக்கோட்டையில் உள்ள கம்மங்காட்டில் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, அறிவியல் ஈடுபாட்டில் தலைசிறந்த பள்ளி என பெயர் பெற்றுவருகிறது.

மாநில அளவில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான பரிசுகளை,  இந்த அரசு பள்ளி மாணவர்கள் பெற்று வருகிறார்கள். இதெல்லாம் கடந்து மத்திய அரசின் உதவித்தொகைக்கான தேர்வுகளை எழுதியதில் 14 பேர் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இத்தனைக்கும் என்ன காரணம் என்று கேட்டால், மைதிலி டீச்சர் என கோரசாக சொல்லுகிறார்கள் மாணவர்கள்.

‘’எனக்கு மாணவர்களின் ஒழுக்கம் என்பது முக்கியம். பாடங்களை சாதாரணமாக சொல்லித் தந்தபிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுத்தான் மாணவர்கள் நான் கற்றுத்தரும் வழிகளை ஏற்கத் தொடங்கினார்கள்’’ என்று பேசும் மைதிலி, வேதியியல் பட்டதாரி. இவர் அறிவியல் பாடங்களின் முக்கியமான அம்சங்களை சினிமா பாடலாக மாற்றிப்பாடுகிறார். பிறகு, பாடங்களை எப்போதும் போல நடத்துகிறார். இதனால் மாணவர்களுக்கு கடினமான பாடங்கள் கூட எளிதாக புரிகிறது.

அறிவியல் கண்காட்சிகளில் கம்மங்காடு அரசுப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு கோள் மண்டலம், பிளாஸ்டிக்கில் இருந்து ப்ளூடூத் ஸ்பீக்கர், இதயத்துடிப்பை கண்காணிக்கும் எந்திரம், கடல் அலைகளிலிருந்து மின்சாரம், காகிதங்களை மறுசுழற்சி செய்யும் எந்திரம் என உருவாக்கி சாதித்ததில் மைதிலியின் பங்கு முக்கியமானது. ஏஆர்லூபா, எஃப்எக்ஸ் குரு என சில அப்ளிகேஷன்களைக் கூட பயன்படுத்தி மாணவர்களுக்கு அறிவியல் அறிவைக் கொண்டு சேர்க்கிறார்.

பள்ளி மாணவர்களின் வீடுகளில், பள்ளிக்கு அருகிலுள்ள கடைகளில் துணிப்பைகளை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தினார். இதில், பேச்சு மட்டுமே உதவாது என்பதற்காக, மாணவர்களுக்கு சொந்த செலவில் துணிப்பைகளை வாங்கிக் கொடுத்துள்ளார்.  இவருக்கு, 2019ஆம் ஆண்டு புதுமைத்திறன் கொண்ட ஆசிரியர் விருதை தமிழ்நாடு அரசு வழங்கியது. டாக்டர் அப்துல்கலாம் விருது, சிறந்த கண்காட்சியாளர் விருது ஆகியவற்றை மைதிலி பெற்றிருக்கிறார்.  விருதுகளைக் கடந்து தன்னிடம் படிக்கும் மாணவர்கள் ஆராய்ச்சியாளர்களாக விஞ்ஞானிகளாக கண்டுபிடிப்பாளர்களாக உருவாகவேண்டும் என்பதுதான் அவரின் ஆசை. மைதிலியின் மாணவர்கள் எதிர்காலத்தில் அதை உருவாக்குவார்கள் என்றே சொல்லலாம்.  

 

 

 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

திருச்செல்வன் 

thanks

tenor.com

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்