ஆவணப்படங்களை தரமாக உருவாக்கி விருதுகளைப் பெறும் இந்தியர்கள்!

 




ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தன்





உலக அளவில் கவனம் பெற்ற இந்திய ஆவணப்படங்கள்

தி சினிமா டிராவலர்ஸ்

ஷிர்லி ஆப்ரஹாம் – அமித் மாதேஷியா

சிறப்பு தங்க கண் விருது, கேன்ஸ் 2016

விவேக்

– ஆனந்த் பட்வர்த்தன்

சிறந்த ஆவணப்பட விருது-

2018ஆம் ஆண்டு  ஐடிஎஃப்ஏ, நெதர்லாந்து

எ நைட் ஆஃப் நோயிங் நத்திங்

பாயல் கபாடியா

சிறந்த ஆவணப்படம், தங்க கண் விருது கேன்ஸ் 2021

ஆம்ப்ளிஃபை  வாய்சஸ் விருது, 2021

ரைட்டிங் வித் ஃபயர்

ரின்டு தாமஸ் – சுஸ்மித் கோஷ்

உலக சினிமா ஆவணப்படம் – பார்வையாளர்கள் விருது, தாக்கம் மற்றும் மாற்றத்திற்கான விருது, சிறப்பு ஜூரி விருது, சண்டேன்ஸ் விழா 2021, பார்வையாளர்கள் விருது, ஐடிஎஃப்ஏ தி நெதர்லாந்து 2021, சிறந்த ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை செய்யப்பட்ட ஆவணப்படம் 2022

வொய்ல் வீ வாட்ச்டு

வினய் சுக்லா

ஆம்ப்ளிஃபை வாய்சஸ் விருது டிஐஎஃப்எஃப் 2022

ஆல் தட் பிரீத்ஸ்

சௌனாக் சென்

உலக சினிமா ஆவணப்படம் – கிராண்ட் ஜூரி விருது, சண்டேன்ஸ் விழா 2022, சிறந்த ஆவணப்படம், தங்க கண் விருது, கேன்ஸ் 2022, சிறந்த ஆவணப்பட விருதுக்கான பரிந்துரை, ஆஸ்கர் விருது, 2023

தி எலிபன்ட் விஸ்பர்ஸ்

கார்திகி கன்சால்வ்ஸ்

சிறந்த ஆவணக்குறும்பட பரிந்துரை 2023

அகென்ய்ஸ்ட் தி டைட்

சர்வினிக் கௌர் – உலக சினிமா ஆவணப்படம்

சிறப்பு ஜூரி விருது – வெரிடெ ஃபிலிம்மேக்கிங் – சண்டேன்ஸ் 2023

ஃபினான்ஷியல டைம்ஸ்

2

ஆனந்த் பட்வர்தன் எடுத்த விவேக் என்ற ஆவணப்படம் நான்கு மணிநேரம் ஓடக்கூடியது. 2013ஆம் ஆண்டு நரேந்திர தபோல்கர் கொல்லப்படுவது தொடங்கி 2017ஆம்ஆண்டுபத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் இறப்பது வரையில் ஆவணப்படம் ஓடுகிறது. டிஐஎஃப்எஃப் விழாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திரையிடப்பட்ட படம் இது.

மைக்கேல் மூர், வெர்னர் ஹெர்சாக், ரிதி பன்ஹ் ஆகிய இயக்குநர்கள் ஆவணப்படங்களை எடுப்பதில் சாதித்த ஆளுமைகள். பெரும்பாலும் இவர்கள் எடுக்கும் ஆவணப் படங்கள் அனைத்தும் அரசியல் சார்ந்த மையப்பொருட்களைக் கொண்டவை. 2018ஆம் ஆண்டு ஆனந்த் பட்வர்தனின் விவேக், நெதர்லாந்தில் ஆவணப்பட விருது வென்றது. இந்த விழாவில் இந்திய ஆவணப்படம் முதல்முறையாக விருது வென்றது முக்கியமான பெருமை.

தொடக்க கால ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டபோது, அதற்கான நிதியுதவி அரசின் திரைப்படக் கழகத்தில் இருந்து பெறப்பட்டது. பிறகு எடுக்கப்பட்ட ஆவணப்பபடங்களுக்கு நிதி என்பது தனிநபர்களிடமிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பெறப்பட்டது. இப்போது முன்பை விட நிறைய ஆவணப்படங்களை இளம் ஆவணப்பட இயக்குர்கள் தரமாக எடுத்து வருகிறார்கள்.

 இன்சிக்னிஃபிகன்ட் மேன் என்ற ஆவணப்படத்தை ரன்கா, சுக்லா ஆகியோர் எடுத்தனர். ஆம் ஆத்மி கட்சி எப்படி உருவானது, அரசியல் களத்தை எப்படி மாற்றியது என்பது பற்றிய ஆவணப்படம் இது. 700க்கும் மேற்பட்டோரின் நிதியைப் பெற்று க்ரௌவுட் ஃபண்டிங் முறையில் திரைப்படம் திரையிடப்பட்டது. ஆவணப்படங்களை வேகமாக எடுப்பதா, நிதானமாக எடுப்பதா என சிலருக்கு குழப்பம் ஏற்படலாம். அது நீங்கள் எடுத்துக்கொள்ளும் கருப்பொருளைப் பொறுத்ததே. ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தன், தனது ஜெய் பீம் காம்ரேட் என்ற படத்தை  பதினான்கு ஆண்டுகள் செலவழித்து எடுத்தார். 1997ஆம் ஆண்டு ரமாபாய் அம்பேத்கர் காலனியில் தலித்துகள் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றிய ஆவணப்படம் இது.  

இப்போது ஆவணப்படங்களிலும் குறும்படம் வந்துவிட்டது. 2019ஆம் ஆண்டு டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது சமூக வலைத்தளங்களில் காவல்துறையினர் செய்த வன்முறைக் காட்சிகள் வெளியாகின. அவற்றை எடுத்து தொகுத்து ஆவணப்படமாக தொகுத்தனர். இந்தவகையில்  பல்லவி பால் மற்றும் சென் ஆகியோர் சேர்ந்து பிளைண்ட் ராபிட் என்ற குறு ஆவணப்படம் ஒன்றை உருவாக்கினர். 2021ஆம் ஆண்டு ராட்டர்டாம் 2021ஆம் ஆண்டு விழாவில் பிளைண்ட் ராபிட் காணொலி திரையிடப்பட்டது.

 இந்தியாவில் புதிதாக ஆவணப்படங்களை உருவாக்குபவர்கள் நாட்டின் பிரச்னைகளை மிக நெருக்கமாக பதிவு செய்து வருகிறார்கள். இதனால் உலக அளவிலான திரைப்பட விழாக்களில் இந்திய ஆவணப்படங்கள் தனித்துவமாக தெரிகின்றன. பரிசுகளை வென்று வருகின்றன.

 

ஃபினான்ஷியல் எக்ஸ்பிரஸ்

ஃபைசல் கான் கட்டுரையைத் தழுவியது.


கருத்துகள்