அம்மாவால் வல்லுறவு கொலையாளியான மகனின் கதை!

 










லூகாஸ், ஹென்றி லீ

அம்மாக்களைப் பற்றிய கதைகள், சினிமாக்கள் நிறைய பார்த்திருப்பவர்களுக்கு லூகாஸின் கதை பிடித்தமானதாக இருக்காது. அப்படியொரு அம்மாவாக பூமியில் வாழ்ந்தவர். குடும்பத்தில் மொத்தம் ஒன்பது பிள்ளைகள். அதில் கடைசியாக பிறந்து அம்மாவின் அனைத்து வெறுப்பையும் பெற்றவர் லூகாஸ். அதற்கு பதிலடியாக மொத்த சமூகத்தையும் பழிதீர்த்தார். அப்பா, ஆண்டர்சன்  மதுபானத்தை தயாரிப்பதே வேலை. வேலை முடிந்ததும்  தயாரித்த மதுவை குடித்துவிட்டு தெருவில் படுத்து உருள்வார். அம்மா, வயோலா மதுவை விற்று காசு சேர்ப்பதும், சீசனுக்கு விபச்சாரம் செய்வதும் வேலை. அவர் தன் கணவனையும், மகனையும் பழிவாங்குவதற்கு இருவரையும் தான் செக்ஸ் வைத்துக்கொள்ளும் அறையில் இருக்க வைப்பார். அதுதானே சிறந்த பழிவாங்கல்.

லூகாஸ் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினான். அவருக்கு, பெண்கள் உடையை அணிவித்துஅனுப்பினாள் வயோலா. காலில் ஷூக்கள் இல்லை. அதை ஆசிரியர் வாங்கிக் கொடுத்தார்.’’ எதற்கு அன்பளிப்புகளை வாங்கினாய்?’’ என அம்மா அடிக்காத அடி கிடையாது. லூகாஸ் ஆசையாக பூனை வளர்த்தால், அதை கொன்று தெருவில் வீசுவது அம்மா வயோலாவுக்கு பிடித்தமானது. மகனை எப்படியெல்லாம் கொடுமை படுத்த முடியுமோ அப்படியெல்லாம் கொடுமைப்படுத்தினார்.

அப்போது லூகாஸ் முடிவு செய்தார். ‘’வாழ்க்கை ஒன்றும் அரிதானது அல்ல. அது அம்மா செய்யும் விபச்சாரம் போல மலிவானது.’’ அம்மா வயோலோவோடு வாழ்ந்து வந்த லிவ் இன் பார்ட்னர் பெர்னி, லூகாஸிற்கு பல்வேறு பேன்டசிகளை அறிமுகப்படுத்தினார். அதில் ஒன்றுதான் விலங்குகளை செக்சிற்கு பயன்படுத்தி சித்திரவதை செய்து கொல்வது. இதன் தொடர்ச்சியாக மனிதர்களை வல்லுறவு செய்தால் என்னவென்று லூகாசிற்கு தோன்றியது. லின்ச்பர்க்கிலுள்ள பெண்ணை கடத்தி வல்லுறவு செய்து கழுத்தை நெரித்துக் கொன்றார்.

சில குழுக்களோடு சேர்ந்து நிறைய திருட்டுகளை செய்தார். அதில் தண்டனை விதிக்கப்பட்டது.  அதை அனுபவித்தவர், வெளியே வந்தும் பெரிய மாற்றங்களை வாழ்க்கையில் பார்க்கவில்லை. 1960ஆம் ஆண்டு லூகாஸூம் அவனது அம்மாவும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தினர். அவன், அம்மா, ‘’அவன் தன்னோடு வந்து இருக்கவேண்டுமென’’ கூறினாள். அதை லூகாஸ் ஏற்கவில்லை. இருவரும் வாக்குவாதத்தில் தொடங்கி கைகலப்பில் இறங்கினர். வயோலா கையில் பெருக்கும் துடைப்பத்தை வைத்திருந்தாள். லூகாஸ் கையில் கத்தி இருந்தது. இறுதி வெற்றி லூகாஸிற்கே. .. அம்மாவை கொன்று போட்டான்.

அம்மாவைக் கொன்றதற்காக காவல்துறை அவனைத் தேடியது. பிடிபட்டதும் தனது குற்றத்தை ஏற்றான். ‘’கொன்றது தான்தான். இறந்த உடலை வல்லுறவு செய்ததாக’’ கூறினான். 40 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகள் கழித்து பிணை கிடைத்தது. அதில் வெளியே வந்தான்.  தனது உறவினர்கள் வாழ்ந்த டெகம்செக்  என்ற பகுதிக்கு இடம்பெயர்ந்தார்.

ஊக்க உற்சாகமாக இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவு செய்தார். ஆனால் அதற்கான விசாரணையில் வழக்கு, பெண்களை கடத்தியதாக மாறியது. இதற்கான சிறை தண்டனை அனுபவித்தவர் வெளியே வந்து காளான் பண்ணையில் வேலை  செய்தார். 1975ஆம் ஆண்டு தனது சொந்தத்தில் விதவையாக இருந்த  பெட்டி கிராஃபோர்ட் என்ற பெண்ணை திருமணம் செய்தார். மூன்று மாதங்களில் அவர்கள் இருவரும் மேரிலேண்ட் எனும் இடத்திற்கு குடிபெயர்ந்தனர். இந்த உறவில் கிடைத்த லாபமாக, பெட்டியின் முந்தைய திருமணத்தில் பிறந்த மகள்களை லூகாஸ் பார்த்தார். இருவரையும் நேரம் கிடைத்தபோது வல்லுறவு செய்து மகிழ்ந்திருந்தார். இந்த உண்மை பெட்டிக்கு தெரிந்ததும் லூகாஸிடம் விவாகரத்து வாங்கிவிட்டார். இந்த சம்பவம் நடைபெற்றபோதே, லூகாஸ் நிறைய கொலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டார்.

1976ஆம் ஆண்டு ஓட்டிஸ் டூல் என்ற சக பயணியை, கொலையாளியை சந்தித்தார். ஆறரை ஆண்டுகள் இருவரும் நண்பர்களாக, காதலர்களாக, இணைந்து கொலை செய்பவர்களாக இருந்தனர். இது ஒரு இணைந்த கைகள் போன்ற கதைதான்.  

ஓட்டிஸ் டூலின் உறவினர்களோடு சேர்ந்துகொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்றார். அதில் பெட்டி என்ற சிறுமி, லூகாஸைக் கவர்ந்தார். அவருடன் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தார். ஒருமுறை கோபத்தில் பெட்டி லூகாஸை அறைந்துவிட, அவர் கத்தியை எடுத்து பெட்டியின் நெஞ்சில் சரெக்கென செருகிவிட்டார். பெட்டி இறந்துவிட்டார். உடலை துண்டாக வெட்டி பாலைவனத்தில் எறிந்துவிட்டு சென்றார். பெட்டி எங்கே என்று கேட்டவர்களுக்கு ‘’அவள் எங்கோ ஓடிவிட்டாள்’’ என பதில் சொன்னார். பிறகு அவரை இன்னொருவர் காணாமல் போன வழக்கில் சாட்சியாக கிடைக்க பிடித்து சிறையில் அடைத்தனர். அங்கு தனது கொலைகளைப் பற்றி லூகாஸ் உளறினார். ‘’75 அல்லது 100 கொலைகளை  செய்தேன்’’ என்றார்.

காவல்துறை சும்மா இருக்குமா? எனவே, தாங்கள் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளை லூகாஸ் செய்திருக்க வேண்டும் என கதை சித்தரித்தனர். இதில் இரண்டு வித விஷயங்கள் உண்டு. ஒன்று லூகாஸ் தனியாக செய்த கொலைகள், இரண்டு, ஓட்டிஸ் உடன் சேர்ந்து செய்த கொலைகள் என நிறை வழக்குகளை மாகாணங்கள் திறந்து வைத்தன. நூறு கொலைகளை செய்த காரணத்தால், மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னாளில், ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது.

படம் - பின்டிரெஸ்ட்  


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்