பதில் சொல்லுங்க ப்ளீஸ் 2 - அறிவியல் கேள்வி பதில்கள் - மின்னூல் வெளியீடு

 


பதில் சொல்லுங்க ப்ளீஸ் 2, எந்த வகையில் வேறுபட்டது? முதல் நூல் போல இதில் நகைச்சுவை இருக்காது. சற்று குறைவு. ஏன் இல்லவே இல்லை எனலாம். இதெல்லாம் வெளியிட்ட நாளிதழின் ஆசிரியரின் கைத்தொழில் காரியம். ஆனால் அறிவியல் மூடநம்பிக்கைகளை, அறிவியல் உண்மையோடு எதிர்கொள்ள நேர்ந்தது எனக்கு பிடித்திருந்தது. வாரம்தோறும் இரண்டு நாட்கள் இதற்காக வேலை செய்தபோது தெரிந்து கொண்ட விஷயங்கள் எனக்கு பரவசம் தந்தன.

 தினந்தோறும் அறிவியல் உலகம் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. கேள்விகளை பல்வேறு வடிவங்களில் இணையத்தில் தேடி, அதற்கான பதில்களை ஒப்பீடு செய்து தேர்ந்தெடுத்து தமிழாக்கம் செய்தேன். இந்த வேலை தந்த மகிழ்ச்சி, அக்காலகட்ட  இழிவான அலுவலக அரசியலைக் கூட சற்று மறக்கடித்துவிட்டது. வித்தியாசமான கோக்குமாக்கான கேள்விகளை எடுத்தாலும் அதற்கு நேர்த்தியான அறிவியல் ரீதியான விளக்கம் உள்ளே இருக்கிறது. இதுதான் வாசகர்களுக்கு வாசிப்பில் ஆர்வமூட்டும் விஷயமாக கருதுகிறேன். வாசியுங்கள். நூல் பிடித்திருந்தால் நண்பர்களுக்குப் பகிருங்கள். நன்றி

நூலைத் தரவிறக்கி வாசிக்க....


https://www.amazon.in/dp/B0BWXM1M4X

கருத்துகள்