இடுகைகள்

பாஜக அரசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புல்டோசர் சென்றபிறகு வாழ்க்கை என்னவானது?

படம்
  பாஜக ஆளும் மாநிலங்களில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினால், மதம் மாறி திருமணம் செய்தால் போதும். உடனடியாக மாநில அரசு அதற்கான தண்டனையை சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இன்ஸ்டன்டாக வழங்கி விடுகிறது. இன்றுதான் இன்ஸ்டன்ட் உப்புமா, பொங்கல் என வந்துவிட்டதே நீதி மட்டும் ஏன் தாமதமாக கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருகிறது. வீடு இடிக்கப்பட்ட பிறகு நீதிமன்றம் வழக்கை விசாரித்து இடிக்கப்பட்டது சரியா அல்லது தவறா, ஊடக கருத்துக்கணிப்பு, மக்கள் கருத்து என என்ன செய்யலாம் முடிவு செய்யப்படுகிறது. பாஜக அரசின் இந்த முன்மாதிரி செயல்பாட்டால் நீதிமன்றத்தின் சுமை பெரும்பாலும் குறைந்து வருகிறது.  ஜஹாங்கீர்புரி இங்கு நூர் ஆலம் தனது மூன்று பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சகிதம் வாழ்கிறார். நூர் ஆலம், கால்நடைகளுக்கான தீவனத்தை தயாரித்து அருகிலுள்ள பால்ஸ்வா பால் பண்ணைக்கு தருவதுதான் முக்கியமான வேலை. இவரது கடை இருக்கும் கட்டிடத்தை நகர நிர்வாகம் ஆக்கிரமிப்பு என சொல்லி இடித்து தரைமட்டமாக்கிவிட்டது. இதனால் நூர் ஆலம் தனது வாழ்க்கையை மீண்டும் முதலில் இருந்து தொடங்கியிருக்கிறார். இதற்கு ம

ஒன்றிய அரசின் பசிபட்டினி பற்றிய ஆவேசமும் உண்மையும்!

படம்
  பசிபட்டினி தொகுப்பு பட்டியல் 2021 யாருக்கும் தான் செய்துகொண்டிருக்கும் விஷயத்தைப் பற்றிய மதிப்பீடுகளைக் கொடுத்தால் உடனே கோபம் வந்துவிடும். காரியம் நடந்துகொண்டிருக்கும்போதே முடிவை சொல்கிறாயே என்று ஒன்றிய அரசும் கூட பட்டினிதொகுப்பு பட்டியல் முடிவை அறிவியல் ஆதாரமே இல்லை என்று எளிமையாக கூறிவிட்டது.  மொத்தம் 116 நாடுகள் உள்ள பட்டியலில் இந்தியா இப்போது 101 இடத்தைப் பிடித்துள்ளது. இந்த இடத்தைப் பிடித்த தற்கே எல்லாம் எங்கள் கட்சி பிரதமரின் உழைப்பால் வந்தது என கட்சி தொண்டர்கள், ஐடி விங்குகள், சமூகவலைத்தள விளக்குகள் கொண்டாடிக்கொண்டு உள்ளனர். ஒன்றிய அரசைப் பொறுத்தவரை இப்படி சமாளிப்பு பதில் சொல்வது இத்தோடு நிற்காது. எளிதாக வணிகம் செய்வதற்கான பட்டியலிலும் தடுமாற்றம், பத்திரிகை ஜனநாயக பட்டியலிலும் பின்னடைவு, எகனாமிஸ்ட் பத்திரிகை கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா குறைத்தே கணக்கு காட்டுகிறது எனசெய்தி வெளியிட்டுள்ளது. இப்படி பல்வேறு ஆய்வுகளையும் தவறு என சுட்டிக்காட்டவேண்டிய தேவையும் அவசியமும் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.  பட்டினிப் பட்டியலை எடுக்க முக்கியமான அம்சங்கள் சில உள்ளன.

விவசாய சீர்திருத்த புரட்சி 2.0 வெல்லுமா? - பஞ்சாப் விவசாயிகள் டேட்டா கார்னர்

படம்
          விவசாய புரட்சி 2.0 என்று பிரதமர் மோடி அறிவித்த விவசாய சீர்திருத்த சட்டங்கள் விவசாயிகளின் தீவிரமான போராட்டங்களில் முடிந்திருக்கிறது . கோவிட் -19 காலத்திலும் கூட விவசாய சீர்திருத்தங்களை சரியாக செய்துவிடவேண்டும் என்கிற வேட்கை தணியாமல் அதனை நிறைவேற்றியுள்ளது பாஜக அரசு . இச்சட்டம் மூலம் விவசாயிகள் அரசின் மண்டிக்கு பொருட்களை விற்றே தீரவேண்டிய கட்டாயம் இனி இல்லை . அவர்கள் விருப்பம் போல பிற மாநிலங்களுக்கு கூட விற்கலாம் . தனியார் நிறுவனங்களுக்கு விற்கலாம் . மேலும் தனியார் நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்த விவசாயமும் இனி நாடெங்கும் பெருகும் வாய்ப்புள்ளது . செப்டம்பரில் இம்மசோதாவை அரசு மக்களவையில் தாக்கல் செய்தது . உடனே உணவு பதப்படுத்ததல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார் . அவரது கட்சியான சிரோமணி அகாலிதள் கட்சியும் பாஜக அரசின் கூட்டணியிலிருந்து விலகியது . பஞ்சாப்பில் வேர் கொண்டுள்ள கட்சி இது என்பதால் , மெல்ல போராட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கின . பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் , மத்திய அரசின் சட்டங்களுக்கு பதில் வேறு சட்டங்களை இ

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது சக்கரம் என்று கூறுபவர்களது கருத்து தவறு! - பாபாசாகேப் தோரத், காங்கிரஸ்

படம்
              நேர்காணல் பாலசாகேப் தோரத் மகாராஷ்டிரா காங்கிரஸ் சிவசேனா கட்சி காங்கிரஸ் முன்வைத்த நியாய் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது . ஆனால் சிவ போஜன் எனும் திட்டத்தை அவர்கள் மேம்படுத்தி நடைமுறைப்படுத்தியுள்ளனரே ? அனைத்து கட்சிகளும் ஒன்றுசேர்ந்துதான் சிவபோஜன் திட்டத்தை செயல்படுத்தியுள்ளன . ஒற்றை கட்சியாக இப்படி அடையாளப்படுத்துவது சரியல்ல . நாங்கள் மூன்று கட்சிகளும் திட்டங்கள் பற்றி ஆலோசித்து்த்தான் செயல்படுத்தியுள்ளன . ராகுல்காந்தி அறிமுகப்படுத்திய நியாய் திட்டம் பொருளாதார அறிஞர்களால் வடிவமைக்கப்பட்டது . ஆனால் மாநிலத்தில் பொருளாதார பிரச்னைகள் இருப்பதால் அத்திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது . காங்கிரஸ் கட்சி அத்திட்டத்தை நாடுமுழுக்க மத்திய அரசு செயல்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை கொண்டுள்ளது . உங்கள் கட்சியில் ஒருங்கிணைப்பு ரீதியான பல்வேறு பிரச்னைகள் வருகின்றனவே . கேபினட் சந்திப்பிற்கு முன்னதாக நிதின் ராவத் அறிவித்த மின்சார கட்டண மானியம் என்பதை அசோக் சவான் தவறு என்று கூறியுள்ளாரே ? மின்சார கட்டண மானியம் பற்றி கேபினட்டில் முன்னரே விவாதிக்க

பிறப்புச் சான்றிதழ் வைத்திருக்கிறீர்களா? - என்ஆர்சியில் மாட்டும் குழந்தைகள்!

படம்
reddit என்ஆர்சி திட்டத்தில் உங்களை இந்தியர் என நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ் தேவை என இந்திய அரசு கூறியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பிறப்புச்சான்றிதழை வாங்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதில் இன்னொரு பிரச்னை உள்ளது. அதாவது படிக்கும், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இருக்கும். அதனை காட்டித்தானே பள்ளியில் வயதை சொல்லி சேர்ப்பார்கள். ஆனால் பழங்குடி, பட்டியலின மக்களின் பிள்ளைகள் பள்ளிகளுக்கே செல்வதில்லை. அவர்களிடம் எப்படி மேற்சொன்ன அரசு ஆவணங்கள் இருக்கும். 2005க்குப் பிறகு பிறந்தவர்கள் பெரும்பாலும் பிறப்பு சான்றிதழை வைத்திருப்பார்கள். காரணம், அந்தளவு அரசு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. ஆனால் அதற்கு முந்தைய காலத்தவர்கள் பிறப்பு சான்றிதழை பார்த்திருப்பது கடினம். அது முக்கியமான ஆவணமாக முதல் வகுப்பு சேரும்போது இருந்திருக்கும். அதற்குப்பிறகு பள்ளியில் கொடுக்கும் ஆவணங்களை பிற வகுப்புகளுக்கு பயன்படுத்துவார்கள். ஆனால் இன்று 63 வயதாகும் பெற்றோருக்கும் பிறப்பு சான்றிதழ்கள் தேவை, அவர்களின் பெற்றோர் வயதாகி இருந்தாலும் அவர்களுக்கும் பிறப்ப

தடைகள் ஜனநாயக நாட்டை உருவாக்காது - சேட்டன் பகத்!

படம்
ஆபாச வலைத்தளங்களுக்கு தடை உதவாது! இந்திய அரசு, ஆபாச வலைத்தளங்களைத் தடைசெய்து உத்தரவிட்டது எனக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. காரணம் வளர்ந்த ஜனநாயக நாடுகள் இதுபோன்ற தடைகளை மக்கள் மீது விதிப்பதில்லை. காரணம், ஒன்றைப் பார்ப்பது, பார்க்காமல் இருப்பது என்பது தனிநபர் சுதந்திரம் தொடர்பானது. அதில் பெரும்பாலான உலக நாடுகள் தலையிடுவதில்லை. மக்களுக்கு பெரும் பிரச்னையாக இருப்பது,போதைப்பொருள் விற்பனை, ஆபாசப் படங்களில் குழந்தைகளை நடிக்க வைப்பது போன்றவைதான். இவற்றை அரசு சட்டங்கள் மூலம் தடுப்பது பயனளிக்கும். ஆனால் அரசு மக்கள் முடிவெடுக்கவேண்டிய விஷயங்களில் தடை போன்றவற்றை கொண்டு வரக்கூடாது. காரணம், நாம் இஸ்லாமிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இன்றுள்ள தொழில்நுட்பபடி, அரசின் தடை உத்தரவை மிக எளிமையாக உடைத்தெறிய முடியும். இதனை அரசு உணர்ந்திருக்கிறதா என்று தெரியவில்லை. உலகமயமாதல், தாராளமயமாக்கல் விதிகளால் உலகம் என்பது நெருக்கமாகி வருகிறது. இதில் எல்லைக்கோடுகள் நிலப்பரப்பில்தானே ஒழிய இணையத்தில் கிடையாது. இந்த நேரத்தில் மக்களின் தனிநபர் சுதந்திரத்தில் தடை என்பது தேவையி

பாஜக அரசு தன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

படம்
kaleej times நேர்காணல் நவ்ஜோத்சிங் சித்து தமிழில்: ச.அன்பரசு இப்போதுள்ள மக்களின் மனநிலை என்னவென்று நினைக்கிறீர்கள்? பிரதமர் மோடி தன்னை எப்படி காவலாளி என்று கூறிக்கொள்கிறார் என்றே எனக்குப் புரியவில்லை. நான் அதுபோல ஒரு சூழ்நிலையைக் காணவில்லை. ஏழையின் வீட்டு வாசலில் நீங்கள் காவலாளியைப் பார்த்திருக்கிறீர்களா? பிரதமர் 0.1% சதவீத மக்களுக்கான தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்ய ஆர்வமாக உள்ளார். பிரதமர் ஆர்வம் காட்டிய கங்கை தூய்மைத் திட்டம் என்னவானது? விவசாயிகளின் கடன் தள்ளுபடியின் நிலை என்ன? புல்லட் ரயில் கனவு நனவானதா? இன்று தேர்தல் பிரசாரத்தின் இறுதி நிலையில் பாஜக தலைவர்கள் ஒருவர் கூட மேம்பாடு குறித்து பேசவில்லை. இது மிகவும் வேதனை தரும் நிகழ்வு. வேலை இழப்பு, விவசாயிகள் தற்கொலை, ரஃபேல் ஒப்பந்த மோசடி என மக்களை வருத்தும் பல நிகழ்ச்சிகள் நடந்துவிட்டன. தேர்தல் பேரணியில் பிரசாரம் செய்து வருகிறீர்கள். இதில் என்ன மாற்றத்தை உணர்ந்துள்ளீர்கள். மக்கள் நிறைய மாறியுள்ளனர். நான் பேசும் பிரசார கூட்டங்களில் பகடி, அங்கதம் கூடியுள்ளதாக நினைக்கிறேன். முதலில் ரஞ்சித் சிங் உள்ளிட்ட ராஜ