இடுகைகள்

ஜல்சா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உண்மையின் விலை என்ன? - ஜல்சா - வித்யா பாலன்

படம்
  ஜல்சா வித்யாபாலன், ஷெபாலி ஷா அமேஸான் பிரைம் அடுத்தவர்கள் நேர்மையாக மனசாட்சிப்படி நடந்துகொள்ளவேண்டும் என நினைப்பவர்கள், தங்கள் வாழ்க்கையில் அப்படி இருக்கிறார்களா என்பதை பேசும் படம்.  மாயாமேனன், வேர்ட் எனும் வலைத்தள செய்தி நிறுவனத்தின் எடிட்டர். பிறரிடம் கேள்வி கேட்டு உண்மையை வாங்குவதில் திறமையானவர். இது, நிறைய அதிகாரிகளை நீதிபதிகளை சங்கடப்படுத்துகிறது. ஆனால் மாயாவுக்கு அதுபற்றி பெரிய வருத்தமில்லை. எனது வேலை கேள்வி கேட்பது என உறுதியாக நம்புகிறார். இவரின் ஸ்ட்ரெய்ட் டாக் என்ற நிகழ்ச்சி புகழ்பெற்ற ஒன்று. இதற்காக உருவாக்கப்படும் பேனர்கள் நகரமெங்கும் வைக்கப்படுகின்றன. பின் வரும் காட்சிகளில் இந்த போர்ட்டுகளே ஒரு கதாபாத்திரமாக மாறுகிறது. மாயாமேனன், செய்தி வலைத்தளத்தின் எடிட்டர். நெடுநேரம் அலுவலகத்தில் வேலை செய்பவர். வீட்டில் உள்ள அம்மா, மகன் ஆகியோரை தன் கையிலுள்ள போன் மூலமே பார்த்து எப்படியிருக்கிறார்கள் என தெரிந்துகொள்கிறார். அனைத்துமே அவரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக நினைக்கிறார். ஆனால், ஒருநாள் இரவு வேலைப்பளுவால் நள்ளிரவு தாண்டி வேலை செய்துவிட்டு வீட்டுக்கு கிளம்புகிறார். ஏறத்தாழ அதிகாலை நே

ஜல்சா செய்வதற்கான டிரையல் முயற்சி! - 3 மங்கீஸ்

படம்
3 மங்கீஸ் 2020 தெலுங்கு இயக்கம் அனில்குமார் ஒளிப்பதிவு சன்னி தோமலா இசை இயக்குநரேதான். போன் டேட்டாவை வேஸ்ட் செய்துவிட்டோமோ என நினைக்க வைக்கும் படம். மூன்று நண்பர்கள், ஒரே லட்சியம். ஒரு பெண்ணையாவது படுக்கையில் வீழ்த்தி தன் பராக்கிரமத்தை காட்ட வேண்டுமென்று. ஒருவனை ஆபீஸ் பெண் அதிகாரி மடக்கி டேட்டிங்கிற்கு நேரம் சொல்கிறார்.  இன்னொருவனை, நிறுவன இயக்குநரின் மனைவி படுக்கையை பகிர்ந்துகொள்ள ஓகேவா என சம்மதம் கேட்கிறார். இன்னொரு சினிமா உதவி இயக்குநருக்கு, வீட்டுவேலைக்காரி மீது இன்ப வெறி. இந்த அட்டகாச லட்சிய வெறியைத் தீர்த்துக்கொள்ள முடிவெடுக்கிறார்கள். வண்டியை டெஸ்ட் ட்ரைவ் செய்தால்தானே மைலேஜ் எப்படி என தெரிந்துகொள்ள முடியும். இதற்காக, விலைமாது ஒருவரை காசு கொடுத்து வீட்டுக்கு வரச்சொல்லி மஜா செய்ய முயல்கின்றனர். அப்போது நேரிடும் விபத்து அவர்களை ஊழல் வெறிபிடித்த போலீசிடம் சிக்க வைக்கிறது. இதனால் அவர்களின் வாழ்க்கை என்னவாகிறது? என்பதுதான் கதை.   ஆஹா முதல்காட்சியில் அம்மா மகன் காட்சியைத் தவிர படத்தில் வேறு எந்த விஷயங்களும் உருப்படியாக இல்லை. ஐயையோ மேலே சொன்னதுத