சர்ச்சைகளின் நாயகி அருந்ததி ராய்!
எழுத்தாளர் அருந்ததி ராய் சூசன்னா அருந்ததி ராய் நவம்பர் 24ஆம் தேதி, 1961ஆம் ஆண்டு பிறந்தவர். பெண்ணியவாதியான மேரி ராய், கொல்கத்தாவின் தேயிலை தோட்ட மேலாளர் ரஜிப் ராய் ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு சகோதரர் ஒருவர் உண்டு. அவரது பெயர் லலித்குமார் கிறிஸ்டோபர் ராய். ஷில்லாங்கில் பிறந்தவர், கேரளா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் வளர்ந்தார். இவரது இரண்டாவது வயதிலேயே பெற்றோர் விவாகரத்து பெற்றுவிட்டனர். கட்டுமானம் வடிவமைப்பு படிப்பில் பட்டம் பெற்றுள்ளார் அருந்ததி ராய். 1988ஆம் ஆண்டு அன்னி கிவ்ஸ் இட் தோஸ் ஒன்ஸ் என்ற படத்திற்கு திரைக்கதை எழுதி தேசிய விருதை வென்றார். 1992ஆம் ஆண்டு எலக்ட்ரிக் மூன் என்ற படத்திற்கு திரைக்கதை எழுதினார். இதே ஆண்டில்தான் சிறிய விஷயங்களின் கடவுள் என்ற நூலை எழுத தொடங்கினார். 1996ஆம் ஆண்டில் நூல் பணியை முடித்தார். இந்த நாவலுக்கான பரிசாக மேன்புக்கரை 1997இல் வென்றார். இந்த நாவல்தான் உலகம் முழுக்க இவரை அறிய வைத்தது. சிறிய விஷயங்களின் கடவுள் சுயசரிதைத் தன்மை கொண்ட நாவல் ஆகும். ரகேல், எஸ்தா என இரட்டையர்களின் வாழ்க்கையை அரசியல், ஜாதி பின்புலத்தில் வைத்து ...