இடுகைகள்

மொரிஷியஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

துணிவிருந்தால் எளிதாக செய்யலாம் மோசடியை.. மோசடி மன்னன் அதானி - பகுதி 4

படம்
  தேசப்பற்றும் மோசடியும்இணையும்போது.. ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கை - அதானி மோசடி  மோசடி மன்னன் அதானி - பகுதி 4 மான்டேரோஸா முதலீட்டு நிறுவனத் தலைவர் மற்றும் இயக்குநரின் பெயர், அலஸ்டர் குகென்புஹ்ல் ஈவன். இவருக்கு இந்தியாவில் வணிகத் தொழிலில் மோசடிகளைச் செய்த தொழிலதிபரான ஜதின் மேத்தாவுடன் தொடர்புண்டு. ஸ்விட்சர்லாந்தில் வாழும் அலஸ்டர், தொண்ணூறுகள் தொடங்கி இந்திய துணைக்கண்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார். இதைப்பற்றிய குறிப்பு அவரின் தொழில் சார்ந்த குறிப்பு பக்கங்களில் உள்ளது. ஜதின் மேத்தா, அமெரிக்காவில் வைரத் தொழில் செய்தபோது வங்கிகளில் ஒரு பில்லியன் டாலரை மோசடி செய்தார். பிறகு வரிகள் இலகுவான நாடுகளுக்கு தப்பிச்சென்றார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இப்படிப்பட்ட குற்றவரலாறு கொண்டவரின் மகனுக்கு, வினோத் அதானி தனது மகள் கிருபாவை திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதன்மூலம் இவர்கள் நெருக்கமான தொழில் கூட்டாளிகளாகவும் மாறியுள்ளனர். 2002ஆம் ஆண்டு அதானி எக்ஸ்போர்ட்ஸ் (தற்போது அதானி என்டர்பிரைசஸ்) நிறுவனத்தில் குடாமி இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் முதலீடு செய்தது. இந்த ந

மோசடி மன்னன் அதானி - பகுதி 3 - கண்டும் காணாமலும் தூங்கிய செபி...லாபம் சம்பாதித்த அதானி

படம்
  அதானியால் கீழே கிடந்த இந்தியா மேலே உயர்ந்தபோது... இந்தியப் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வது புதிதல்ல. முதலீட்டு நிறுவனங்கள் பற்றிய விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டுமென்பது சட்ட விதி. பட்டியலிடப்பட்ட நிறுவனத்தில் குறைந்தபட்சம் 25 சதவீத பங்குகள் முதலீட்டாளர்கள் அல்லாதோரிடம் இருப்பது முக்கியம். இதன்மூலம் பங்குகளின் விலையை ஏற்றி விற்று தனிநபர் லாபம் சம்பாதிப்பது குறையும், பங்குகளை விற்பதில் மோசடி செய்வது தவிர்க்கப்படும். இந்திய பங்குச்சந்தையைக் கவனிப்பவர்களுக்கு, பல்வேறு நிறுவனங்கள் தங்களின் பங்குகளை வெளிநாட்டில் தொடங்கியுள்ள நிறுவனங்கள் மூலம் கட்டுப்படுத்தி வருவது புதிதான செய்தியல்ல. இப்படி வெளிநாட்டிலுள்ள நிறுவனங்கள் மூலம் பங்குகளின் விலையை ஏற்றி இறக்கி மாற்றுவதோடு, அரசுக்கு முறையான தகவல்களைத் தராமல் தவிர்க்கிறார்கள். அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், பலவற்றின் பங்குகளை வைத்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் பற்றி இந்திய ஊடகங்கள் முன்னமே கேள்வி எழுப்பியிருந்தன. இந்திய அரசியல்வாதிகளும் இதுபற்றிய கேள்விகளை எழுப்பினாலும் ப