இடுகைகள்

நீதியின் நிழலில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டெக்ஸ் வில்லர் அசத்தும் நீதியின் நிழலில்- மரணதேசம் மெக்ஸிகோ!

படம்
டெக்ஸ்வில்லர் மிரட்டும் மரணதேசம் மெக்ஸிகோ - நீதியின் நிழலில் இக்கதையை நிஸ்ஸி எழுத,  ஓவியம்  வரைந்திருக்கிறார்  மேன்பிரட் ஸோம்மர் அரிசோனாவில் உள்ள பாதர் மாத்யூவின் காப்பகத்தில் உள்ள சிறுவன் ஜூவானிடோ ஜோஸ், அடையாளம் தெரியாத ஆட்களால் கடத்தப்படுகிறான். அதுபோல நிறைய குழந்தைகள் அங்கு கடத்தப்பட்டாலும், மக்கள் யாருமே அது குறித்து பேச மறுக்கின்றனர். இந்த குற்றச்செயலுக்கு காரணம் யார் என்று டெக்ஸ் வில்லர் கண்டுபிடிப்பதே கதை.  அரசு காவல்துறையில் உள்ள ஊழல், துரோகம் என அனைத்தையும் தவிடுபொடியாக்கி டெக்ஸ் வில்லர் தன் நண்பர் கிட்டுடன் சேர்ந்து நியாயத்தை நீதியை நிலைநாட்டுவதுதான் கதை. எக்கச்சக்க ட்விஸ்டுடன் செல்லுகிற கதை.  பால் மெண்டிஸ், சுரங்க அதிபர் டான் ஓப்ரேகான் ஆகியோரின் ஆட்களைச் சந்திக்கும் இடங்கள் ரகளையாக உள்ளன. இறுதியில் சுரங்கம் மக்கள் வசம் செல்வது கம்யூனிச முடிவாக இருந்தாலும்,  ரசிக்க வைக்கிறது.  நீதியின் நிழலில் செவ்விந்தியர்களுக்கும், வெள்ளையர்களுடன் பணிபுரியும் நாய் மாஸ்டர் லாபார்ஜ் ஆகியோருக்கு இடையிலான சண்டைதான் காமிக்ஸ் கதை.  டெக்ஸ் வில்