இடுகைகள்

ஸ்ரீவிஷ்ணு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தவறுகளை ஒழிக்க உருவான புராண நாயகன் - வீரபோக வசந்த ராயுலு!

படம்
வீரபோக வசந்த ராயுலு - தெலுங்கு இயக்கம் - இந்திரசேனா இசை மார்க் கே ராபின் ஒளிப்பதிவு  நவீன் யாதவ், எஸ்.வெங்கட் மூன்று கதைகளைக் கொண்ட படம். படம் முடிவில் ஆச்சரியமான முடிவு கிடைக்கிறது. இதுதான் படத்தை இப்படி ஒரு படமா எனவும், குழப்பறாங்கப்பா எனவும் சொல்ல வைக்கிறது. வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் கதை. முதல் கதையில் ஆதரவற்றோர் காப்பகங்களில் உள்ள பெண்குழந்தை காணாமல் போகிறது. போலீசார் வழக்கை அலட்சியமாக கையாள்கின்றனர். இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக்கொண்டு காப்பக உரிமையாளர் டாக்டர் செயல்பட திடீரென அவர், கடத்தல் கும்பலால் கொல்லப்படுகிறார். அதில் மிஞ்சுவது செஸ் பிளேயராக உள்ள டாக்டரின் மகன்தான். சிறுவன் என்ன செய்ய முடியும்? அடுத்த கதை - ஒரு பதினைந்து வயது சிறுவன், காவல்நிலையத்தில் தன் வீட்டைக் காணோம் என்று புகார் செய்கிறான். என்னடா இது புது விஷயமாக இருக்கிறதே என சப் இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார். அப்போதுதான் குழந்தைகளை கடத்துவது தெரிய வருகிறது. இதற்கிடையில் கடத்தல் குழுவைச் சேர்ந்தவரை சுட்டுக்கொன்று தலைவரை நெருங்கும்போது, சப் இன்ஸ்பெக்டரின் தந்தை தற்கொலை செய்துகொள்கிறார்.

அட்டகாசமான க்ரைம் காமெடி - ப்ரௌச்செவரெவருவா படம் எப்படி?

படம்
ப்ரௌச்செவரெவருவா - தெலுங்கு விவேக் ஆத்ரேயா ஒளிப்பதிவு சாய் ஸ்ரீராம் இசை விவேக் சாகர் ஆஹா இது க்ரைம் காமெடி படம். பெண்தோழிக்கு அவளின் கனவை நிறைவேற்ற உதவும் ஆண் நண்பர்களின் கதை. இதில் சிக்கி சின்னாபின்னமாகி டரியலாவதை நிறைய காமெடி, குறைந்த அழுகை, ஜாலி இசையோடு சொல்லியிருக்கிறார் ஆத்ரேயா. ஸ்ரீவிஷ்ணு, பிரியதர்ஷி, ராகுல் ராமகிருஷ்ணன் என மூன்று பேரின் ஆர்3 காம்பினேஷன் அதிரடிக்கிறது. சீரியசான காட்சிகளிலும் ராகுலின் உடல்மொழியும் வசனங்களும் கலகல சிரிப்பு. மித்ரா என்ற பெயரில் வந்து ஸ்ரீவிஷ்ணுவை அலைய வைக்கும் பாத்திரத்தில் நிவேதா தாமஸ், அடக்கமான நடிப்பு. மேடம் இன்னும் கொஞ்சம் உடம்பை குறைத்திருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும். அடுத்து சத்யதேவ், நிவேதா. இயக்குநரின் கனவைத் தெரிந்துகொண்டு கதை சொல்ல வைத்து ரசித்து காதலிக்கிறார். அவர் காரை ஓட்டிக்கொண்டு சத்யதேவின் அப்பாவை பார்க்க வரும்போதே நமக்கு ஒகே தலப்பு தலப்பு சாங்கின் வேலைதான் இது என முடிவுக்கு வந்துவிடுகிறோம். மற்றபடி காதலைச் சொல்லாமல் கல்யாணம் செஞ்சுக்கலாமா என்று பேசும் நிவேதாவின் நடிப்புக்கு கன்னம் கிள்ளி

காதல் என்பது என்ன? - பிரேமா இஷ்க் காதல்!

படம்
யூட்யூப் பிரேம் இஷ்க் காதல் பவன் சடினேனி ஒளிப்பதிவு: கார்த்திக் கட்டமனேனி இசை: ஸ்ரவண் கஃபே இசைக்கலைஞன், உதவி இயக்குநர், ரேடியோ தொகுப்பாளர் என மூன்று ஆண்கள் மூன்று பெண்களை காதலிக்கிறார்கள். அவர்களின் காதல் அவர்களது வாழ்க்கையில் நிகழ்த்தும் மாற்றங்கள்தான் கதை. கஃபே இசைக்கலைஞனாக இருப்பவனை கல்லூரி நிகழ்ச்சிக்கு இலவசமாக அழைக்க காதல் தூண்டில் போடுகிறாள் சரயூ. முதலில் மறுப்பவன், பின் பெண்ணின் சமூகம் சார்ந்த பணிகளால் ஈர்க்கப்பட்டு கல்லூரி நிகழ்ச்சிக்கு ஓகே சொல்லுகிறான்.  நிகழ்ச்சி செய்தபின் காதல் சொல்லுகிறான். ஒகே ஆகிறது. சில நாட்களில் அவனுக்கு இசை ஆல்பம் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. வேண்டாம் என்பவனை அதனை செய்யச்சொல்கிறாள் சரயூ. லிரிக் கேலக்ஸி  ஆனால் இசைப்பணியின்போது ஷாப்பிங், ஓட்டல் என அழைத்துச்செல்ல முயல, கஃபே கலைஞன் இசையில் மூழ்கிவிடுகிறான். அதேதான். காதல் பிரிவு. இசையா, நானா என சுயநலமாக சரயூ பேச காதல் டைட்டானிக் கடலில் மூழ்குகிறது. ராயல் ராஜூ, கிராமத்து ஆள். நகரப் பெண்ணை காதலித்து மணக்க நகருக்கு வருகிறார். அங்கு, நண்பனின் திரைப்பட வாய்ப்பைப் பயன்படுத