இடுகைகள்

ஊடகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தற்கொலை செய்துகொண்ட கொலைக்குற்றவாளித் தந்தையை நிரபராதி என நிரூபிக்கப் போராடும் மகன்! ஹீலர்

படம்
  ஹீலர் கொரிய டிவி தொடர் ராகுட்டன் விக்கி தொண்ணூறுகளில் அரசுக்கு எதிராக வேன் ஒன்றில் சென்றபடி செய்திகளை ஒலிபரப்பும் புரட்சி பத்திரிகையாளர்களாக இருந்த ஐவர்களில் மூவர் மட்டுமே உயிரோடு இருக்கின்றனர். இருவர் இறந்துவிடுகிறார்கள். அதிலும் ஒருவர், அவரது ஆருயிர் நண்பராலேயே கொலை செய்யப்பட்டார் என காவல்துறை குற்றம் சாட்டுகிறது. அந்த குற்றச்சாட்டு விலக்கப்படுவதற்கு முன்னரே, குற்றம் சாட்டப்பட்ட நண்பர் ஜியோன் சிக் தற்கொலை செய்துகொள்கிறார். இதனால் நண்பர்களுக்குள் என்ன நடந்தது என யாருக்கும் தெரிவதில்லை. நண்பரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஒ ஜில் என்பவரின் மனைவி, அந்த நண்பர்கள் கூட்டத்தில் உள்ள கிம் மூன் சிக் என்பவரை மணந்துகொள்கிறார். அவளுக்கும் கொல்லப்பட்ட ஓ ஜில் என்பவருக்கும் பிறந்த பெண் குழந்தை, கிம் மூன் சிக் காரில் கூட்டிவரும்போது திடீரென   தொலைந்துபோகிறது. கிம் மூன் சிக், குப்பைக்கிடங்கு ஒன்றை சொந்தமாக வைத்திருக்கிறார். ஆனால், அவரது ஆருயிர் நண்பர்கள் இறந்தபிறகு கொரியாவில் மகத்தான அரசியல் சக்தியாக, ஊடக தொழிலதிபராக மாறுகிறார். இது அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கு அவர் மேல் சந்தேகத்தை ஏற்படு

நேர்மை, சுதந்திரம், பாகுபாடற்ற தன்மை எனும் மூன்று நம்பிக்கை கொள்கைகள்! - இதழியல் அறம்

படம்
  உலக நாடுகளிலுள்ள பத்திரிகை ஊடக நிறுவனங்கள் அவற்றுக்கே உரிய கொள்கைகளைப் பின்பற்றி வருகின்றன. இதில், நிலப்பரப்பு, உள்ளூர் கலாசாரம் சார்ந்து சில அம்சங்கள் மாறுபடலாம். உலகளவில் புகழ்பெற்ற மதிக்கப்படும் ஊடக நிறுவனமான ராய்ட்டர்ஸ், பின்பற்றும் இதழியல் கொள்கைகளுக்கு ட்ரஸ்ட் பிரின்சிபல் என்று பெயர். இந்த நம்பிக்கை கொள்கைகளில் சுதந்திரம், பாகுபாடற்ற தன்மை, நேர்மை ஆகியவை அடங்கியுள்ளன. இந்த மூன்று கொள்கைகளையும் நிருபர் / செய்தியாளர், ஆசிரியர் ஆகியோர் அனைத்து செய்திகளிலும், கட்டுரைகளிலும் கடைபிடிப்பது அவசியம். இப்போது பத்து முக்கியமான கடைபிடிக்கவேண்டிய விஷயங்களைப் பார்ப்போம். 1.     செய்திகளில் எப்போதும் துல்லியம் இருக்கவேண்டும். 2.       நேரும் தவறுகளை வெளிப்படையாக ஏற்று சரி செய்யவேண்டும். 3.     பாகுபாடற்ற தன்மையை சமநிலையாக பராமரிக்க வேண்டும். 4.     ஆர்வமுள்ள செய்திகளைப் பற்றி மேலாளர் / மூத்த ஆசிரியரிடம் கூறவேண்டும். 5.     ரகசியமான செய்திகளை எப்போதும் மதிக்க வேண்டும். 6.     செய்திகளைக் கொடுக்கும் ஆதாரங்களை, அதிகாரத்திடமிருந்து பாதுகாக்கவேண்டும். 7.     கட்டுரை அல்லது செம்மைப்

சமூகத்தில் பத்திரிகையாளரின் பணி என்ன?

படம்
  ஒரு சமூகத்தில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்க நேர்மையாக செயல்படும் நிருபர்கள், செய்தியாளர்கள் முக்கியம். அவர்கள் அரசியல், நிதி, வணிக, சமூக அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதை கவனமாக கண்காணித்து வருகிறார்கள். இவர்களின் முக்கியமான பணி, மோசடி முறைகேடுகளை வெளிப்படுத்துவதும், அதன் வழியாக மக்களுக்கு கல்வியை அளிப்பதும்தான். பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்கள் அரசு மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான பாலம் போன்றவர்கள். நிருபர் மற்றும் செய்தியாளர்கள் அரசின் கொள்கைகளை மக்களுக்கு விளக்குகிறார்கள். பின்னர், அதுபற்றிய அவர்களின் கருத்துகளை எதிர்வினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர். நிருபர் மற்றும் செய்தியாளர்கள் சமூகத்தின் மதிப்பைக் காப்பாற்றுவதோடு, இதழியல் சுதந்திரத்தையும் காப்பாற்ற வேண்டும். நம் சமூகத்தில் நிருபர் / செய்தியாளர்களின் பணிகள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல், சமூக, பொருளாதார நாகரிகங்களை விளக்குவது அரசு, நீதிமன்றம், வணிகம் ஆகியவற்றில் ஏற்படும் நெருக்கடிகள், வெற்றிகள், தோல்விகளை விமர்சிப்பது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் ஆதார மையங்களை வெளிப்படுத்துவது முறை

என்கிரிப்சன் செய்யப்பட்ட கொலைத்தகவல்கள் - ஸோடியாக் கொலைகாரர்

படம்
  வாழ்க்கையே பா.வெங்கடேசன், கோணங்கி ஆகியோரின் நாவல்கள் போல இருக்கிறதென்று சொன்னால் யாராவது நம்புவார்களா? ஆனால் ஜோடியாக் என்ற கொலைகாரர் தனது கொலைகளை அப்படித்தான் செய்து வந்தார். அமெரிக்காவில் குறிப்பாக பெண்களைக் கண்டால் மட்டும் குத்துக்கு பத்து என்பது போல கத்தியால் கூடுதலாக குத்திக் கொன்றார். அவரை காவல்துறை என்ன முயற்சி செய்தும் பிடிக்கமுடியவில்லை. இன்று ஜோடியாக் என அமேசானில், கூகுள்பிளே புக்ஸில் டைப் செய்து தேடினால் நிறைய நூல்கள் கிடைக்கும். ஜோடியாக் கொலைகாரர் புகழ்பெற்ற காலம் 1968 முதல் 1984 காலகட்டமாகும். ஜோடியாக் கொலைகாரர் தான் யார், செய்த கொலைகளைப் பற்றிய தகவல்களை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டுத்தான் காரியங்களை செய்தார். ஆனால் கூட அவரைப் பிடிக்க முடியவில்லை. காரணம் என்ன, அவர் கோடிங் பற்றி தெரிந்த ஆள். எனவே தனது கடிதங்களைக் கூட கோடிங்காக எழுதி அனுப்புவார். கூடவே பாழும் பத்திரிகளை இன்று வரை இரண்டுபிரதி நூல் அனுப்புங்கள். படித்து விமர்சனம், மதிப்புரை எழுதுகிறோம் என்பார்களே என்று ஸ்டாம்புகளையும் கூடவே அனுப்பி வைத்த நல்ல மனிதர்தான் ஜோடியாக். ஆனால் என்ன கோபம் வந்தால் மட்டும் எதி

சொத்துக்கு ஆண்வாரிசே ஒரே வழி! கடிதங்கள் - கதிரவன்

படம்
  நேருவை மறக்கும் ஊடகங்கள் ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? உங்கள் பெற்றோரை கேட்டதாக கூறவும் . இன்று மழை சற்று விட்டுவிட்டு பெய்தது . மழை காரணமாக ஊரில் அடிக்கடி மின்சாரம் தடைபட்டுப்போகும் . ராயப்பேட்டை அலுவலகத்தில் இன்டர்நெட் போய்விட்டது . நேற்று காந்தியும் ஜவகரும் என்ற நூலைப் படித்தேன் . வெ . சாமிநாதசர்மா எழுதிய நூல் . நேருவுக்கும் காந்திக்குமான ஒற்றுமை வேற்றுமைகளை 34 பக்கங்களில் எழுதி தொகுத்து இருந்தார் . இந்த ஆண்டு நேருவின் 132 ஆவது பிறந்தநாள் அமைதியாக கடந்துபோயிருக்கிறது . இந்துத்துவ அரசு தாக்குதல் , மிரட்டல் காரணமாக நேரு பற்றி பேசுபவர்கள் மிகவும் குறைந்துவிட்டனர் . சில ஊடகங்கள் மட்டுமே நேரு பற்றிய கட்டுரைகளை அச்சிடுகின்றனர் . இந்து ஆங்கிலம் நாளிதழ் , தனது ஞாயிறு நாளிதழில் இணைப்பிதழான மேகஸினில் தொடர்ச்சியாக நேரு கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது . அதைப் படித்தேன் . நேரு புரட்சிகாரரா இல்லையா என்பதே மையப்பொருள் . கட்டுரையில் நிறைய விஷயங்கள் இல்லை . நூல் ஒன்றிலிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்ட கட்டுரை . இன்று வாட்ஸ்அப் படித்துவிட்டு வியாக்கியானம் பேசுபவர்கள் அ

அதானியால் கையகப்படுத்தப்படும் என்டிடிவி - முடிவுக்கு வரும் டிரெண்ட் செட்டிங் சேனலின் யுகம்!

படம்
            இந்திய ஊடகங்களின் முன்னோடி என்டிடிவி! இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் பெருமளவு கடன்பெற்று, அதைக்கட்டக்கூட நினைக்காத தொழிலதிபர். அவருக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு, ஹேர்கட் என்ற பெயரில் கடன் தள்ளுபடியை ஆண்டுதோறும் அறிவித்து வருகிறது. அப்படிப்பட்ட தகைமை சான்ற தொழிலதிபர் தான் கௌதம் அதானி. அவரின் எண்ணெய், பருப்பு, அரிசி வகைகளால் புழங்காத இந்தியாவின் நகரங்கள் கிடையாது. அவர் தற்போது என்டிடிவிக்கு கடன் கொடுத்த நிறுவனத்தை வாங்கியதன் மூலம் என்டிடிவியை மறைமுகமாக கைப்பற்றியுள்ளார். குறிப்பாக ஏன் என்டிடி டிவி. இந்த டிவி தான் தற்போது மத்திய அரசுக்கு எதிரான என்பதை விட உண்மையை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்து வருகிறது. யாருக்கு என்று கேட்கிறீர்களா? சிறு, குறு நகரிலுள்ள ஆங்கிலம் படிக்கத் தெரிந்தவர்களுக்குத்தான். என்டிடி டிவி எதனால் முக்கியத்துவம் பெறுகிறது? 1984ஆம் ஆண்டு ராதிகா ராய், பிரனாய் ராய் ஆகியோரால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் இது. தொடக்கத்தில் டிவி சேனல்களுக்கு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வந்தது. குறிப்பாக தூர்தர்ஷனில் தி வேர்ல்ட் திஸ் வீக் என்ற உலக நிகழ்வுகளை அலசும் நிகழ்ச்

மேற்கு நாடுகள் ஹூவாவெய் மீது நடத்திய வன்ம தாக்குதல்!

படம்
  ஹூவாவெய், உலகளவில் முக்கியமான தொலைத்தொடர்பு சேவை நிறுவனம். சிறந்த நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றியும் வந்தது. ஆனாலும் அதன் பூர்விகம் சீனா என்பதை யாரும் மறக்கவில்லை. இதை ரென் உணர்ந்தபோது நிறுவனத்தின் பெயரை ஊடகங்கள் வெறுப்புடன் உச்சரித்துக்கொண்டிருந்தனர்.   2005ஆம் ஆண்டு சீனாவில் ஹூவாவெய் நிறுவன அலுவலகத்தில் வேலை செய்த பணியாளர் மூளை அழற்சியால் இறந்துபோனார். உடனே அந்த விவகாரத்தை கையில் எடுத்த ஊடகங்கள், அய்யகோ மெத்தை கலாசாரம் தொடங்கிவிட்டது. அதனால்தான் இப்போது ஒரு உயிர் போய்விட்டது என கூக்குரலிடத் தொடங்கின. மேலும் விவரங்கள் தெரியவேண்டுமா? விளம்பரத்திற்கு பிறகு பாருங்கள் என ஸ்க்ரோல் செய்திகள் போட்டன.   ஹூவாவெய் நிறைய விஷயங்களில் மாறியிருந்தது. ஆனால் கலாசாரம் சார்ந்த விஷயங்களில் பெரிய மாற்றமில்லை. காரணம், ரென்னின் ராணுவப்பணிதான். முன்னமே ரென் சில கொள்கைகளை பின்பற்றுகிறார் என குறிப்பிட்டிருந்தோம். அது வேறொன்றுமில்லை. ராணுவத்தில் இருக்கும் முக்கிய கொள்கையான கீழ்படிதல். அந்த இயல்பு இல்லாமல் ராணுவத்தில் ஒருவர் வேலை செய்யமுடியாது. மேலதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்தே ஆகவேண்டும். இல்லையென்றா

இளைஞர்கள் அரசியலைப் புரிந்துகொள்ள உதவும் அமைப்பு! -YPP

படம்
  தமிழ்நாட்டில் அரசியல் என்பது அனைத்து இடங்களிலும் உண்டு. தேவையில்லாத கலவரங்களை தடுக்க சில டீக்கடைகளில் அரசியல் பேசக்கூடாது என கண்டிப்பாக சொல்லியிருப்பார்கள். ஆனால் இன்று நிறைய இடங்களில் இளைஞர்கள் அரசியல் பார்வை கொண்ட இயக்கங்களை கட்டி எழுப்பி வருகிறார்கள். அப்படி ஒன்றுதான் யங் பீப்பிள்ஸ் ஃபார் பாலிடிக்ஸ் .  அண்மையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  மேற்சொன்ன இளைஞர் இயக்கத்தின் மாநாடு நடைபெற்றது. நூலகத்தில் இப்படியொரு நிகழ்ச்சி நடப்பது இதுவே முதல்முறை. ஒய்பிபி இயக்கம், பல்வேறு துறைகளில் சாதனை செய்தவர்களுக்கு விருதுகளை வழங்க கௌரவித்தது. விருது பெற்றவர்களும் இந்த வகையில் முதல் முறையாக விருதுகளை பெறுவதலால் மகிழ்ச்சியாக காணப்பட்டனர்.  பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவுகளில் இருந்து வந்தவர்களை விருதுகளைப் பெற்றனர். ஒய்பிபி இயக்கம், இப்படிப்பட்ட பின்புலம் கொண்ட இடத்திலிருந்து தலைவர்களாக உருவானவர்களை கௌரவிக்கின்றனர். ஒய்பிபி இயக்கத்தின் நிறுவனர், ராதிகா கணேஷ். எங்களது இயக்க உறுப்பினர்கள் அனைவருமே பன்முகத்தன்மை கொண்ட இனக்குழுவிலிருந்து வந்தவர்கள்தான். நிறைய விஷயங்களை முதல்முறை என்று கூறுவதற்கான வ

உண்மையைப் பேசத் தயங்கும் ஊடகங்கள்! - இந்தியாவில் சிறப்பாக நடக்கும் சம்பவங்கள் - ஆகார் படேல்

படம்
அண்மையில் என்டிடிவி தொகுப்பாளர் ரவிஷ்குமார் ஒரு செய்தியை சொன்னார். இன்றைய ஊடகங்கள் எதில் கவனம் செலுத்தவேண்டுமோ அதனை செய்வதில்லை என்றார். அது உண்மைதான். இன்னும் சில மாதங்கள் நாம் பாஜகவின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியை பார்க்கப்போகிறோம். இது ஒரு ஆட்சிக்கு நீண்ட காலம். அவர்கள் செய்ய நினைத்த திட்டங்களை நிச்சயமாக நிறைவேற்றியிருக்கமுடியும். இப்படி ஏதாவது செய்திருக்கிறார்களா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.  பொருளாதார ரீதியாக நிறைய சீர்திருத்தங்கள் செய்திருக்கிறார்கள் என்று கூறி வந்தார்கள். பல்வேறு விலைபோன ஊடகங்களும் அதனை அப்படியே ஊதுகுழலாக ஒப்பித்தன. ஆனால் பொருளாதாரம் முன்னெப்போதையும் விட பாதிக்கப்பட்டுள்ளது. இதோடு ஒப்பிடுகையில் சீனா, தைவான், சிங்கப்பூர், தென்கொரியா ஆகிய நாடுகள் சிறப்பாக உள்ளன. அவ்வளவு தூரம் கூட போக வேண்டாம். 2014இல் இந்தியாவை விட உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 50 சதவீதம் பின்தங்கிய வங்கதேசம் இன்று நம்மை விட முன்னேறியுள்ளது. இதேபோல வியட்நாம் நாட்டையும் சொல்லலாம்.  உற்பத்தித்துறை சார்ந்த வேலைகள் மிகவும் குறைந்துவிட்டன. இப்போது மிச்சமிருப்பது விவசாயம் மட்டுமே. தற்போது அதில்தான்

நூலகத்திற்கு செலுத்தும் நன்றிக்கடன்! - த.சீனிவாசனுக்கு எழுதிய கடிதங்கள்

படம்
pixabay நூலகத்திற்கு செலுத்தும் நன்றிக்கடன்!  5.4.2021   அன்பு நண்பர் சீனிவாசனுக்கு, வணக்கம். நலமா? நான் தற்போது ஈரோட்டுக்கு வந்துவிட்டேன். ஜூன் இறுதியில் நாளிதழ் வேலைகள் தொடங்கும் என நினைக்கிறேன். அதுவரையில் நான் ஊரில் இருக்க திட்டமிட்டுள்ளேன். நீங்கள் கொடுத்த அடோமிக் ஹேபிட்ஸ் என்ற நூலை இங்கே படிக்க எடுத்து வந்துவிட்டேன். அதில் பதிமூன்று பக்கங்கள்தான் படித்துள்ளேன். சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு வரும் பேருந்து பயணம் பெரும் களைப்பை உடலில் ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து சேலம், சேலத்திலிருந்து ஈரோடு, ஈரோட்டிலிருந்து கரூர் என மூன்று பேருந்துகளில் ஏறி எட்டு மணிநேரத்திற்கும் அதிகமான நேரம் பயணிக்க வேண்டும்.  இப்படி பாடுபட்டு முக்கி முனகி வீட்டுக்கு வந்தால் இரவில் மின்சாரம் இல்லை. அதுவும் எந்த நேரத்தில் தெரியுமா? தட்டில் சோற்றைப் போட்டு சாப்பிடும் நேரத்தில்....  நூல்களை நூலகத்திற்கு தரும் உங்களது பழக்கத்தைப் பின்பற்றி, எங்கள் ஊர் நூலகத்திற்கு தர ஒன்பது நூல்களை எடுத்து வைத்துள்ளேன். இவை அனைத்துமே புத்தக திருவிழாவில் வாங்கியவைதான்.  தேர்தல் முடிந்தபிறகு நூல்களை கொண்டு சென்று கொடுப்பேன். நூல

கல்வி, தொழில், ஊடகம் ஆகிய துறைகளில் சாதித்த பெண்கள்! - திவ்யா, மானசி டாடா, மசபா குப்தா, பிரஜக்தா கோலி

படம்
              ஆர்த்தி கில் துணை நிறுவனர் , ஆஸிவியா பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோனல் குறைபாடுகளை போக்குவதற்கான பொருட்களை தயாரித்து வருகிறார் . நடப்பு ஆண்டில் தனது நிறுவன வருமானத்தை 200 கோடியாக உயர்த்த உழைத்து வருகிறார் . உலகில் பலருக்கும் ஆசை இருக்கலாம் . ஆனால் அதனை தொடர்ந்து செல்வதற்கான உழைப்பு இருக்காது . ஆர்த்தி இதற்கு விதிவிலக்கான ஆள் . இவர் எம்பிஏ முடித்துவிட்டு ஃபிட்சர்க்கிள் என்ற ஆப்பைத் தொடங்கினார் . இதில் ஊட்டச்சத்துகளுக்கான பல்வேறு செய்திகளை வழங்கத் தொடஙகினார் . இவருடன் மிஹிர் கடானியும் இணைந்தார் . 2014 இல் இந்த நிறுவனத்தை இருவரும் தொடங்கினர் . என்னதான் ஆப்பில் உடல்நலத்திற்கான ஆலோசனைகளை வழங்கினாலும் கூட பிற நிறுவனங்களின் பொருட்களை பயனர்கள் வாங்க வேண்டியிருந்தது . இதில் பல்வேறு செயற்கைப் பொருட்கள் இருந்தன . எனவே , நாமே ஆரோக்கியமான பொருட்களை தயாரித்து விற்கலாமே என ஆர்த்தி முடிவெடுத்தார் . எனவே இருபது லட்சம் கடன் வாங்கி முதலில் புரத உணவு , ஆரோக்கிய பானம் ஒன்றைத் தயாரித்தனர் . இப்போது இந்த வரிசையில் பதினைந்து பொருட்கள் உள்ளன . இந்த குழந்தைகள் முதல் பெர