இடுகைகள்

ஜோம்பி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜோம்பி தனது கடந்தகாலத்தை தானே டிடெக்டிவ்வாகி கண்டறியும் கதை!

படம்
              ஜோம்பி டிடெக்டிவ் கொரிய தொடர் ராகுட்டன் விக்கி மருத்துவக் கழிவு கொட்டிக்கிடக்கும் இடத்தில் இருந்து ஒரு உருவம் எழுகிறது . அதுதான் நாயகன் காங் மின்கோ . எழுந்தவர் சிகரெட் பிடிக்கிறார் . வாயில் புகைவிட நினைத்தால் வயிற்றில் உள்ள ஓட்டை வழியாக புகை வெளியே செல்கிறது . அப்போதுதான் அவர் வயிற்றில் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பதை உணர்கிறார் . அங்கிருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால் அதிர்ந்துபோ கிறார் . இறந்து புதைக்கப்பட்டவர் மீண்டும் உயிர் வந்தால் உடல் சதைகள் எப்படி சிதைந்து கிடக்கும் . அப்படித்தான் அவர் உடல் முழுக்க பஞ்சர் ஒட்டியது போல சதைகள் கிழிந்து ஒ ட்டுப்போடப்பட்டது போல உள்ளன . சுருக்கமாக வாழும் பிணம் . அதாவது ஜோம்பி . அவருக்கு தான் யார் , பெயர் , ஆதார் எண் , வங்கியில் கொடுத்த பான் எண் , வீட்டு முகவரி என எதுவுமே நினைவில்லை . தான் யார் , எப்படி கொல்லப்பட்டோம் . ஏன் ஜோம்பி ஆனோம் என்ற உண்மையை மெல்ல கண்டுபிடிக்கிறார் . இந்த கதையை நகைச்சுவையாக கூறியிருக்கிறார்கள் . அடுத்த பாகம் தொடங்கி ஒளிபரப்பப்பட்டாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை . காங் சன்ஜ

ஜோம்பிகளுக்குத் தப்பி மாலில் வாழும் ஆறு மனிதர்கள்!

படம்
  வாட் சிக்ஸ் சர்வைவர்ஸ் டோல்ட் - ஜே டிராமா வாட் சிக்ஸ் சர்வைவர்ஸ் டோல்ட்   ஜே டிராமா   ஜோம்பிக்களின் கதை. ஜப்பானில் நாடே ஜோம்பி வைரஸ் பரவி பிரச்னையாக உள்ளது. எம் மால் என்ற கட்டிடத்தில் எட்டு பேர் இருக்கிறார்கள். அவர்களின் கட்டிடத்திற்கு அருகில் ரிரிசான் என்ற இளம் மாணவி மயக்கமடைந்து விழுகிறாள். அதைப் பார்க்கும் ஒருவர், மொட்டை மாடியில் இருந்து அந்த மாணவியை மீட்கிறார். மாணவி ரிரிசான் கண் விழிக்கும்போது குழு தலைவர், சமையல் பெண்மணி, யூட்யூப் வீடியோ எடுக்கும் இளம்பெண், தரையை துடைக்கும் வேலையை செய்பவர், உடற்பயிற்சி செய்யும் இளைஞர், மாடல் பெண்மணி   என பலரையும் பார்க்கிறாள். இவர்கள் ஷாப்பிங் மாலுக்குள் அடைபட்டு கிடக்கிறார்கள்.   அங்குள்ள உடை, எலக்ட்ரானிக்ஸ், உணவு, மளிகைப்பொருட்கள் , அழகு சாதனம் என அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டு வாழ்கிறார்கள். உதவி வேண்டி மொட்டை மாடியில் சில ஏற்பாடுகளை செய்கிறார்கள். ஆனாலும் கூட அது பயனளிக்கவில்லை. இதற்கு இடையில் மனிதர்களுக்கு   அன்பு, காதல், நட்பு உருவாகிறது. அதுவே சண்டை, பழிக்குப்பழி என பலதையும் ஏற்படுத்துகிறது. தொடரை சற்று காமெடியாக எடுக்க முனைந்திர

நோயை எதிர்க்கும் போராட்டத்தில் தன்னை உணர்ந்துகொள்ளும் தந்தையின் கதை! ட்ரெயின் டு பூஸன்

படம்
  டிரெய்ன் டு பூஸன் 2016 Director:  Yeon Sang-ho Sequel:  Peninsula கொரியப் படம். ஜோம்பிகளை மையமாக கொண்ட படம்தான். படம் ஜோம்பிக்கான காரணம், அதன் வைரஸ், அதன் வெவ்வேறு வடிவங்கள் ஆகியவற்றைப் பற்றி பேசவில்லை. ஜோம்பிகள் தாக்கும்போது அதை மனிதர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை படம்பிடித்திருக்கிறார்கள். இப்படி உணர்ச்சிகளோடு சிறப்பாக ஒன்று சேர்வதால் படம் மகத்தான வணிக வெற்றியைப் பெற்றுள்ளது.  காங் வூ, டான் லீ ஆகியோர் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். காங் வூ, நிதி நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவர் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று வாழ்கிறார். குழந்தை அவருடன் இருக்கிறது. காங் வூ தனது தாய், குழந்தையுடன் ஒரே வீட்டில் இருக்கிறார். இந்த நேரத்தில் அவரது மகளுக்கு பிறந்த நாள் வருகிறது. மகள், அம்மாவைப் பார்க்க போகலாம். அதுதான் எனது ஆசை என்கிறாள். இதனால், அவளை பூஸன் நகருக்கு ரயிலில் கூட்டிச்செல்கிறார் காங் வூ. அப்படி போகும்போது ரயிலில், ஜோம்பி பெண் ஒருவர் ஏறிவிடுகிறார். கூடவே ரயில் பணியாளர் பெண் ஒருவரைக் கடித்துவிடுகிறார். இதனால் ரயில் முழுக்க ஜோம்பிகள் பெருக, இருபது பேர் மட்டுமே இதில் பிழைக்

பரிணாமவளர்ச்சி பெறும் ஜோம்பிகளை போட்டுத்தள்ளும் வேட்டைக்குழு! - ஜோம்பிலேண்ட் - டபுள் டேப்

படம்
  #ஜோம்பிலேண்ட் - டபுள் டேப் ஜோம்பிலேண்ட்  டபுள் டேப் கொலம்பியா பிக்சர்ஸ் - சோனி முழு அமெரிக்காவுமே ஜோம்பிகளால் அழிந்துபோகிறது. மிஞ்சிய சிலரில் டெலிகாஸி, மேடிசன், கொலம்பஸ், விசிட்டா, லிட்டில் ராக் என மிகச்சிலரே மிஞ்சுகிறார்கள். இவர்களுக்குள் வரும் ஈகோ, காதல் தகராறுகளும் இன்ன பிற ஜோம்பிகளின் வம்பு தும்புகளும்தான் கதை.  அமெரிக்கா முழுக்கவே புல் பூண்டுகள் முளைத்து நாசமாகி கிடக்கிறது. அங்கு பெருசு டெலிகாசியுடன் இளைஞன் கொலம்பஸ், அவனது பெண் தோழி விசிட்டா, அவளது தங்கை லிட்டில் ராக் ஆகியோர்  மட்டுமே இருக்கிறார்கள். இவர்களும் முதல் காட்சியில் ஒரு டஜன் ஜோம்பிகளை தலையில் சுட்டுக் கொல்கிறார்கள். இதனை  இயக்குநர் கவித்துவமாக ஸ்லோமோஷனில் படமாக்கியிருக்கிறார். ரத்தம் பார்த்தாலே பதறும், மண்டை உடைந்தாலே வாய் அலறும் என்பவர்கள் படத்தைப் பார்க்காமல் இருப்பதே நல்லது.  படம் ரத்தம் தவிர, முறுக்கேறும் உடல் கொண்ட எல்விஸ் ப்ரெஸ்லி பார் பெண், ஃப்ரீசரில் இருந்த மேடிசன் 18 பிளஸ் காட்சிகள் உண்டு என்பதால் வயது வந்தவர்களுக்கு மட்டுமான படம்தான் இது. இதை மனதில் வைத்துக்கொண்டு பாருங்கள். தமிழ் டப்பிங்கில் நம் ஆட்கள் அசத்

உலகில் ஜோம்பிகள் உருவாக வாய்ப்புள்ளதா? உண்மையும் உடான்ஸூம்

படம்
      உலகில் ஜோம்பிகள் உருவாவது சாத்தியம்தான் ! ரியல் : 1968 ஆம் ஆண்டிலிருந்து ஆங்கில திரைப்படங்கள் வழியாக ஜோம்பிகள் பற்றி சிந்தனைகள் பேசப்படத் தொடங்கின . சாபம் அல்லது நுண்ணுயிரிகளின் தாக்குதல் காரணமாக ஜோம்பிகள் எனும் சதை தின்னும் கொடூர மனிதர்கள் உருவானதாக காமிக்ஸ்கள் , சாகச நாவல்கள் கூறின . பூமியில் நிலவும் கடும் குளிர் , அனல் வெயில் , மழை , புயலுக்கு இவர்கள் தாக்குப்பிடித்து வாழ முடியாது . மூளை செயல்படாதபோது , உடல் உறுப்புகள் தன்னிச்சையாக செயல்படாது . ஜோம்பிகள் பெரும்பாலும் தலையில் அதிகம் காயங்களோடு இருப்பதால் , அவர்கள் நடந்துவருவது , ஒருவரைத் தாக்குவது சாத்தியமில்லை . நுண்ணுயிரிகள் தாங்கள் தாக்கும் உயிர்களில் குறிப்பிட்ட காலம் வரை இருக்கும் . ஜோம்பிகள் நுண்ணுயிரி தாக்குதலால் இறப்பதற்கே வாய்ப்பு அதிகம் . ஐம்புலன்கள் வேலை செய்யாது , செரிமானத் திறன்கள் இல்லை என்பதால் ஜோம்பிகள் பூமியில் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை . நாம் பயணிக்கும் விமானங்களால் விண்வெளிக்குச் செல்ல முடியாது ரியல் : உண்மை . இங்கு நம்மை சுமந்து பல்வேறு நகரங்களுக்கு இடையில் பறக்கும் விமானங்களின் எந