நோயை எதிர்க்கும் போராட்டத்தில் தன்னை உணர்ந்துகொள்ளும் தந்தையின் கதை! ட்ரெயின் டு பூஸன்
டிரெய்ன் டு பூஸன் 2016
Director: Yeon Sang-ho
Sequel: Peninsula
கொரியப் படம். ஜோம்பிகளை மையமாக கொண்ட படம்தான். படம் ஜோம்பிக்கான காரணம், அதன் வைரஸ், அதன் வெவ்வேறு வடிவங்கள் ஆகியவற்றைப் பற்றி பேசவில்லை. ஜோம்பிகள் தாக்கும்போது அதை மனிதர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை படம்பிடித்திருக்கிறார்கள். இப்படி உணர்ச்சிகளோடு சிறப்பாக ஒன்று சேர்வதால் படம் மகத்தான வணிக வெற்றியைப் பெற்றுள்ளது.
காங் வூ, டான் லீ ஆகியோர் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். காங் வூ, நிதி நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவர் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று வாழ்கிறார். குழந்தை அவருடன் இருக்கிறது. காங் வூ தனது தாய், குழந்தையுடன் ஒரே வீட்டில் இருக்கிறார். இந்த நேரத்தில் அவரது மகளுக்கு பிறந்த நாள் வருகிறது. மகள், அம்மாவைப் பார்க்க போகலாம். அதுதான் எனது ஆசை என்கிறாள். இதனால், அவளை பூஸன் நகருக்கு ரயிலில் கூட்டிச்செல்கிறார் காங் வூ. அப்படி போகும்போது ரயிலில், ஜோம்பி பெண் ஒருவர் ஏறிவிடுகிறார். கூடவே ரயில் பணியாளர் பெண் ஒருவரைக் கடித்துவிடுகிறார். இதனால் ரயில் முழுக்க ஜோம்பிகள் பெருக, இருபது பேர் மட்டுமே இதில் பிழைக்கிறார்கள்.
ரயில் போகும் நகரில் எல்லாம் ஜோம்பிகள் பெருகிக்கொண்டே இருக்கிறார்கள். காங் வூ, டான் லீ ஆகியோரை தாக்குகிறார்கள். இதை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள். பிழைத்தார்களா என்பதே கதை.
படத்தை சுவாரசியமாக நடத்திச்செல்லும் பாத்திரங்கள் கர்ப்பிணி மனைவிக்காக டாய்லெட்டை யாரும் பயன்படுத்தமுடியாதபடி காவல் காக்கும் டான் லீ, நம்மைத் தவிர யாரும் முக்கியமில்லை என நம்பும் நிதி நிறுவன அதிகாரியான காங் வூ, ஜோம்பி வைரசிலிருந்து தான் மட்டும் தான் பிழைக்க வேண்டும் எனும் வயதான பயணி, எல்லாருமே செத்துடுவாங்க என பினாத்திக்கொண்டிருக்கும் பிச்சைக்காரர் ஒருவர். இவர்கள் தான் படத்தின் பெரும்பான்மையான காட்சிகளில் வருகிறார்கள்.
டான் லீ ஜோம்பிகளை தடுத்து அதற்காக தன்னையே பலிகொடுத்துவிட்டு தன் மனைவியைக் காப்பாற்றக் கோரும் காட்சி. காங் வூ, சுயநலமாக நடந்துகொள்ள மகளுக்கு சொல்லித் தருவதும், அதற்கு மகள் பதில் சொல்லும் காட்சி. இறுதியாக தனது மகளைக் காப்பாற்ற தன்னையே அழித்துக்கொள்ளும் காட்சி.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக