பாடநூல்களில் ஜனநாயகத்தன்மை குறைகிறது! - கர்நாடக அரசு பாடநூல்களில் ஏற்படும் புதிய மாற்றம்

 






எழுத்தாளர் தேவனூர் மகாதேவா



கர்நாடகத்தில் உள்ள 10ஆம் வகுப்பு பாட நூல்களில் சில எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டு புதிய எழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். எப்போதும்போல இதை எப்படி நீக்கலாம், அவருடையதை எப்படி சேர்க்கலாம் என விவாதங்கள் கிளம்பியுள்ளன. இப்போது கன்னடம் மற்றும் சமூக அறிவியல் நூல்களில் இடம்பெற்ற எழுத்தாளர்களைப் பார்ப்போம். 

எழுத்தாளர்களின் படைப்புகளுக்கான மதிப்பீட்டு கமிட்டி தலைவர் எழுத்தாளர் ரோகித் சக்ரதீர்த்தா. 

பானன்ஜே கோவிந்தாச்சார்யா

(சுகான்சனா உபதேஷா)

சமஸ்கிருத கல்வியாளர். இவர் 2020ஆம் ஆண்டில் காலமாகிவிட்டார். 13ஆம் நூற்றாண்டு த த்துவ அறிஞர் ஸ்ரீ மாதவாச்சாரியாவின் பல்வேறு படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். சமஸ்கிருத இலக்கிய படைப்புகளை மொழியாக்கம்செய்து கன்னட இலக்கியத்திற்கு வழங்கியுள்ளார். இந்த வகையில் 150 நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் கன்னடர்கள், துளுவர்கள் ஆகிய இனக்குழுக்களுக்கு இடையில் பிரபலமானவை. புராணங்களை பேசுவது, எழுதுவது ஆகியவற்றில் கைதேர்ந்த எழுத்தாளுமை. 

சதாவதானி கணேஷ்

(ஷ்ரேஷ்ட பாரதிய சின்டனேகலு)

இவர் சமஸ்கிருத கவிஞர், கல்வியாளர். இந்தியாவின் கலாசாரம் சார்ந்த பல்வேறு படைப்புகளை எழுதியுள்ளார். அவாதனா எனும் தொன்மை கலையில் சிறந்து விளங்கியவர். கன்னட கலை வடிவங்களை அழியாமல் காத்த ஆளுமைகளில் முக்கியமானவர். அன்வேஷனம்  நாடகம், சங்கராவிவேகியம் எனும் கவிதை முக்கியமான படைப்புகள் ஆகும். 

மஞ்சேஸ்வரி கோவிந்தா பாய்

(நானு பிராஸபிட்டாகாதே)

இவர் கன்னட கவிஞர். மங்களூரைச் சேர்ந்தவர் கதை கட்டுரைகளுக்காக பேசப்படுகிறார். முக்கியப் படைப்புகளைப் பார்ப்போம். ஸ்ரீகிருஷ்ண சரிதா 1909, கோல்கொதா 1931, வைசாகி, ஹெப்பராலு ஆகியவை முக்கியமான படைப்புகள். 

சிவானந்தா கலாவே 

(ஸ்வதேசி சுத்ராதே சரளஹப்பா)

இவர் பத்திரிகையாளர். சூழல் பற்றி பத்து நூல்களை எழுதியிருக்கிறார். கர்நாடகத்தின் வடக்குப்பகுதிக்கு பயணித்து சூழல் பற்றி எழுதியிருக்கிறார். விவசாய பன்மைத்தன்மை பற்றி பிரான்சிஸ் புச்சனன் என்ற ஸ்காட்லாந்து ஆய்வாளர் மற்றும் தாவரவியலாளரோடு ஆராய்ச்சி செய்துள்ளார். 

தேவனூர் மகாதேவா

(யெடேகே பிட்டா அக்சரா) நீக்கப்பட்டுள்ளது

இவர் கன்னட நாவலாசிரியர் எழுத்தாளர். பள்ளிகளில் கன்னட மொழியை பயிற்றுமொழியாக்க போராடியவர். இதற்காக நிருபடங்கா எனும் விருதைக் கூட மறுத்த எழுத்தாளர்.  குசும பாலே, ஓடலைய்யா, தையவனூரு ஆகிய படைப்புகளை உருவாக்கியுள்ளார். பாடநூல்களை ஜனநாயக பூர்வமான முறையில் உருவாக்குவதில்லை என குற்றம்சாட்டியுள்ளார் மகாதேவா. தனது படைப்பை பள்ளி நூல்களில் பயன்படுத்த அனுமதி அளிக்கவில்லை. 

ஜி ராமகிருஷ்ணா

(பகத் சிங் பற்றிய பாடம் நீக்கப்பட்டுள்ளது)

ஓய்வு பெற்ற பேராசிரியர். ஆங்கிலம் கற்பித்தவர், பகத்சிங், சே குவேரா, யோகபிரவா, லோகாயதன தர்ஷனா என பல்வேறு கருப்பொருட்களை எழுதியவர். சமஸ்கிருத த்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களின் பிரதிநிதியாக பத்து ஆண்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராமகிருஷ்ணா. பாடநூல்களில் உள்ள பாடங்கள் சரியானவை அல்ல, ஜனநாயகப் பூர்வமானவை அல்ல என்று கூறி தனது படைப்பை பயன்படுத்த அனுமதி வழங்கவில்லை. 


இந்தியன் எக்ஸ்பிரஸ் 

சனத் பிரசாத் 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்