தனியாளாகப் போராடும் தொழிலதிபர்! - ரென் ஜெங்ஃபெய்
நம்பிக்கையை சிதைத்த குற்றச்சாட்டு!
2019ஆம் ஆண்டு ஹூவெய் நிறுவனத்திற்கு கடுமையான சரிவு. அப்போது அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சியில் இருந்தார். நீதித்துறை, ஹூவெய் நிறுவனத்திற்கு எதிராக ஏராளமான குற்றச்சாட்டுகளை அடுக்கியது. 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கனடாவில் இருந்த ரென்னின் மகள் மெங் வாங்சூவை விமானநிலையத்தில் கைது செய்து அவமானப்படுத்தினர்.
இதைப்பற்றி ரென் டைம் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்,
எனக்கு அமெரிக்கா ஊக்க சக்தியை அளித்த நாடு. எனது தொழில்சார்ந்த அறிக்கையில் கூட அதைக் குறிப்பிட்டுள்ளேன். இன்று எங்கள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கூட நான் அமெரிக்காவை வெறுக்கவில்லை. நாங்கள் சீன நாட்டில் செயல்படும் நிறுவனம்தான். அரசின் விதிகளுக்கு உட்பட்டு நிறுவனத்தை நடத்துகிறோம். நாங்கள் அமெரிக்க அரசு கூறுகிற குற்றச்சாட்டுப்படி, கொல்லைப்புற வழியாக பிற நாடுகளை உளவு பார்க்கிறோம் என்றால் இத்தனை நாடுகளில் நாங்கள் எப்படி பணியாற்ற முடியும். நாங்கள் 170 நாடுகளில் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறோம் என்றார்.
ரென், சீன மொழியில் தான் பேசுகிறார். அதை பிபிசி, டைம் ஆகிய ஊடகங்கள் மொழிபெயர்க்கின்றன. அமெரிக்காவின் தடைக்குப் பிறகு ஹூவெய் நிறுவனம் சந்தித்த சரிவுகள் சாதாரணமல்ல. அமெரிக்காவிலுள்ள பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் ஹூவெய்க்கு வழங்கி வந்த ஆதரவை நிறுத்திக்கொண்டன. ஹூவெய் போன்களில் இயங்கிய பல்வேறு மென்பொருட்களை விலக்கிவிட்டு, ரென் சுயமாக மென்பொருட்களை, சிப்களை தயாரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இப்படி தடை விதிக்கப்பட்டபோது கூட, இனி சீனா சுயசார்பாக பல்வேறு விஷயங்களைச் செய்யமுடியும் என்று தன்னம்பிக்கையாக ரென் பேசினார். அவரா இந்த சரிவுக்கு பயப்படுவார்? இடர்ப்பாடான நேரத்திலும் கூட நாட்டை விட்டுக்கொடுக்காமல் பேசும் பண்பு, அவரின் ராணுவப் பணி காரணமான மனதில் உருவாகியிருக்கலாம்.
ரென் தனது 44 வயதில்தான் ஹூவெய் தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தைத் தொடங்கினார். ஹூவெய், ஹானர் ஆகிய பிராண்டுகளில் இன்றும் ஸ்மார்ட்போன்கள் விற்கப்படுகின்றன. அமெரிக்க நிறுவனங்களின் தொழில்நுட்ப உதவி தடை செய்யப்பட்டதால், கூகுள், மைக்ரோசாப்ட், குவால்காம் ஆகிய நிறுவனங்களின் மென்பொருள், வன்பொருள் ஏதும் ஹூவெய்யில் பயன்படுத்தப்படாத நிலை உள்ளது.
ஹூவெய்யைத் தொடங்கிய ரென்னுக்கு பொழுதுபோக்கு என்பது நூல்களை வாசிப்பதும், அவை பற்றி யோசிப்பதும்தான். வேறு விஷயங்கள் ஏதுமில்லை. சீன மொழியில் பேசினாலும் தான் சொல்லுவதை நினைப்பதை தெளிவான வார்த்தைகளில் எடுத்து வைத்து பேசுவது ரென் பாணி. மெல்லிய புன்சிரிப்போடு தன் நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகளைப் பற்றி உரிமையாளர் பேசுவது யாருக்கும் கற்பனை செய்வது கூட கடினமாகவே இருக்கும். ரென் அப்படித்தான்.
பிற நிறுவனங்கள் எப்படியோ, 1987ஆம் ஆண்டு ஹூவெய் நிறுவனம் தொடங்கப்பட்டபோது, ரென்னின் மனதில் இருந்தது தனது நிறுவனம் வெற்றி பெறவேண்டும் என்பதல்ல. சீன தொலைத்தொடர்பிற்கு முதுகெலும்பாக ஹூவெய் உருவாக வேண்டும் என்பதுதான். அதனால் தான், உலகளவில் பல்வேறு தொலைத்தொடர்பு ஒப்பந்தங்களை ஹூவெய் வெல்ல முடிந்தது...முடிகிறது.
ரென் தேவையென்றால் அலுவலக கலந்துரையாடல்களில் பேசுபவர். மற்றபடி ஹூவெய் தொடர்பான திட்டங்களை அவர் தனியாகவே உருவாக்குகிறார். செயல்படுத்தும்போது பிறருக்கு தகவல் தெரிவித்து அதனை மேம்படுத்த பல்வேறு ஆலோசனைகளை நாடுகிறார். பள்ளி, ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியபோதும் சரி இப்போது தொழில்வட்டாரத்திலும் நெருங்கிய ஆப்த நண்பர்கள் வட்டாரம் என்று யாருமே இல்லை. ரென் அப்படித்தான் செயல்படுகிறார். ஆம் ரென் அப்படித்தான்...

image -Financial Times
கருத்துகள்
கருத்துரையிடுக