பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் முதியோர் இல்ல பெண்கள்!

 











கோவையில் ஆர்எஸ் புரத்தில் உள்ளது ஆதரவற்றோர் இல்லம். அந்த இல்லத்தைச் சேர்ந்த முதியோர், தங்களுக்கு அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை உணவுகளை வழங்கி வருகின்றனர். 

கோவை கார்ப்பரேஷன், ஈர நெஞ்சம் என்ற தன்னார்வ அமைப்பு ஆகியவற்றின் ஆதரவு உதவியுடன் ஆதரவற்றோர் இல்லம், மாணவர்களுக்கு டீ, பிஸ்கெட், நீர்மோரை வழங்கிவருகிறது. தினசரி மாலை நான்கு மணிக்கு அரசுப்பள்ளி மாணவர்கள் இங்கு வருகின்றனர். இல்லத்தில் வாழ்பவர்கள் அனைவருமே குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள்தான். அவர்கள் இன்று தாங்கள் வாழும் சமூகத்தையே குடும்பமாக நினைக்கிறார்கள் என்றார் ஈர நெஞ்சம் அமைப்பின் தலைவரான மகேந்திரன். 

முதியோர் அமைப்பினர் முதலில் பள்ளிக்கே சென்று டீ, பிஸ்கெட், சுண்டல், ஆகியவற்றை வழங்கி வந்திருக்கின்றனர். பிறகுதான் மாணவர்களே முதியோரை தேடி வரத் தொடங்கியிருக்கின்றனர். காலை உணவு கூட நாங்கள் வழங்க நினைத்தோம். ஆனால் அதற்கான நிதி உதவிகளைப் பெற்றால்தான் சாத்தியம் என்கிறார் ஆதரவற்றோர் இல்லத்தில் வாழும் லஷ்மி அம்மாள். அண்மையில் தெருவில் ஆதரவற்று கிடந்த பெண்ணை மீட்டு இல்லத்தில் சேர்த்தனர். பிறகு அந்த பெண்ணின் உறவினர்களைத் தேடியபோது, அவர்கள் இல்லத்திற்கும் அவர்கள் செய்யும் சேவைக்கும் பொருளுதவியை வழங்கியுள்ளனர்.  

வயதான காலத்திலும் இந்த முதிய பெண்கள் செய்யும் சேவை அசாதாரணமானது. இப்போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிறப்பு வகுப்புக்கு எளிதாக தயாராக இவர்களின் சிற்றுண்டி உதவுகிறது. மாணவர்கள் தங்கள் வாழ்க்கை முழுக்க இதை நினைவில் கொள்வார்கள் என நம்புகிறேன் என்றார் அரசுபள்ளி தலைமை ஆசிரியர் சௌந்தர்ராஜன். 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 


கருத்துகள்