இடுகைகள்

அமின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமினின் கதையில் மகிழ்ச்சியான தருணங்களும் உண்டு! - ஃப்ளீ (2021) - அனிமேஷன் டாக்குமெண்டரி

படம்
  ஜோனாஸ் போகெர் ராஸ்முசென் டென்மார்க் இயக்குநர் இவர், ஃப்ளீ(2021) எனும் அனிமேஷன் டாக்குமெண்டரி படத்தை எடுத்துள்ளார். இப்படம், அமின் நவாபி என்ற ஒருவர் ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து தப்பித்து ரஷ்யாவின் மாஸ்கோவுக்கு வந்து அங்கிருந்து டென்மார்க் நாட்டுக்கு செல்லும் பயணத்தை விவரிக்கிறது. படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட பெருமையுடையது. இயக்குநரிடம் பேசினோம்.  உங்களுக்கு நவாபி இளம் வயதிலேயே தெரியும். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்கலாம் என்று எப்படி எப்போது தோன்றியது? டென்மார்க் நாட்டின் கிராம பகுதியில் வளர்ந்தவன். அப்போதுதான் ஆப்கானிஸ்தானில் இருந்து சிறுவன் பதினைந்து வயதில் அங்கு வாழ்வதை அறிந்தேன். அவனது கதையை தெரிந்துகொள்ள ஆர்வம் கொண்டேன். ஆனால் முதலில் அவன் தன் கதையைக் கூற விரும்பவில்லை. நாங்கள் நண்பர்களாக இருந்தாலும் அவனது இறந்தகாலம் மர்மமாகவே இருந்தது. பதினைந்து ஆண்டுகள் கழிந்தபிறகு அவனது கதையை தெரிந்துகொள்ள மீண்டும் கேட்டேன். ஆனால் அவன் கூற முடியாது என மறுத்துவிட்டான். ஆனால் அப்போதே அவன் நான் அதைக்கூற தயாரானதும் உன்னிடம் கூறுகிறேன் என்று சொன்னான். பிறகு நான் அனிமேஷன் டாக்