அமினின் கதையில் மகிழ்ச்சியான தருணங்களும் உண்டு! - ஃப்ளீ (2021) - அனிமேஷன் டாக்குமெண்டரி

 












ஜோனாஸ் போகெர் ராஸ்முசென்
டென்மார்க் இயக்குநர்




இவர், ஃப்ளீ(2021) எனும் அனிமேஷன் டாக்குமெண்டரி படத்தை எடுத்துள்ளார். இப்படம், அமின் நவாபி என்ற ஒருவர் ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து தப்பித்து ரஷ்யாவின் மாஸ்கோவுக்கு வந்து அங்கிருந்து டென்மார்க் நாட்டுக்கு செல்லும் பயணத்தை விவரிக்கிறது. படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட பெருமையுடையது. இயக்குநரிடம் பேசினோம். 

உங்களுக்கு நவாபி இளம் வயதிலேயே தெரியும். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்கலாம் என்று எப்படி எப்போது தோன்றியது?

டென்மார்க் நாட்டின் கிராம பகுதியில் வளர்ந்தவன். அப்போதுதான் ஆப்கானிஸ்தானில் இருந்து சிறுவன் பதினைந்து வயதில் அங்கு வாழ்வதை அறிந்தேன். அவனது கதையை தெரிந்துகொள்ள ஆர்வம் கொண்டேன். ஆனால் முதலில் அவன் தன் கதையைக் கூற விரும்பவில்லை. நாங்கள் நண்பர்களாக இருந்தாலும் அவனது இறந்தகாலம் மர்மமாகவே இருந்தது. பதினைந்து ஆண்டுகள் கழிந்தபிறகு அவனது கதையை தெரிந்துகொள்ள மீண்டும் கேட்டேன். ஆனால் அவன் கூற முடியாது என மறுத்துவிட்டான். ஆனால் அப்போதே அவன் நான் அதைக்கூற தயாரானதும் உன்னிடம் கூறுகிறேன் என்று சொன்னான். பிறகு நான் அனிமேஷன் டாக்குமெண்ட்ரிக்கான பயிற்சிகளைப் பெற்றேன். இதைக்கூறியபோது தனது கதையை கூற நவாபி சம்மதம் சொன்னான்.  இது தனிப்பட்ட ஒருவரின் அந்தரங்கமான கதை. 

முதலில் ஆவணப்படத்தில் அமினின் குரலைப் பயன்படுத்தினீர்கள். ஆங்கில பிரதிக்கு மட்டும் ரிஷ் அகமதுவின் குரலைப் பயன்படுத்தினீர்கள்?

அதிகளவு பார்வையாளர்களுக்கு ஆவணப்படத்தை கொண்டு சேர்க்க நினைத்தோம். அதற்காகத்தான் ரிஷ் அகமதுவின் குரலை பயன்படுத்தினோம். அவரிடம் கூறியபோது, அவர் கதையைக் கேட்டு தனக்குப் பிடித்திருக்கிறது என்று சொன்னார். அமினின் பாத்திரத்திற்கும் குரல் கொடுத்தார். 

அனிமேஷன் என்பதை படம் நெடுக பயன்படுத்தலாம் என முதலிலேயே முடிவு செய்துவிட்டீர்களா?

தொடக்கத்தில் ஃப்ளீ என்ற படமே, அனிமேஷன் டாக்குமெண்டரிதான். கதையில் நிறைய நாடகத்தன்மை, பாத்திரங்கள் உண்டு. எனவே, நாங்கள் கேமராவை விட அனிமேஷனை பயன்படுத்த முடிவெடுத்தோம். அதேசமயம் படம் உண்மையாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றியது என பார்வையாளர்களுக்கு புரியவேண்டும்.  

இந்த படத்திலும் சந்தோஷமான தருணங்கள் உண்டா?

நம்மிடையே நிறைய கதைகள் உண்டு. அமின் பாதிக்கப்பட்ட பாத்திரம் போல தெரியக்கூடாது என நினைத்தோம். அவன் மிகச்சிக்கலான விஷயங்களை எதிர்கொண்டுள்ளான் என்பது உண்மை. அதேசமயம், அவனுக்கு காதல் வந்த நேரம், அவன் பாலின அடையாளம் ஆகியவையும் முக்கியமானவை தான். நாங்கள் இருவருமே நண்பர்களாக இருந்தவர்கள். நிறைய விஷயங்களை பேசி சிரித்திருக்கிறோம். இது மற்றவர்களின் வாழ்க்கையிலும் நடக்கும் நிகழ்ச்சிதானே? அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ஆவணப்படத்திலும் உண்டு. 

அமினின் பாலின அடையாளம் என்பதும் கதையில் முக்கியமானது அல்லவா?

அவன் பதினேழு வயதில் எனக்கு நண்பனானான். எனக்கு அவன் ஓரினச்சேர்க்கையாளன் என்று தெரியும். ஆனால் அதுவே அவனது கதையில் முக்கியமான இடம்  பிடித்துள்ளது அப்போதைக்கு தெரியாது.  ஆனால் அவனிடம் பேசியபோதுதான் அவனது பாலியல் அடையாளம் என்பது எவ்வளவு பெரிய சுமை என்று தெரிய வந்தது. அதுவும் ஆப்கானிஸ்தானில் அவன் தன் அடையாளத்தை மறைத்து வைத்து வாழ வேண்டியிருந்தது. அவனுக்கு காபூலில் வாழ முடியவில்லை. டென்மார்க் வந்த அமின், தனது கடந்தகாலத்தை மறைத்து வைத்தான். அவனதுகுடும்பம் பற்றியும் சொல்லவில்லை. 

அமினும் அவரது தோழருமான காஸ்பர் இருவரும் மணம் செய்துகொண்டார்களா?

விஷயங்களை வெளியே சொல்லும்போது சில சமயங்களில் நாம் அதிர்ஷ்டசாலியாக இருப்போம். ஃப்ளீ படம் ஒருவர் தனக்கான வீட்டைத் தேடுவதுதான். காஸ்பர், அமினுக்கும் தனக்குமான வீட்டைத் தேடிக்கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன். இந்த கதை மகிழ்ச்சியோடு முடியலாம் அல்லது அமின் மீண்டும் வேறிடத்திற்கு செல்லலாம். 

அமின் தனது கதையை உலகிற்கு சொன்னபிறகு அமைதியடைந்துவிட்டாரா?

அவனுக்கு தனது கதையை பிறரிடம் சொல்லுவதற்கு தயக்கம் இருந்தது. இப்போது தனது கதையை சொல்லுவதற்கான தைரியம் அவனிடம் வந்துவிட்டது. கதையை கூறிவிட்டதால் அமைதியாக இருக்கிறான். தொடக்கத்தில் மனிதர்களிடம் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் தனியாகவே இருந்தான். 

படம் பற்றி அகதிகள் ஏதேனும் கருத்துகள் சொன்னார்களா?

ஆம். உலகிலுள்ள பல்வேறு அகதி மக்கள், எல்ஜிபிடியினர்  படத்தின் கதை தங்களை பிரதிபலிக்கிறது என்று கூறினர். 

அலகா சகானி

இந்தியன் எக்ஸ்பிரஸ் 


கருத்துகள்