மிரட்டும் பாம்பு, குறையும் சிகிச்சை!

 











2020ஆம் ஆண்டில் பாம்புகளால் இறந்த மனிதர்களின் எண்ணிக்கை 78 என தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு சொல்லுகிறது. இதனை நேஷனல் ஹெல்த் புரோஃபைல் அமைப்பின் (என்ஹெச்பி)  தகவல் உறுதி செய்துள்ளது. கோடைக்காலம் வந்துவிட்டால் பாம்புகளின் வருகை வீடு, வயல், கிடங்கு என தொடங்கிவிடும். இதனை பிடிக்கவென பயிற்சிபெற்ற வல்லுநர்கள் உள்ளனர் கோவையில் நடப்பு ஆண்டில் அதிகளவாக 55 பேர் பாம்பு கடித்து இறந்துள்ளனர். இது தமிழ்நாட்டிலேயே அதிகளவு மரண எண்ணிக்கை. 

நகரம், கிராமம் ஆகிய இடங்களில் பெரிய வேறுபாடு இன்றி பாம்புகள் மனிதர்களை கடித்துள்ளன. நகரங்களைப் பொறுத்தவரை தங்களின் வாழிடத்திற்காக பாம்புகள் நகர்ந்துசெல்லும்போது குறுக்கே வரும் மனிதர்களை கடிக்கின்றன. கிராமத்தில், மலம் கழிக்க செல்லும் பெண்களை பெரும்பாலும் தீண்டுகின்றன. 

வாரத்திற்கு ஒருமுறை பாம்புகள் உணவு உண்கின்றன. அப்படி கிடைக்கும் உணவும் மனிதர்களின் தலையீட்டால் கிடைக்காமல் போகும்போது பாம்புகள் ஆவேசம் கொள்கின்றன. மனிதர்களை கடிக்கின்றன. என்ஹெச்பி தகவல்படி, இந்தியாவில் தமிழ்நாடு பாம்பு கடியால் மனிதர்கள் இறப்பதில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.  ஏப்ரல் 2021 - மார்ச் 2022 வரையிலான காலகட்டத்தில் 442 பேர் பாம்பால் கடிபட்டு மோட்சம் அடைந்துள்ளனர். மாவட்ட அளவில் கோவைக்கு அடுத்து சேலம் வருகிறது. 2,456 பேர் கடிபட்டு 40 பேர் இறந்துள்ளனர். இதற்கடுத்து வேலூர் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம் வருகிறது. 

அரசு மருத்துவமனைகளில் ஆன்டி வெனோம் எனும் முறிப்பு மருந்து கிடைக்கிறது. ஆனால் அரசு தொடக்கநிலை சுகாதார நிலையங்களில் முறையான மருந்துகள் கிடைப்பதில்லை என ரோமுலஸ் வொய்டேகர் கூறுகிறார். இவர் சென்னையில் முதலைப்பண்ணையை நடத்தி வருகிறார். 


ஆஹா 

பாம்பு கடித்தவுடன் பதற்றப்படாதீர்கள் என்று சொல்லுவது சங்கடமாகத்தான் இருக்கும். ஆனால், முடிந்தளவு உடல் உதறலை கட்டுப்படுத்தினால்தான் உயிர் பிழைக்க முடியும். பதற்றம், மன அழுத்தம் என ஒரு டஜன் பிரச்னைகளோடு இருந்தால் பாம்பின் விஷம் வேகமாக பரவும். 


பாம்பு கடித்த ஐந்து மணி நேரத்தில் எதிர்ப்பு முறிமருந்தை எடுத்துக்கொள்ளவேண்டும். இதில் கவனிக்கவேண்டியது, நோயாளியின் உடல்நிலையைத்தான். 


முதல் விதியை மீண்டும் மீண்டும் பாம்பு கடித்தவருக்கு நினைவுபடுத்துங்கள். அவர் அமைதியாக இருப்பதே முக்கியம். 


ஐயையோ

பதற்றமாகி குறுக்கும் நெடுக்குமாக ஓடக்கூடாது

கடித்த இடத்திற்கும் மேல், கீழ் என எங்கும் துணிக்கட்டு கட்டக்கூடாது. 

சினிமாவில் வருவதுபோல கடிவாயை அறுத்து ரத்தத்தை உறிஞ்சி துப்ப முனைய கூடாது. இதனால் கடிபட்டவர், காப்பாற்ற முனைந்தவர் என இரண்டுபேருமே உயிர் பிழைப்பது கஷ்டம். 




 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்