செம குறட்டை சாரே!
எஸ்ஏபி தனது நூலில், உதவி ஆசிரியர் புனிதன் ஹோட்டல் அறையில் குறட்டை விட்டு தூங்கியதை தனக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி கிண்டல் செய்திருப்பதை எழுதியிருக்கிறார். பார்க்க குறட்டைதானே ப்ரோ என தோன்றினாலும், இரவில் எழும் குறட்டை பீதி எழுப்பும். எனது அலுவலகத்தில் கூட பேசிப் பேசியே களைப்பான அலுவலக சகாக்கள் சட்டென குட்டித்தூக்கம் போடும்போது எழும் குறட்டை ஜெனரல் ஏசியை விட அதிக சத்தம் எழுப்புகிறது. நமக்கும் கூட ஆவ்வ....வ்வ.. பாருங்க சொல்லும்போதே கொட்டாவி வந்துவிட்டது. அடுத்து தூக்கம், அதன் பின்னே குறட்டைதான்.
இப்போது குறட்டை தொடர்பான சமாச்சாரங்களைப் பார்ப்போம்.
உலகில் வாழும் 45 சதவீதம் பேருக்கு குறட்டை விடும் பிரச்னை உள்ளது. அதாவது வயது வந்தவர்களுக்குத்தான் சொல்கிறேன். நான்கு நபர்களில் ஒருவருக்கு குறட்டை விடும் பழக்கம்.
என்பது வாழ்நாள் முழுக்க தொடர்கிறது.
க்யூப் தொழில்நுட்பத்தில் உருவாகும் குர் முதல் ப்ர்... வரையிலான ஒலி கொண்ட குறட்டைகள் நோய்களுக்கு சாப்பிடும் மருந்துகள், மதுபானம் அருந்துவது, உடல் பருமன் ஆகியவை காரணமாக உருவாகிறது. ஒலியின் தொனி, லயம், ஸ்ருதிக்கு மூக்கிலுள்ள தசைகளே காரணம்.
குறட்டை விடுவது உடல்நலத்திற்கு நூறு சதவீதம் கேடு என்று மூக்கு மேல் அடித்து சத்தியம் செய்ய முடியாது. ஆனால் இங்கிலாந்தில் குறட்டை களேபரத்தால் விவாகரத்து செய்யும் மனைவிகளின் எண்ணிக்கை 12 சதவீதமாகும். அதுமட்டும்தான் காரணமா என்று இந்தியா டுடே செக்ஸ் சர்வே தான் சொல்லவேண்டும்.
ஸ்லீப் அப்னியா என்ற குறைபாடு உள்ளது. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு எப்போது மூச்சு நின்று எப்போது தொடங்கும் என்பது அவர்களின் அருகில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும். எனவே நன்கு தூங்கி எழுந்தபிறகு சம்பந்தப்பட்டவர்களை மருத்துவர்களிடம் அழைத்து சென்றால் அவர் தூக்கத்தில் இறந்துபோகாமல் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளது.
தொண்டை குறுகலாக அமைந்து மனம் சுருங்கிப் போன பிரக்கிருதிகள் உலகில் உண்டு. அவர்களுக்காகவே, யுபிபிபி என்ற சிகிச்சை முறை உள்ளது. இதை செய்யும்போது தொண்டைப்பகுதி திசுக்களை மாற்றியமைத்து காற்று, ஓரியண்ட் ஹைஸ்பீட் பேனில் வருவது போல செய்யலாம்.
தலைவலிக்கு சாரிடான் மாத்திரை போடுவது போல குறட்டைக்கு தீர்வு காண்பது எளிதல்ல. இதில் வாய், தொண்டை தசைகள் இணைந்துள்ளன.
டிட்ஜெரிடூ என்று சொல்லும்போது ஏதோ ஆப்பிரிக்க பாம்பு இனத்தைப் பற்றி சொல்கிறேன் என நினைக்கவேண்டாம். இது ஒரு இசைக்கருவி. இதை மன்சூர் அலிகான் போல சாவதானமாக ஊதினாலே உங்களுக்கு தொண்டை தசைகள் வலுவாகும். குறட்டை குறையுமாம்.
ரீடர்ஸ் டைஜெஸ்ட்
கருத்துகள்
கருத்துரையிடுக