கவிதைகளின் நகரமாக டெல்லி எனக்கு பிடிக்கும்! - விமானி மார்க்

 















மார்க் வான்ஹோனாக்கர் 
விமானி, எழுத்தாளர் 


சிறுவயதிலிருந்து வானத்தில் விமானம் ஓட்ட அசைப்பட்டவர்தான் மார்க். இப்போது அங்கே இங்கே என அலைந்து ஒருவழியாக காக்பிட்டில் உட்கார்ந்துவிட்டார். கூடுதலாக கிடைத்த நேரத்தில் ஸ்கை ஃபேரிங் என நூலை வேறு எழுதிவிட்டார். அதுதான் முதல் நூல். பிரிட்டிஸ் ஏர்வேஸ் நிறுவனத்தில் பல்வேறு ஊர்களுக்கு சென்றவர், அந்த அனுபவங்களை காதல் கடிதம் போல எழுதிய நூல்தான் இமேஜின் எ சிட்டி என்ற நூல். அவரிடம் இதுபற்றி பேசினோம். 

உங்களுக்கு பிடித்தமான விமானநிலையம் எது?

மும்பையின் டெர்மினல் 2 என்பது எனக்கு பிடித்தமான இடம்.  2007இல் விமானத்தை முதல்முறையாக ஓட்டும்போது மும்பைக்குத் தான் ஓட்டிச்சென்றேன். இதை என்னால் எப்போதும் மறக்கமுடியாது. டெல்லி விமானநிலையமும் எனக்கு பிடித்தமானது. 

பிடித்தமான நேரம்?

இரவில் விமானத்தில் பறப்பது பிடித்தமானது. அப்போது வானம் நிறைய நட்சத்திரங்கள் இருக்கும். அந்த நேரத்தில் கீழே பார்க்கும்போது நகரங்கள் ஒளிவிட்டபடி இருக்கும். சாலைகளிலிலும் பிரகாசம் தெரியும். 

பொதுவாக கார் ஓட்டுநர்களுக்கு பிறர் கார் ஓட்டி தான் உட்கார்ந்து வருவது பிடிக்காது. உங்களுக்கு எப்படி?

நான் கூறும் பதில் உங்களை ஆச்சரியப்படுத்தலாம். ஆனால் எனக்கு பயணியாக வருவதும் பிடித்தமானது தான். விமானத்தில் பயணியாக உட்கார்ந்து வரும்போது நிறைய விஷயங்களைப் பார்க்கலாம். நீங்கள் வைஃபையில் இணையாமல் இருந்தால் நிறைய விஷங்களை உள்வாங்க முடியும். ஜன்னல் சீட்டருகே உட்கார்ந்துகொண்டு பாடல் கேட்பேன். ஏதாவது எழுதிக்கொண்டு கூட வந்திருக்கிறேன். 

பெருந்தொற்று காலத்தில்தான் நூலை எழுதினீர்களா?

நூலை அதற்கு முன்னரே எழுத தொடங்கிவிட்டேன். நான்கு ஆண்டுகளாக நூலை எழுதி அதனை செம்மைப்படுத்திக்கொண்டு இருந்தேன். பெருந்தொற்று காலம் இதுவரை நான் சென்று வந்த நகரங்கள் அங்குள்ள இடங்கள் பற்றி யோசிக்க உதவியுள்ளது. 

டெல்லியை முக்கியமான நகரமாக ஏன் நினைக்கிறீர்கள்?

டெல்லியை கிருன் கபூர் என்ற எனது நண்பர் தான் கவிதைகளின் நகரம் என கூறி அறிமுகப்படுத்தினார். நான் முதன்முதலாக விமானியாக டெல்லி வந்து டெர்மினலில் இறங்கியபோது, எனக்கு கிருன் கபூரின் நினைவுதான் வந்தது. பிரவினைக்குப் பிறகு கிருனின் அப்பா, டெல்லியில் தான் வசித்தார். அவர் ஒரு கவிஞர் என கிருன் கூறியிருந்தார். 

டைம்ஸ் ஆஃப் இந்தியா 

நீலம் ராஜ் 






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்