காலநிலை மாற்றத்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டுமா? உங்களுக்காகவே இந்த நூல்கள் இதோ!

 
காலநிலை மாற்றம் பற்றி வாசிக்க வேண்டிய நூல்கள்

தி நியூ க்ளைமேட் வார் - தி ஃபைட் டு டேக் பேக் அவர் பிளானட்

மைக்கேல் இ மன்

காலநிலை மாற்ற வல்லுநர் மைக்கேல் இ மன், டோன்ட் லுக் அப் என்ற டிகாப்ரியோவின் பட பாத்திரம் போலவே இருக்கிறார். அதாவது நாயகனாக இருக்கிறார் என சொல்ல வருகிறோம். மைக்கேல், நடப்பு கால காலநிலை மாற்ற செயல்பாடுகள் எதை செய்தன எதை தவறவிட்டன என்பதை தெளிவாக விளக்குகிறார். 


தி அன் இன்ஹேபிட்டபிள் எர்த்

டேவிட் வாலஸ் வெல்ஸ் 

காலநிலை மாற்றம் பற்றிய பயத்தை ஏற்படுத்துகிற நூல் என இதனை தாராளமாக கூறலாம். இரண்டு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்தால் என்னவாகும் என்பதை துல்லியமாக விளக்கியிருக்கிறார் டேவிட். பயம்தானே நம்மை முன்கூட்டியே செயல்படத்தூண்டும். அந்த வகையில் காலநிலை மாற்றத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு செயல்பட டேவிட்டின் இந்த நூல் ஊக்கமாக அமையலாம். 

தி நட்மெக்ஸ் கர்ஸ் - பாரபிள்ஸ் ஃபார் எ பிளானட் இன் கிரிசிஸ் 

அமிதவ் கோஷ்

காலனிய காலம் தொடங்கி இன்றுவரை முதலாளித்துவ பொருளாதாரம் எப்படி இயற்கையை அழிக்கிறது என அமிதவ் கோஷ் விலாவாரியாக தகவல்களை சேகரித்து எழுதியிருக்கிறார். இதேபோல அமிதவ் எழுதிய தி கிரேட் டிஅரேஞ்ச்மென்ட் கிளைமேட் சேஞ்ச் அண்ட் தி அன்திங்கபிள் என்று நூலும் முக்கியமானது. 
திஸ் சேஞ்சஸ் எவ்ரிதிங்

நவோமி கிளெய்ன்

காலநிலை மாற்றத்தை எப்படி பார்ப்பது, புரிந்துகொள்வது என்பதை பலரும் அறிய மாட்டார்கள். அப்படிப்பட்ட மக்களுக்கான நூல் இது. பத்திரிகையாளர் நவோமி கிளெய்ன் ஏராளமான தகவல்களை சேகரித்து எழுதியுள்ளார். எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடு, மக்களின் அதிக நுகர்வு, நிறைவுறாத பொருளாதார வளர்ச்சி ஆகியவையே இயற்கையை சூழலை கெடுக்கிறது என தீர்மானமாக நவோமி வாதிடுகிறார். ஆதாரங்களை முன்வைக்கிறார். 

ஆல் வீ கேன் சேவ் - ட்ரூத், கரேஜ் அண்ட் சொல்யூஷன்ஸ் ஃபார் தி க்ளைமேட் கிரிசிஸ்

காலநிலை மாற்றத்தில் பெண்களின் பங்கு பற்றி பேசிய கட்டுரைகளைக் கொண்ட நூல் இது. பத்திரிகையாளர் நவோமி கிளெய்ன் தொடங்கி அரசியல் செயல்பாட்டாளர் அட்ரியன் மரி வரையில் அறுபது பெண்கள் நூலில் இடம்பெற்றுள்ளனர். வெப்பநிலை உயர்வு என்பதைக் கடந்த காலநிலை மாற்றம் எப்படி மனிதர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது என  விளக்கி எழுதியுள்ளனர். 

Livemint


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்