உங்களைச் சுற்றியே ரோல்மாடல்கள் நிறையப் பேர் உண்டு! பெனு சேகல், ஃப்ரீபோர்ட் ரீடெய்ல் இந்தியா

 


பெனு சேகல், ஃப்ரீபோர்ட் ரீடெய்ல்





பெனு சேகல்

இயக்குநர், ஃப்ரீபோர்ட் ரீடெய்ல் இந்தியா

பெனு, 23 ஆண்டுகளாக பல்வேறு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். ஆம்பியன்ஸ், டிஎல்எஃப் யுடிலிட்டிஸ், இன்டர்நேஷனல் ரீகிரியேஷன் பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்த அனுபவம் கொண்டவர். ரீடெய்ல் துறையில் விநியோகம், வணிக முறை, இடங்களை வாடகைக்கு பிடிப்பது என பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். 

உயிரிதொழில்நுட்பத்தில் முதுகலை படித்துள்ளவர், மனிதவளத்துறை நிர்வாகத்திலும் முதுகலை படிப்பை நிறைவு செய்துள்ளார். அவரிடம் பேசினோம். 

ரீடெய்ல் தொடர்பான வணிகத்தை எப்படி கையில் எடுத்தீர்கள்?

தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் என்று சொல்லுவார்கள். இந்த இயல்பு நம் அனைவருக்குள்ளும் இருக்கும். சிலர் தொடக்கத்திலேயே இதை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். பிறர் இந்த தீப்பொறியை வாழ்க்கை முழுக்க தேடிக்கொண்டே இருக்கிறார்கள். 

வணிகம் என்பது எனக்குத் அப்படித்தான் வந்தது. இத்தனைக்கும் நான் முதுகலை படித்தது உயிரி தொழில்நுட்பம் மற்றும் வேதியியல் தான். ஆனால், நான் என் வேலைவாய்ப்பை அதில் தேடவில்லை. கல்லூரியில் மாணவர்களின் தலைவராக இருந்தவள் பிறரது  பிரச்னைகளை தீர்க்க முயன்று வந்தேன். ஆனால் அப்போது எனக்கு இருந்த திறமை பற்றி ஏதும் தெரியாது. 

எப்படி சந்தை நிலவரத்தைப் புரிந்துகொள்கிறீர்கள்?

மக்களோடு இருந்தால் அவர்களின் தேவை என்னவென்று உங்களால் அறிந்துகொள்ள முடியும். நான் மால்களை நிர்வாகம் செய்துள்ளேன். ஆண்டு இறுதி சீசன் விற்பனை என்பது எனது தலைமையில் எப்போதும் அதிகமாக இருக்கும். குறைந்த விலையில் பிராண்ட் பொருட்களை மக்கள் பயன்படுத்த முடியும் என்பதுதான் சலுகை. இதை த்தான் சந்தை கூறியது. இதற்காகத்தான் ஃப்ரீபோர்ட் ரீடெய்ல் தொடங்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றினாலே உங்களுக்கான இடம் கிடைத்துவிடும். 

உங்களுக்கு ஊக்கம் தரும் விஷயம், மனிதர்கள் இருக்கிறார்களா?

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒருவரை மட்டுமே ரோல்மாடலாக வைத்துக்கொண்டு முன்னேற முடியாது. எப்படி தேன் பல்வேறு பூக்களிலிருந்து சிறுக சேகரிக்கப்படுகிறதோ அப்படித்தான் மக்களிடமிருந்து பல்வேறு விஷயங்களை நான் கற்றுக்கொண்டு வருகிறேன். வீட்டைப் பொறுத்தவரை எனது பாட்டி, எனக்கு ஊக்கம் தந்த மனிதர். பிரிவினையின்போது அவள் தனது கணவரை இழந்துவிட்டாள்.  அந்த சூழலில் துக்கமாக இருந்தாலும் குடும்பத்தைக் காப்பாற்ற அவன் முயன்றாள். 

நான் எனது 35 வயதில் புனைவுகளை படிப்பதை விட்டுவிட்டேன். வெற்றி பெற்ற மனிதர்கள், நடிகர்கள், யூட்யூப் பிரபலங்கள் பலரின் சுயசரிதைகளைப் படித்தேன். அவற்றிலிருந்து நிறைய கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. சிக்னலில் பிச்சையெடுக்கும் பிச்சைக்கார ர்களைப் பார்த்தால் கற்றுக்கொள்ள விஷயம் இருக்கிறது. அவர்கள் இடையறாது கார் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அப்போதுதான் ஏதாவது ஒரு கதவு திறக்கும். நான் கூற வருவது அவர்களின் மனதில் இருக்கும் நம்பிக்கையைத்தான். 


நீங்கள் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் என்ன?

கற்பதை நிறுத்திக்கொள்ளக்கூடாது என்பதே முக்கியமான பாடம். எப்போது எனக்கு அனைத்துமே தெரியும் என நினைக்கிறீர்களோ அப்போதே அனைத்து வணிகங்களும் முடிவுக்கு வந்துவிட்டது என அர்த்தம். உங்களை காப்பாற்றிக்கொள்ள நீங்கள் தொடர்ச்சியாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும்.  தொழிலோடு உங்கள் குடும்ப நலனும் முக்கியம். குடும்பத்தினரின் நலன்களை பலிகொடுத்து வணிக வெற்றியைப் பெறுவதாக இருக்க கூடாது. நீங்கள் எப்போதும் உங்களை லிமிட் செய்துகொள்ள கூடாது. உங்களுக்குள் உருவாகும் தடைகள் அனைத்துமே மூளையில் உங்களுக்குள்தான் இருக்கிறது. இத்தடைகளை தாண்டி வென்றி மனிதர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் ஸ்டீபன் ஹாக்கிங். 

புதிய பெண் தொழில்முனைவோர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன ?

சந்தையின் நிலவரத்தை கவனமாக காது கொடுத்து கேளுங்கள். அதை நீங்கள் காது கொடுத்து கேட்க மறுத்தால் வணிகம் உங்களை புறக்கணித்துவிடும். பெண் தொழில்முனைவோர், தங்களின் மூளைக்குள் டைம் மெஷினை வைத்திருப்பது முக்கியம். 

மக்களுக்கு என்ன தேவை என்பதை கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் அவர்களின் தேவையை தீர்க்க முடியும். மக்களின் பிரச்னையை குறைந்த நேரத்தில் சிறப்பாக தீர்த்தால் நீங்கள்தான் சந்தையை ஆள்வீர்கள். 

ஃபெமினா 2021













கருத்துகள்