பனிச்சிறுத்தையை லடாக்கில் படம் பிடித்தது சவாலான சம்பவம்! - ஆதித்ய டிக்கி சிங்

 ஆதித்ய டிக்கி சிங்

காட்டுயிர் புகைப்படக்கலைஞர்
புகைப்படத்துறைக்குள் எப்போது நுழைந்தீர்கள்?

1999ஆம் ஆண்டு. இந்தியாவின் ரந்தம்பூரில் பிபிசிக்கான ஆவணப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அதற்கான நான்கு பேர் கொண்ட குழுவில் நானும் ஒருவன். ஒளிப்பதிவாளர்கள் தங்கள் பணியில் தீவிரமாக இருந்தனர். நான் பணியின்போது புகைப்படம் எடுக்கும் தேவை இருந்தது. அங்கிருந்தவர்களில் என்னால் மட்டும்தான் கேமராவின் கையேட்டை ஆங்கிலத்தில் படிக்க முடிந்தது. இப்படித்தான் அந்த வேலையை செய்து புகைப்படக்காரனானேன். 

கேமராவை எப்போதாவது சேதப்படுத்தி உள்ளீர்களா?

நிச்சயமாக. இரண்டு லென்ஸ்கள், இரண்டு கேமராக்களை சேதப்படுத்தியுள்ளேன். அதை நினைத்து அப்போது பெரிய வருத்தம்...

புதிதாக இத்துறைக்கு வருபவர்களுக்கு ஏதாவது அறிவுரை சொல்ல நினைக்கிறீர்களா?

பல்லாயிரக்கணக்கான மணி நேரங்கள் நீங்கள் உழைத்தாக வேண்டும். எனவே, தயாராக இருங்கள். உழையுங்கள். 

புலிகளை புகைப்படம் எடுப்பதில் நீங்கள் புகழ்பெற்றவர். அப்படி புகைப்படம் எடுத்ததில் எது சிறந்த விஷயம்?

நிலத்தில் வாழும் வேட்டையாடிகளை படம் எடுப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. ரந்தம்பூரில் உள்ள பல தலைமுறை புலிகளை எனக்குத் தெரியும். இதில் சுவாரசியம் என்பது புதிதாக பிறந்த புலிக்குட்டிகளை புகைப்படம் எடுப்பதுதான். புதிய தலைமுறையை கேமரா லென்ஸ் வழியாக பார்ப்பது திரில்லான அனுபவம்.

புலி உங்களை சாப்பிட முயன்றதுண்டா?

இல்லை. நிலத்தில் வாழும் வேட்டையாடிகளான புலிகள், காரமான இந்திய உணவுகளை விரும்புவதில்லை என்று நினைக்கிறேன். யானைகளோடு சற்று ஆபத்தான சம்பவங்களை எதிர்கொள்ள நேரிட்டிருக்கிறது. புகைப்படம் எடுக்கும்போது மலேரியா மூன்றுமுறை வந்திருக்கிறது. தூக்கமின்மை பாதிப்பும் உருவானது. அதையும் சமாளித்து வந்திருக்கிறேன். 

புகைப்படம் எடுப்பதில் நடந்த சவாலான நிகழ்ச்சி ஒன்றை சொல்லுங்களேன். 

லடாக்கில் பனிச்சிறுத்தையை படம் எடுத்ததுதான். மூன்றுமுறை அங்கு சென்றும் பனிச்சிறுத்தையை பார்க்க முடியவில்லை. நான்காவது முறை அதிர்ஷ்டம் வாய்த்தது. குளிருக்கு நான் அந்தளவு செட் ஆகவில்லை என்பதால் அங்கே தங்கியிருப்பது கடினமாக இருந்தது. 

பிபிசி வைல்ட்லைஃப் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்