பெண்களுக்கான எளிமையான இயற்கை இழைகளைக் கொண்ட துணிகளே லட்சியம்! - இந்து ஸ்ரீவஸ்தவா

 


இந்து ஸ்ரீவஸ்தவா

ஃபீல்குட் எனும் நிறுவனம் மூலம் கைகளால் நெய்யும் இழைகளைக் கொண்ட துணிகளை தயாரிக்கிறார் இந்து.  பெண்களின் அலமாரியில் 50 சதவீத உடைகளை கைகளால் நெய்த துணிகளாக மாற்றவேண்டும் என்பதே இந்துவின் லட்சியம். 

பிறருக்கு உதவவே தொழிலை தொடங்கினீர்களா என்ன?

என்னுடைய மகள் தன்னுடைய உடை பற்றி எப்போதும் குறை சொல்லிக்கொண்டே இருப்பாள்.  வேலை செய்யும் இடம், குடும்ப நிகழ்ச்சிகள் என அவள் அணியும் ஆடைகள் அனைத்தின் மீதும் இப்படி புகார்களை குவித்தாள். மகள் என்பதால் புகார்களை எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது. பொதுவாகவே நிறைய பெண்களுக்கு தங்கள் உடைமீது குறைகள், புகார்கள் உண்டு. அப்போது இந்திய ஜவுளித்துறை பற்றிய நூலொன்றை படித்தேன். அப்போதுதான் துணிகளில் பிரச்னை இல்லை. அதை நெய்யும் இழைகள் இயற்கையானவையாக இருக்கவேண்டும் என முடிவு செய்தேன். அதை மனதில் வைத்துக்கொண்டுதான் இந்துவை தொடங்கினேன். தொன்மைக்காலத்தில் மக்கள் தங்கள் பகுதியில் என்ன கிடைக்கிறதோ அதைத்தான் வாங்கி உடுத்துவார்கள். நான் தொடக்கத்தில் எனது மகளுக்காகவே உடைகளை வடிவமைத்தேன். அவை எளிமையான அழகுடையவை. 

உங்களுடைய ரோல்மாடல் யார்?

எனக்கு கோகோ சேனல் என்பவர்தான் ரோல்மாடல். அவர்தான். பெண்களின் சுதந்திரம் பற்றி பேசியதோடு அவர்களுக்கான உடைகளையும் எளிமையாக வடிவமைத்தார். பெண்களின் நாகரிக உடையின் வடிவமைப்பு பற்றி கவனத்தை அவரே முதலில் உருவாக்கினார். 

தொழிலை தொடங்குவதற்காக காத்திருக்க வேண்டுமா?

அப்படியெல்லாம் கிடையாது. உங்களுக்கு குறிப்பிட்ட தொழில் தொடங்க விரும்பினால், அதற்கான திறன்களை வளர்த்துக்கொண்டு உடனே தொடங்குவது சிறந்தது. 

மூளையை அல்லது இதயத்தை எதை பின்தொடர்வது?

இதயத்தை த்தான் பின்தொடர வேண்டும். அதுதான் உங்களுக்கான கடவுள். இதயம் என்ன சொல்கிறதென கேட்டு செயல்படுங்கள். நமக்கு கிடைத்திருப்பது ஒரே பெயர்தான். நாம் இறந்தபிறகு விட்டுச்செல்வதும் அது மட்டும்தான் என அமெரிக ஃபேஷன் டிசைனர் ஹால்ஸ்டன் சொல்லிருப்பார். அவரின் மேற்சொன்ன வாசகம் எனக்கு பிடித்தமானது. 

ஃபெமினா ஆகஸ்ட் 2021


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்