இடுகைகள்

போக்குவரத்து- சாலை அறிவிப்பு பலகைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறிவிப்புபலகைகள் என்ன சொல்லுகின்றன?

படம்
சாலை அறிவிப்புகளின் வடிவமைப்பு ! இருபதாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை அமெரிக்க சாலைகளில் தனித்தனி சாலைகள் , ஓட்டுநர் உரிமம் , அறிவிப்பு பலகைகள் என எவையும் உருவாகவில்லை . 1915 ஆம் ஆண்டு டெட்ராய்ட் நகரில் வெள்ளை நிறத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது . 1923 ஆம் ஆண்டு மிசிசிபி நெடுஞ்சாலைத்துறை , சாலை அறிவிப்பு பலகைகளை அடுத்துவரும் சாலைகளுக்கேற்ப மாற்றினால் என்ன என்று யோசித்தது . அறிவிப்பு பலகையில் எத்தனை பக்கங்கள் உள்ளதோ அத்தனை வளைவான சாலைகளை பயணி சந்திக்கப்போகிறார் என புரிந்துகொள்ளலாம் . சிவப்பு நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அதன் அலைநீளமே முக்கியக்காரணம் . வட்டவடிவம் ( ரயில்பாதை ), ஆக்டகன் வடிவம் ( இணைப்புச்சாலை ) செவ்வகம் ( முக்கிய அறிவிப்பு ) என புரிந்துகொண்டால் வேகம் குறைத்து பயண சந்தோஷத்தின் உச்சத்தை தொடலாம் .