ஸ்மார்ட் வாட்சுகள், ப்ளுடூ்த் ஸ்பீக்கர்கள் - சந்தைக்குப் புதுசு
சந்தைக்குப் புதுசு ஃபிட்பிட் சார்ஜ் 6 உடலிலுள்ள ரத்தத்தின் ஆக்சிஜன், இசிஜி, தோல் வெப்பம் ஆகியவற்றை சென்சார்கள் மூலம் கண்டுபிடிக்கிறது. கூடவே, ஏராளமான உடற்பயிற்சி நூலகமே உள்ளது. அதை போன் மூலம் அணுகி பயன் பெறலாம். இதில் கூகுள் மேப், கூகுள் வாலட், யூட்யூப் மியூசிக் ஆகிய அம்சங்களும் உண்டு. விலை 139 பவுண்டுகள் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 இந்த வாட்ச் பெரும்பாலும் வெளியில் பரபரப்பாக சுற்றுபவர்களுக்கானது. வாட்சின் பேட்டரி 36 மணி நேரத்திற்கு தாங்குகிறது. பிற ஆப்பிள் வாட்சுகளில் என்ன பார்த்திருப்பீர்களோ அத்தனை விஷயங்களும் அம்சங்களும் அப்படியே இருக்கின்றன. கூடுதலாக மலையேற்றத்திற்கான வரைபடம், காம்பஸ் ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளன. அவை சிறப்பாக இயங்குகின்றன. விலை 799 பவுண்டுகள் ஜப்ரா எலைட் 8 ஆக்டிவ் தூசு, நீர் ஆகிய எதனாலும் பாதிக்கப்படாத பாடல் கேட்க உதவும் இயர்பட்ஸ். உலகிலேயே கடினமான இயர்பட்ஸ் என்று விளம்பரம் செய்கிறார்கள். பேட்டரி எட்டு மணி நேரம் தாங்குகிறது. விலை 179 பவுண்டுகள். போலார் ஹெச்10 இதயத்துடிப்பு, நடக்கும் தப்படி என கணக்கு போடும் ஸ்மார்ட் வாட்சுகள் உலகில் ஏராளம் வ...