இடுகைகள்

பூஞ்சைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூச்சிகள், பூஞ்சை, மரபணுமாற்ற உணவுகள் - எதிர்கால உணவுகள் எப்படியிருக்கும்?

படம்
        cc           எதிர்கால உணவுகள் -2 பூச்சிகள் கொரானா வருவதற்கு காரணமே, கிடைக்கும் அத்தனை விலங்குகளையும் வெட்டி்க்கொன்று தின்பதுதான் என்று ஒரு வகை பிரசாரம் நடக்கிறது. உண்மையோ பொய்யே இன்றே கூட பலரும் பூச்சிகளை வறுத்து மசாலாத் தூவி மொறுக்கென கடித்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் புரத தேவைக்கு பெரும்பாலான மக்கள் பூச்சிகளையே நம்பியிருக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் கிராம புறங்களில் அரிசி மாவோடு ஈசலை வறுத்து சாப்பிடும் உண்டு. சர்க்கரையோடு சேர்த்து சாப்பிட்டால் சிறப்பான உணவு, இனிப்பும் புளிப்புமான சுவையில் அமைந்த உணவு. இப்போது சாக்லெட் சிப்ஸ்களைப் போல் பின்னாளில் பிஸ்கெட்டுகளில் பயன்படுத்த வாய்ப்புள்ளது. பூச்சிகளை அரைத்த மாவு கூட விற்பைனக்கு் வரும் வாய்ப்பு உள்ளது. மரபணு மாற்ற பயிர்கள் இன்றுவரை உலகில் பல நாட்டு அரசுளும் இப்பயிர்களை ஏற்கவில்லை. ஐரோப்பாவில் குறைந்தளவு மரபணு மாற்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இன்று கிடைக்கு்ம சோயாபீன்ஸ்கள் இந்தவகையைச் சேர்ந்தவை. இவற்றை விலங்குகளுக்கு உணவாக போட்டு, கிடைக்கு்ம பால், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் மீது மரபணு மாற்ற பொருள் என்

உணவுத்துறையில் பயன்படும் பூஞ்சைகள்!

படம்
பூஞ்சைகளை அறிவோம்! பூஞ்சைகள் நுண்ணுயிரிகளில் முக்கியமானவை. இவை காளான்களை புரதம் மிக்க உணவாக மாற்றுகின்றன. நேரடியாக இல்லாவிட்டாலும் பிரெட், சீஸ், சோயா சாஸ் ஆகியவற்றை உருவாக்குவதில் முக்கியமான பங்களிப்பை வழங்குகின்றன. பூஞ்சைகள் பல்வேறு உணவுப்பொருட்களை பதப்படுத்துதலில் பயன்படுகின்றன.  பூஞ்சைகளில் நூற்றுக்கும் அதிகமான நச்சு இனங்கள் வட அமெரிக்காவில் காணப்படுகின்றன. இறைச்சிக்கு மாற்றான உணவுப்பொருகளில் பூஞ்சைகள் பயன்படுகின்றன. விஷமுள்ளவை, விஷமற்றவை என்பதில் பெரிய வேறுபாடுகள் கிடையாது. கவனமாக காளான் குடைகளை பார்த்தால் மட்டுமே அறிய முடியும். இதில் உருவாகும் நச்சை மைக்கோடாக்சின் என்கின்றனர். மைக்கோடாக்சின் என்பது பொதுப்பெயர்தான். காளான்களில் மட்டுமே உருவாகும் நச்சை அமாடாக்சின் என்கிறார்கள். வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளில் ஆஸ்பெர்கில்லஸ் பேவஸ் எனும் பூஞ்சை வளருகிறது. இதனை கவனிக்காமல் விலங்குகளோ மனிதர்களோ சாப்பிட்டு விட்டால் கல்லீரல் கெட்டு இறப்பு நேரும். மனிதர்களுக்கு கல்லீரல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு உள்ளது. நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்

சாக்ஸ் நாற்றம் என்ன செய்யும்?

படம்
ஏன்? எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி சாக்ஸ் நாற்றத்தை வெறுக்கிறேன். ஆனால் அதன் வாசத்தை மனம் விரும்புவது போல தோன்றுகிறதே? பொதுவாகவே நாம் வாசனை விரும்பிகள். பாரதி மெஸ்ஸில் பொரியல், கூட்டு, சாம்பாரில் முருங்கை வாசனை என வந்தால்தான் பலரும் இவ்வளவு பசி இருக்கிறதா? என மூக்கைப் பிடிக்க சாப்பிடுகின்றனர். வீட்டில் பருப்பில் நெய்யை ஊற்றி சாப்பிடுவதும் இதற்குத்தான். சாக்ஸ் விஷயம் இதில் மாறுபட்டாலும், அது நம் உடலில் வரும் வியர்வை என்பதால் அதனை நாம் விரும்புவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் பூஞ்சை ஆபத்து உள்ளது என்பதால் வாரத்திற்கு ஒருமுறையேனும் வாஷிங் மெஷினில் மூக்கை மூடிக்கொண்டு போட்டு துவைத்து விடுங்கள். சீனாவில் இதுபோல ஒருவர் நாற்றமடித்த சாக்ஸ்களை வாசனை நுகர்ந்து நுரையீரலில் நோய்த்தொற்று வந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்திருக்கிறார். எனவே, கவனம் ப்ரோ. படம், தகவல்: பிபிசி