இடுகைகள்

அசுரகுலம் - சதுரங்கப்பலகை கொலைகாரர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அசுரகுலம் - சதுரங்க பலகை கொலைகாரர்!

படம்
கொலையுதிர் சாலை குறிப்பிட்டு நாட்டு மக்கள் முட்டாள்கள், சைக்கோ கொலைகார ர்கள் என முத்திரை குத்த முடியாது. குறிப்பிட்ட சூழல், மனநிலை சிக்கல் என பலவும் ஒருவரின் வாழ்வை மாற்றுகிறது. செய்தியை மட்டுமே இங்கே சொல்லுகிறோம். தீர்ப்பு கூறுவது நோக்கமல்ல. சதுரங்க கொலைகாரர் ரஷ்யாவில் பிறந்த வேறுபட்ட குணாதிய கொலைகாரர், அலெக்ஸாண்டர் பிச்சுஸ்கின். ஒரே லட்சியம், ஆம் கல்வெட்டில் பொறித்துகொள்ள வேண்டியது. சதுரங்க கட்டங்கள் கறுப்பும் வெள்ளையுமாக இருக்கிறதல்லவா? அத்தனை எண்ணிக்கையில் கொலை செய்ய வேண்டும். பெரிதாக ஸ்கெட்ச் போட்டு பிளான் செய்யவில்லை. சிம்பிளாக குடிகாரர்களைத் தேர்ந்தெடுத்தார். கால் தரையில் பாவாத மொடாக் குடிகாரர்களை அடுத்து துவைப்பது முதல் பணி. அடுத்து அவர்களை பீட்டர் ஹெய்னாக மாறி தூக்கி வீசுவது. மனவாடு வில்லன்கள் போல ஆகாயமார்க்கமாக சென்று பாதாள சாக்கடை குழிகளில் விழுவார்கள். உடனே மின்னல் வேகத்தில் அங்கு சென்று பேண்ட் பாக்கெட்டிலிருந்து மூகமுடி நரேன் போல சுத்தி எடுத்து கழுத்தை கொத்தி எடுத்து கொல்வது அலெக்ஸின் பாணி. செஸ் போர்டை சிம்பாலிக்காக தொங்கவிட்டு ஆட்களை கொல்ல கொல்ல அதனை கிரா