இடுகைகள்

இன்ஸ்டாகிராம் சந்தை! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இன்ஸ்டாகிராம் செல்வாக்கு மார்க்கெட்டை உயர்த்துமா?

படம்
இன்ஸ்டாகிராம் சந்தை! –- ச.அன்பரசு சுருக் கமெண்ட் நறுக் போட்டோ பதிவிட்டு கருத்து முதல் களேபரத்திற்கு புகழ்பெற்ற ஃபேஸ்புக், டுவிட்டரை விட போட்டோக்களை மட்டுமே பதிவிட்டு விடும் எளிமையால் இன்ஸ்டாகிராம் பெருமளவு மக்களை கவர்ந்துவிட்டது. மக்கள் ஒன்றுகூடுமிடத்தில் சந்தை இல்லாமலா? டிவியில் பார்த்து பொருட்கள் வாங்கும் பழக்கமெல்லாம் மலையேறிவிட்டது. இன்ஸ்டாகிராமில் ஃபேர்னெஸ் க்ரீம் முதல் செக்கு எண்ணெய் வரை பயன்படுத்தி பார்த்து புகைப்பட பதிவு விழுந்தவுடன் குறிப்பிட்ட பொருட்களை புலிப்பாய்ச்சலில் பாய்ந்து வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இணையத்தின் வழியே பொருட்களை வாங்குபவர்களுக்கு சமூகவலைதளங்களின் பரிந்துரையே முதல் சாய்ஸ் என்று கூறியவர்களின் அளவு 76%. இன்ஸ்டாகிராமோடு போட்டியிட்டதில் டுவிட்டர் கூட சோர்ந்துவிடக்காரணம் கருத்து குத்தல் இல்லாமல் போட்டோவை பதிவிட்டு டக்கென பார்ப்பவர்களுக்கு சேதி சொல்லிவிடும் எளிமைதான் என இ-மார்க்கெட்டர் ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது. 25 நாடுகளில் செய்த ஆய்வில் இந்தியாவுக்கு அடுத்த இந்தோனேஷியா நாட்டிலுள்ள 83 சதவிகித மக்கள், சமூகவல