இடுகைகள்

நரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நூற்றாண்டுகளாக காதலியைக் கரம் பிடிக்க காத்திருக்கும் காதலன்! மூன்ஷைன் அண்ட் வேலன்டைன்

படம்
            மூன்ஷைன் அண்ட் வேலன்டைன் சீன டிவி தொடர் யூட்யூப் பூமியில் வாழும் நரிக்குலம் வடக்கு , தெற்காக பிரிந்து தனியாக வாழ்கிறது . இதில் தெற்கில் வாழ்பவர்கள் வடக்கில் இருப்பவர்களை விட சிறப்பாக மனிதர்களுடன் இணக்கமாக வாழ்கிறார்கள் . வடக்கில் வாழ்பவர்கள் மனிதர்களுடன் அதிக இணக்கமின்றி தனியாக இருக்கிறார்கள் . ஒட்டுமொத்த குலத்திற்கும் தலைவராக சதிகள் நடக்கின்றன . இதில் ஜிங்டிங் என்ற பார்வையில்லாத தெற்கு குல தலைவரின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்பதுதான் கதை . கதையை மேலே சொன்னபடியும் சொல்லலாம் . பல நூறாண்டுகளாக தொடரும் காதல் உறவை எப்படி நவீனத்திலும் காப்பாற்றி மண உறவில் முடிக்கிறார்கள் இரண்டு காதலர்கள் என்றும் கூறலாம் . தெற்கு நரிக்குலத் தலைவராக இருப்பவர் ஹெலன் ஷி . இவரின் அதிகாரப்பூர்வ பெயர் , ஜிங்டிங் . இவருக்கும் இவரது தந்தைக்கும் திருமண விஷயத்தில் நடக்கும் பிரச்னையால் குலமே இரண்டாகிறது . ஹெலன் அப்பாவை அதிகம் விமர்சிக்காமல் அமைதியாக தனது வா்ழ்க்கையை நடத்துகிறார் . இவர் நரிக்குலத்திற்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவில் பிறந்தவர் . இதனால் என

குடும்பத்தில் ஒன்றாக இணையுங்க ப்ரோ! ஓவர் தி ஹெட்ஜ் 2006

படம்
                ஓவர் தி ஹெட்ஜ் அனிமேஷன்    Director: Tim Johnson, Karey Kirkpatrick Produced by: Bonnie Arnold Screenplay by: Len Blum, Lorne Cameron, David Hoselton, Karey Kirkpatrick     போக்கிரியாக பிறரது உணவைத் திருடி தின்று வாழும் நரி , தனக்கு ஏற்பட்ட வாழ்வா சாவா சூழ்நிலையில் உயிர்பிழைக்க செய்யும் பிரயத்தனங்களே கதை . கதையின் லைன் சின்னதுதான் . நரி கரடிக்கு மக்கள் கொடுத்துள்ள தீனியை திருடுகிறது . போதும்கிற எண்ணம் நரிக்கு வராமல் போக அத்தனை தீனியையும் திருடுகிறது . அதனை கொண்டுபோகும் போது ஏற்பட்ட லாஜிஸ்டிக் பிரச்னையால் கரடி உறக்கம் கலைந்து விழித்துவிட அப்புறம் என்ன சண்டைதான் . இதில் கொள்ளையிட்ட தீனி அனைத்தும் சாலையில் விழுந்து வாகனங்களில் அரைபட்டு நாசமாகிறது . கோபமாகும் கரடி பௌர்ணமி வரை டைம் கொடுத்து ஸ்னாக்ஸை வாங்கித் தரச்சொல்லுகிறது .   அதற்காக நரி அப்பாவி குடும்பம் ஒன்றை பயன்படுத்திக்கொள்கிறது . இதனால் அந்த குடும்பத்திற்கு நேரும் பாதிப்புகள் என்னென்ன என்பதை காமெடி , நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார்கள் . தனியாக இருப்பதை விட குடும்பமாக ஒன்றாக சேர