இடுகைகள்

அறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுமாரான காபி, வேகாத சமோசா! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  20.2.2022 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? தேர்தல் வேலைகள் முடிவுக்கு வந்திருக்கும். நாங்கள் வேலை செய்யும் கட்டிடத்திற்குள் தேர்தல் பணிகள் நடைபெற்றது. உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல்.மக்கள் குறைவாகவே வந்தனர். அன்று லீவ் என்பதால் பலரும் பிரியத்தோடு கோழி வாங்கி சுத்தம் செய்து கறிக்குழம்பு வைத்து சாப்பிட்டிருப்பார்கள். அனுபவிப்பதுதான் வாழ்க்கை. வாக்கு சதவீதம் குறைந்து போய்விட்டது. வாக்களிக்கும் ஆர்வம் இயல்பாகவே காலப்போக்கில் குறைந்து வருகிறது. வாக்களிப்பதால் என்ன பயன் என மக்கள் நினைக்கிறார்கள்.  நான் இன்று சக்தி சாரின் அறைக்குச் சென்றேன். அங்கு இருவரும் சேர்ந்து படம் பார்த்தோம். கேம்பஸ் ஹோட்டலுக்குச் சென்று புட்டு, கடலைக்கறி, ஆப்பம் சாப்பிட்டோம். கேரள முஸ்லீம் ஒருவர் நடத்துகிறார். சைவ, அசைவம் இரண்டுமே நன்றாக இருக்கும் போல. சக்திசார் பணம் கொடுத்தார். பதிலுக்கு நான் மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் கால்கிலோ வாங்கிக் கொடுத்துவிட்டேன். கிளம்பும்போது பிக் பஜார்சென்றோம். அங்கு சென்று காப்பி மட்டும் நான் குடித்தேன். அவர் சாப்பிட்ட சமோசாவில் உருளைக்கிழங்கு வேகவில்லை. காபி சுமார்தான

அறையில் அதிகரிக்கும் தூக்கம்; அலுவலகத்தில் கூடும் வேலை! கடிதங்கள்- கதிரவன்

படம்
  20.1.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? இன்று வெகுநாட்களுக்குப் பிறகு ஓட்ஸ் இன்ஸ்டன்ட் உணவு பாக்கெட்டை சமைத்தேன். இதற்கு முன்னர் இதை மதிய உணவாக கூட சாப்பிட்டு இருக்கிறேன். ஒவ்வாமை வந்தபிறகு இப்போதுதான் சாப்பிடுகிறேன். குவாக்கர் ஓட்ஸ் வாங்கி அதில் தக்காளி மிக்ஸை சேர்த்து சமைத்தேன். அதுதான் இரவு உணவு. தெருக்களே பள்ளிக்கூடம் என்ற நூலை படித்து வருகிறேன். இதன் மூல நூலை குக்கூவில் வேலை செய்தபோது தமிழில் மொழிபெயர்த்தேன். அப்போது சரியாக இருப்பதாக தோன்றியது. உடனே  அதை  ஃப்ரீதமிழ் இபுக்ஸ் தளத்திற்கு வெளியிட திரு. சீனிவாசன் அவர்களுக்கு அனுப்பினேன்.  அலுவலக வேலைகளை ஓரளவுக்கு முடித்துவிட்டேன். எனவே, சொந்த வேலைகளையும் அறிவியல் இழ்களையும் படித்துக்கொண்டு இருக்கிறேன். அறையில் அமர்ந்தால் தூக்கம் வருகிறது. ஆபீஸ் என்றால் வேலை செய்ய நன்றாக இருக்கிறது.  ஷோபாடே எழுதிய நூலை 200 பக்கங்கள் படித்துவிட்டேன். அப்போதும் நூலின் கருத்துக்களை அதிகம் யோசிக்கமுடியவில்லை. இதற்கு என் சோம்பலே காரணம். வினோத் அண்ணாவுக்கு எழுதிய கடிதங்களை கடித நூலில் சேர்க்க வேண்டும். ஆபீஸ் தொடங்குவதற்குள் சில நூல்கள

பிரெஞ்சுக்கலைஞர் கேட்ட கடனும், மஞ்சள் நிற அறையும்! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  மதிப்பிற்குரிய வினோத் அவர்களுக்கு, வணக்கம்.  நலமா? நேற்று தாங்கள் அறிமுகப்படுத்திய ஆப்த தோழர் ஆலிவர் போன் செய்து பேசினார். செஞ்சி கோட்டையில் எடுத்த புகைப்படத்திற்கு சொன்னபடி 200 ரூபாயும் கூடுதலாக அவருக்காக நூறு சேர்த்து 300 அனுப்பினேன். அவர் சொன்னபடி புகைப்படத்தை அனுப்பியே வைக்கவில்லை. மேலும் அழைத்தாலும் போனை எடுக்கவில்லை. பிக்சல் குறைந்த புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியதோடு சரி.  பிறகு ஒரு நாள் இரவில் போன் செய்தார். அவரது பயோடேட்டாவை ஆங்கிலத்தில் எழுதி தரச் சொன்னார். அதற்கு நிறைய இலக்கண அறிவோடு சமகால வார்த்தைகளையும் பயன்படுத்தவேண்டும். எனவே, என்னால் ஆகாது என்று சொல்லிவிட்டேன். பிறகும் விடாமல் பேசியவர் திருவண்ணாமலைக்கு அடுத்து எப்போது வருவாய் என இழுத்து இழுத்தி பேசியவர். 500 ரூபாய் பணம் கேட்டார். நான் உடனே இல்லை என்று சொல்லிவிட்டேன்.  முன்னர் நீங்கள் சொன்னபடி, திருவண்ணாமலை வந்துவிட்டு உடனே சென்னைக்கு திரும்புவதுதான் சரியான திட்டமாக இருக்க முடியும். தினசரி மதுவைக் குடிப்பது, நமது ஊரைப் பொறுத்தவரை குடிநோயை உருவாக்கும் என நம்புகிறேன். ஆலிவர் அண்ணா அதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்.