தொடக்க கல்வியில் தடுமாறுகிறது தமிழ்நாடு- ஒன்றிய அரசு தகவல்

கல்வியில் பின்தங்கிய மாநிலமாகிறது தமிழ்நாடு- ஒன்றிய அரசு ஆய்வுத் தகவல் ஒன்றிய அரசு அண்மையில் செய்த ஆய்வில் தமிழ்நாட்டில் உள்ள எழுபது சதவீத மாநிலங்களில் கல்வியில் தரம் சரியில்லை. மாணவ, மாணவிகள் பின்தங்கியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஒன்றிய அரசு மக்களவையில் சமர்ப்பித்துள்ளது. பின்தங்கிய மாவட்டங்களில் கோவை, மதுரை, திருவள்ளூர், வேலூர் ஆகியவை உள்ளடங்கியுள்ளது. கல்வியை கற்பதில் குறிப்பிட்ட அளவு பாதிப்பு இருக்கலாம். அதை சரியாக சுட்டிக்காட்டாமல் வெறும் எண்களை மட்டுமே வெளியிடுவதில் அர்த்தமில்லை என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. ஒன்றிய அரசு எப்படி இந்த ஆய்வை செய்துள்ளது? கிராஸ் என்ரோல்மெண்ட் ரேஷியோ எனும் முறையில் புதிய ஆய்வுமுறை செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மாணவர்கள், பள்ளிகளில் சேர்ந்துள்ள சதவீதத்தை வைத்து இந்த ஆய்வறிக்கையை ஆகஸ்ட் 9 அன்று கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இதன்படி தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனை கல்வி வல்லுநர்கள் சிலர் எதிர்த்துள்ளனர். பள்ளி க